பணிப்பெண்கள் நால்வர், சதியின் அறையில் இருந்த தாமரை மலர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்…
அப்பொழுது அவர்களில் ஒருத்தி, “சிவனின் நாமம் இந்த மலர்களில் இருக்கிறது… இதை நாம் தூர ஏறிவது என் மனதிற்கு சரியாய் படவில்லை… இது மகாதேவரை நாம் அவமதிப்பதை போல அல்லவா ஆகிவிடும்…” என கூற,
மற்றொருத்தியோ, “நீ சொல்வதும் சரிதான்.. எனினும் நான் சேவகியர்கள்… நம் அரசன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவது தானே சரி… அதை மீறி நடக்க முடியுமா நம்மால்?...” என கூற,
அடுத்துள்ளவளோ, “ஆம்… அரசர் பிரஜாபதியின் கோபத்தினை பற்றி நான் அனைவருமே அறிவோம்… அவரின் அருமை மகளாகியே சதி தேவிக்கே அவர் தண்டனை அளித்திட்டார்… எனில் நாமெல்லாம் எம்மாத்திரம்?...” என சொல்லிக்கொண்டே மலர்களை எடுத்து வாசலுக்கு வர,
“இந்த மலர்களை என்னிடம் தாருங்களேன்….” என்ற குரல் கேட்டு திகைத்து நின்றார்கள் அவர்கள் அனைவரும்…
“யார் நீங்கள்?... உங்களை நாங்கள் இங்கே இதற்கு முன் பார்த்ததே இல்லையே… உங்களிடம் எப்படி மலர்களை தருவது?...” என கேட்டிட,
மலர்களில் இருந்த சிவ என்னும் நாமத்தினை பார்த்தவனின் முகம் சட்டென மலர்ந்து போக,
“இந்த மலர்கள் வீணாக்காமல் என்னிடம் தாருங்கள் என தயை கூர்ந்து தான் கேட்கிறேன்…” என்றான் அவனும்….
அப்போது சதியும் அவளது சகோதரிகளும் வர,
“இங்கே என்ன நடக்கிறது?...” என்றாள் சதி…
மகரிஷி காசியப்பரும், அந்த நேரம் அங்கே வருகை தர, தூரத்தில் நின்றபடி நடப்பவைகளை பார்த்துக்கொண்டிருந்தார் புன்சிரிப்புடன்…
“சதி தேவி… இவர் இந்த தாமரை மலர்களை எல்லாம் தன்னிடம் தர சொல்லி எங்களோடு விவாதம் செய்கிறார்…” என்றாள் சேவகி ஒருத்தி…
சதி என்ற பெயரைக் கேட்டதும், மெய் சிலிர்த்துப்போன அவன், அவளின் பாதத்தில் விழுந்து வணங்க, அவள் பதறியவளாய் அவனை எழுப்பினாள்…
“என்னை விடவும் தாங்கள் மூத்தவராய் தெரிகின்றீர்… தாங்கள் போய் இப்படி?... தயவு செய்து எழுந்திருங்கள்…….”
“தேவி… தங்களை கண்டது பெரும் பாக்கியம் தேவி… இந்த தாமரை மலர்களை என்னிடத்தில் தர சொல்லுங்களேன்…”
அவன் அவளிடம் கெஞ்ச,
“அனைத்து மலர்களையும் வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்…” என்றாள் அவள்…
“எனக்கு தாமரை மலர்கள் என்றால் மிகவும் பிரியம்… இதை வீணாக்காமல் என்னிடத்தில் தந்தால் நான் வைத்துக்கொள்வேனே… அதுவும் இன்றி, இவை வீணாவதை பார்க்க என்னால் இயலாது…”
அவன் தவிப்புடன் கூற,
“இந்த மலர்களை இவரிடம் கொடுங்கள்…” என்றாள் சதியும்… அவனும் புன்னகையுடன் வாங்கிக்கொண்டு செல்ல, சட்டென புன்னகையுடன் திரும்பியவளின் கண்கள், மேலே மகரிஷி பிருகு, பிரசுதி, மற்றும் பிரஜாபதி இருக்க, அவளை உறுத்துப்பார்த்துக்கொண்டிருந்தார் பிரஜாபதி…
தொடரும்...!
{kunena_discuss:1001}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.