சுமார் இரண்டு ஏக்கர் கொண்ட அந்தக் கோவிலில் ஒரு நுழைவாயில் மட்டுமே இருந்தது.. கிழக்கை நோக்கி தேக்கு மரத்திலாலான கதவுகள் இரு அன்னப்பறவையின் சிலைகளுக்கு நடுவில் அமைந்திருந்தது.. சுற்று மதிலின் மேல் சுற்றிலும் அன்னப்பறவையின் சிலைகளே.. (தஞ்சை பெரிய கோவிலில் மதில் சுவற்றின் மேல் நந்தியின் சிலைகள் இருப்பது போல்..) கோவில் விமானத்தை போலவே பிரமாண்டமாய் அமைந்திருந்த து நுழைவாயிலின் மேல் பகுதி..
நுழைவாயிலிருந்து நூறடிகளுக்குள் ஒரு குளம்.. அதன் நடுவில் அமைந்திருந்த சிறு மண்டபத்தில் ஒரு பெரிய அன்னப்பறவையின் சிலை..அதன் அலகில் சிறு தாமரை மலர்.. பறவையோ கருவறையை நோக்கிய வண்ணம்.. ஆனால் இந்த சிலை முற்று பெறாமல் இருந்தது..
அடுத்து அமைந்திருந்தது கோவிலின் வாகனம்.. அந்தோ பரிதாபம் கருவறையில் எந்த சிலையும் இல்லாமல் கட்டப்பட்டிருந்தது.. கும்மிருட்டு மட்டுமே அதனுள் சுற்றிக் கொண்டிருந்தது..
கோவில் வாகனத்தின் வலப்புறமாக சிறியதொரு வாகனம் ஐந்து கலசங்களை கொண்டு.. அதன் கருவறையில் எழுத்தின் நாயகியும் இசையின் அரசியும் ப்ரம்மரின் பத்தினியுமான சரஸ்வதி தேவியின் வீணை மீட்கும் சிலை..
இவ்விரண்டு வாகனங்களுக்கு பின்னால் பிரம்மாண்டமான ஒரு சிலை மண்டபம்.. ஆயிரக்கணக்கில் சிலைகளை தூண்களிலும் சுவர்களிலும் வடித்திருந்தனர்.. அங்கு தான் இப்பொழுது நம் தியாவும் மயாவும் இருக்கின்றனர்..
"குட்.. நல்லா ஸ்கெட்ச் பண்ணிருக்க மயா..",என்றவள்,"எழில் வந்துட்டானான்னு போய் பார்க்கலாம்",என்றபடி நடக்கத்தொடங்கினாள்..
"தியா அங்க பாரு..",என்று கத்தினாள் மயா அந்தரத்தில் எழில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு..தியா ஒரு நொடி பயந்த போதும் என்னவென்று காண அந்த இடம் நோக்கி சிலையாகி விட்ட மாயாவை இழுத்துக் கொண்டு சென்றாள்..
மயா கத்திய கத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.. தொங்கிக்கொண்டிருந்தவனும் அவள் கத்திய கத்தில் பயந்து தான் போனான்..
"ஏன் மயா லூஸு இப்படி கத்தற..??",என்று பதிலுக்கு எலி மேலிருந்து கத்தினான்..
"பக்கி.. நீ தொங்கறத பார்த்து பயந்து போயி கத்துன்னா நீ என்னையே லூஸுங்கரையா..??" , எகிறினாள் பதிலுக்கு மயா..
"பின்ன என்னத்த சொல்றது.. நான் வாகனத்துல இருக்கற சாளரத்துக்கு போக கயிறை பிடிச்சு ஏறினேன்",என்றான் விளக்கமாக..
அவளை முறைத்து கொண்டிருந்தவர்களை பார்த்து அசடு சிரிப்பை உதிர்த்தவள் அவர்களை நோக்கி,"இங்கென்ன வேடிக்கையா நடக்குது போயி வேலையை பாருங்க", என்றாள் சற்று அதட்டலாக..
மயாவை நோக்கி தீப் பார்வை வீசிய வர்க்கர்ஸ் அவளை திட்டிய படியே சென்றனர் தங்களின் வேலையை செய்ய..
இந்த கூத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சுஜன் சிரித்துக் கொண்டே அவர்கள் அருகில் வந்து,"வாலு பசங்களா.. உங்க சேட்டையை நிறுத்துங்க.. ஆளுங்க வாட்டர்ல கிளீன் பண்ண வந்திருக்காங்க..அதை முதலில் கவனீங்க.."
சுற்றுமதில்களை முதலில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர்.. கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த சுற்றுமதில் சிறிதளவும் சிதிலமடையாமல் காட்சி தந்தது..இன்னுமொரு அதிசயம் என்னவென்றால் அந்த சுற்றுமதில் முழுதும் சிற்ப வேலைப்பாடுகள்..(பொதுவாக எந்த ஆலயத்திலும் சுற்றுமதில்களில் சிற்பங்களை செதுக்கமாட்டார்கள்..)
"வாவ்.. சூப்பரா இருக்குல்ல இந்த கோவில்.. சுற்றுமதில்களில் கூட சிலை செதுக்கி இருக்காங்கபாருங்களேன்.. ஆனால் கருவறையில் ஏன் சாமி சிலையை காணோம்..??",என்று கேட்டாள் மயா ..
"தெரியலை மயா.. இங்க இருக்கற அன்னப்பறவை சிலையை வெச்சு பார்க்கும் பொழுது இந்த கோவில் எனக்கு என்னவோ பிரம்மாவிற்காக எழுப்பப்பட்டதாக இருக்கலாம்னு நினைக்கறேன்..",என்ற எழில்,"உனக்கு இதை பத்தி ஏதாவது ஐடியா இருக்கா தியா...??"
"இந்த கோவில் கருவறையில் ஏன் சிலை வைக்கவில்லைனு தெரியல..ஆனால் புராணத்துல திருமாலுக்கும், பிரம்மாவிற்கும் இடையில் தங்களில் யார் பெரியவர் என்று கருத்து வேறுபாடு வந்துச்சாம்.. அதை தீர்க்க இருவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டுருக்காங்க... சிவனும் லிங்கோத்பவர் அப்படிங்கற வடிவத்துல காட்சியளித்து, இருவரில் ஒருவரை தமது அடியையும், மற்றோருவரை தமது முடியையும் கண்டு வருமாறு போட்டி வைத்திருக்கிறார்.. திருமால் வராக அவதாரம் எடுத்து லிங்கோத்பவரின் அடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், சிவனின் அடியை காண இயலாத திருமால், சிவனிடமே திரும்பி வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். ஆனால் அன்னப் பறவை வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்ற பிரம்ம தேவர் வழியிலேயே சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவிடம், தான் சிவபெருமானின் முடியை கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூற சொல்லியிருக்கிறார்.. பிரம்மாவின் சொல்லுக்கு அடிபணிந்த தாழம்பூவும் சிவனிடத்தில் சாட்சி சொல்லியது..இவர்கள் பொய் உரைக்கின்றனர் என்று உணர்ந்து கொண்ட சிவ பெருமான்,"மூலவராக பிரும்மாவை வைத்து இனி எந்த கோவிலும் கட்டப்படாது..",என்று சாபமிட்டார்.. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லைனு இருக்கு... "