(Reading time: 8 - 15 minutes)

சோ பிளான் பண்ணிதான் அவரை ஹோட்பிட்டலில் அட்மிட் செய்து இருக்காங்க”.

“மேய்பீ இருக்கலாம். ஆனா அதும் டவுட் தான் ஹோஸ்பிட்டல் ல இவருக்கு ஆக்சிடண்ட் அண்ட் ல்சோ அட்டாக் பை சாம் பெர்சொன்ஸ்ன்னு தான் இருக்கு அண்ட் இது என் கோ போலீஸ் சொன்னது. அவரை இந்த கேஸை ஹேன்டல் பண்ண விடல வேற!!”

இதை கேட்ட மற்ற இருவரும் அமைதியாக இருக்க, தீபன் அவர்கள் இருவரும் ஏதோ சிந்தனையில் இருப்பதை பார்த்து “ஹலோ என்ன ரெண்டு பேருமே கண்ணை திறந்து வைத்து கனவு காணுறிங்க” என கேட்டான்.

“ஒன்னும் இல்ல தீபன்..” – இருவரும் ஒரே நேரத்தில் சொல்லி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சரி நீ சொன்ன அந்த வீட்டின் ஓல்ட் ஓனர் கிடைச்சாரா??”

“ம்ம்ம் இல்ல.. பட் நாளைக்குள்ள கண்டிப்பா கிடைத்துவிடுவார்” – மகேன்.

“இது சுந்தரம் வாட்ச்மேன் இறந்தபோது ஓல்ட் ஓனர்கிட்ட விசாரித்து இருக்காங்க. அதுல அவரின் வீட்டின் அட்ரஸ் இருக்கு நாளைக்கு அங்கே போயி பாருங்க” என்று சொல்லி அவர்களிடம் ஒரு காகித்ததை நீட்டினான்.

“ஓகே. அப்போ நாங்க நாளைக்கு அங்கே தேடறோம்.” – ரூபன்

“இப்ஃ யூ நோவ் எனி இன்போர்மெஷன் அபோட் திஸ் லெட் மீ நோ.”

“அந்த குழந்தை டவுட்தான்.”

“எனக்கும் இருக்கு பட் இவனுக்கு குழந்தை கடத்தல் கும்பலோன்னு டவுட்..”

“இந்த டவுட் எனக்கு வரவே இல்ல. நாளைக்கு இந்த ஓனரை போய் பார்த்தால் தான் மேல் விபரம் தெரியும். முக்கியமா யார் ஆதி குடும்பத்துடன் வீட்டை விட்டு போய்ட்டார்னு சொன்னதுன்னு தெரியும்”

“ஓகே.. யார் சொன்னதுன்னு தெரிந்த உடனே எனக்கு சொல்லு.. நான் அந்த ஆள் இருக்கும் இடத்துக்கு முதலில் சென்று உங்களுக்கு வெயிட் பண்ணறேன். நீங்க அந்த வீட்டு ஓனரையும்  உங்க கூட அழைத்து வாங்க. ரெண்டு பேரையும் ஒண்ணா வைத்து கேள்வி கேட்டால்தான் நமக்கு தேவையான பதில் கிடைக்கும்” என தீபன் சொல்ல அவர்களுக்கும் அதுவே சரி என பட்டது.

தீபன் சென்ற பின்னர் ரூபன் ஒரு தாளை கையில் வைத்து ஏதோ கிறுக்கிக் கொண்டு இருந்தான். மகேன் அவன் என்ன எழுதுகிறான் என எட்டி பார்க்கையில் அதில் ஆதி அம்மு குட்டி பெயர் எழுத்து இருக்க, அதற்கு கீழே இன்னும் நிறைய எழுத பட்டு இருந்தது.

“என்னடா பண்ணுற நீ?”

“இந்த மிஸ்ஸிங் கேஸ் உண்மை... ஆனா என் அப்பா ஏன் பேய் பிசாசுன்னு வித்தை காமிக்குறார்ன்னு தெரியல... ஆதி ஹோஸ்பிட்டலயே இருக்கார், அவரின் மனைவியும் குழந்தையும் எங்கே?” அவன் இவ்வாறு கேட்கவும்

“டேய் அவங்களை தான் கொன்னுட்டாங்களே” என மகேன் உடனடியாக சொன்னான்.

“அது உனக்கு எப்படி தெரியும்” சந்தேகத்துடன் கேட்க

“நேற்று வினிதா வீட்டில் அந்த புவி பேய் சொன்னதை நீயும் தானே கேட்ட?”

“அப்பறம் ஏன் இவ்வளவு நாளா அது போலீஸ் ஸ்டேஷன்ல போய் என்னை கொன்னுட்டாங்கன்னு கம்பளைன்ட் குடுக்கவில்லை?” என்று ரூபன் கேட்க மகேன் பதில் சொல்லமுடியாமல் முழித்தான்!!

அவன் முழிப்பதை கண்டவன், “ஏன்டா நீயும் அவரு மாதிரி பொய் சொல்லிட்டு திரியுற... ஒழுங்கா உருப்படியான வேலையை பாரு” என சொல்லி விட்டு உறங்க சென்றான்.

மகேனோ “இவனுக்கு பைத்தியமா இல்ல எனக்கு பைத்தியமா?” என சத்தமாக கேட்டு தன்னை நொந்தபடி வினிதாவை தேடி சென்றான்.மண்டபத்தின் வாசலில் சித்ராவும் அனிதாவும் கவலையுடன் அமர்ந்து இருக்க, அவர்களிடம் சற்று நேரம் பேசிவிட்டு சென்றான்.

காலையில் தீபன் அழைத்து அவனுக்கு முக்கியமான வேலை இருப்பதால் அவனால் வரமுடியாது என சொல்ல அவர்கள் அன்று மதியத்துக்கு மேல் செல்வதாக முடிவு எடுத்தனர்.

கேன் வீடு

இதற்கு இடையில் மகேன் குட்டிம்மாவை தேடி அவனின் வீட்டுக்கு சென்றான். மகேன் அவனின் வீட்டை நெருங்கையில் வாசல் கதவு திறந்து இருந்தது. பைக்கை நிறுத்தியவன் உள்ளே சென்று குட்டிம்மாவை தேட, வீடே அமைதியாக இருந்தது.

அவள் அங்கு இருப்பதாக எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்க, ஏமாற்றுடன் அவன் அங்கு இருந்து கிளம்பினான். பைக்கை ஸ்டார்ட் செய்கையில் அவனின் பின்னால் யாரோ அமர்வது போல இருக்க திரும்பிப் பார்த்தான். அங்கு யாரும் இல்லாமல் இருக்க அவன்  “குட்டிம்மா நீயா?” என ஓர் எதிர்ப்பார்ப்புடன் கேட்டான். ஆனால் அங்கு எந்த சத்தமுமின்றி அவ்விடம் அமைதியாக இருந்தது. ஏமாற்றதுடன் அங்கிருந்து சென்றான்.

 

தொடரும் நிழல்

Go to episode # 11

Go to episode # 13

{kunena_discuss:753}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.