(Reading time: 6 - 12 minutes)

தொடர்கதை - என்னுடைய டைரிகளில் இருந்து - 10 - அனாமிகா

From my diaries

முன்கதை சுருக்கம்:

குமுதா – விவேக் ஐடி துறையில் வேலை பார்க்கும் தம்பதியினர். இவர்களுக்கு அஸ்வின் எனும் ஒரு மகன் இருக்கிறான்.

தன் அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை, குழப்பங்களை தன் டைரியில் எழுதுவது குமுதாவின் பழக்கம்.

ந்த டைரியை அவள் எழுதும் போது, அவளுடனே நாமும் அதை படித்து அவளையும் அவளின் குடும்பம் பற்றியும் தெரிந்துக் கொள்கிறோ

...
This story is now available on Chillzee KiMo.
...

strong>முன்பு அவளுக்கு பிடித்த அந்த perfume விவேக்கிற்கு பிடிக்காததால் அதை பயன் படுத்துவதை விட்டிருந்தாள் குமுதா.

இப்போது எப்படி அவன் சட்டையில் இந்த வாசனை???

இனி நீங்களும் விவேக் – குமுதா வாழ்க்கையை பற்றி படித்து தெரிந்துக் கொள்ளலாம்.


பொறி!!!! - தீயாய் வேலை செய்யனும் குமுதா...!!!

Friday, 22nd Jan

ன்றைய நாள் முழுவதும் குழப்பத்துடனே சென்றது.

விவேக்கை பற்றி தவறாக நினைக்க கூடாது என மனம் சொன்னாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

poison perfume வாசனை அடித்தாலே முகத்தை சுளிக்கும் விவேக், சட்டை முழுக்க அதே வாசனை அடிக்க காரணம் என்னவாக இருக்கும்???

வேறென்ன....????

எங்கேயோ தோற்று போய் விட்டது போல மனதினுள் வலிக்கிறது

சிவாஜி - கே ஆர் விஜயா ரொமான்ஸை யோசித்த நான் என் கணவரை பற்றி யோசிக்காமல் விட்டு விட்டேனோ???

காலையில் விவேக் எப்போதும் சொல்லும் ‘பை’ சொல்லாமலே சென்றது என்னுள் இருந்த கேள்விகளின் வீரியத்தை அதிகரித்திருக்கிறது.

அவர் மாறி போய் விட்டாரா???

ஒருவேளை நான் நல்ல மனைவி இல்லையோ??? அதனால் தான் விவேக் வேறு பெண்ணை தேடுகிறாரோ???

ஆனால் என்னிடம் மட்டும் பிடிக்காமல் போன அந்த poison அவளிடம் மட்டும் ஏன் பிடிக்கிறது???

ன் மூளை வேலை செய்யும் விதத்தில் எனக்கே கோபமாக தான் வருகிறது!

ஒரு சுரிதார் வாங்கி தந்தார், அவருக்கு போன் செய்தால் ஒரு பெண் எடுத்து பேசினாள், சட்டையில் வேறு perfumeன் வாசனை!

இந்த மூன்றும் போதுமா என் கணவரை பற்றி தவறாக நினைக்க????

ப்ச் சரியில்லை!

அவரிடமே கேட்டு விட்டால் என்ன?

கேட்கலாமா??? ஆனால் தவறு செய்தவர் என்றால் ஆம் என்று ஏற்றுக்கொள்ள போவதில்லை!

தவறு செய்யவில்லை என்றால் நான் அவர் முன் ரொம்ப சின்னவளாகி போவேன்!

என்ன தான் செய்வது? எப்படி இந்த் குழப்பத்தை தீர்ப்பது?

யாரிடாமாவது பேசா விட்டால் தலை வெடித்து விடும் போலிருந்தது.

அம்மாவிடம் பேச மனம் வரவில்லை. ஏதேனும் உளறி வைத்தால் அவ்வளவு தான், விவேக்கை திட்டுகிறார்களோ இல்லையோ, நான் சிறு வயது முதல் செய்த தவறுகளை பட்டியலிட்டு என் மேல் தான் தவறு இருக்க முடியும் என்று சொல்வார்கள்.

அத்தையிடம்?

ஹுஹும்...

சரி வராது!

ரேகா கண்ணில் பட,

“காபி குடிக்க போகலாமா ரேகா??” என்று அவளை அழைத்தேன்.

“ஷுயர், வா போகலாம்”

கேண்டினில் வாங்கி குடித்த காபி சூடாக, கசப்பாக உள்ளே இறங்கியது!

ஏதோ விதத்தில் அந்த ஸ்ட்ராங் காபி மிகுந்த தெம்பை கொடுத்தது!

சில சமயங்களில் கசப்பு தான் நம் மண்டையில் ஒன்று virtualஆக போட்டு நம்மை தெளிவாக்குகின்றன!!!!

“உன் கணவர் கிட்ட பேசினீயா குமுதா? அந்த சுரிதார் பத்தி கேட்டீயா?”

ரேகாவின் குரலில் இருந்த அதிகபடி ஆர்வம், என்னை சுதாரிக்க வைத்தது.

“பேசினேன்ப்பா! ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா எதுவுமில்லை. அவங்க ஆபிஸ் retail ibuல ஏதோ சேல் வைத்து சுரிதார், சாரின்னு வித்தாங்களாம், அதில இருந்து வாங்கினேன்னு சொன்னார்”

{/f90filter}

>பொய் சொல்வது இத்தனை சுலபம் என்று இன்றுவரை நான் உணர்ந்ததில்லை.

ஒரே கணத்தில் நான் அவிழ்த்து விட்ட அந்த ‘பொய்’ கன்னாபின்னாவென்று குழம்பி இருந்த என் மனதிற்கு கூடுதல் தெம்பை கொடுத்தது. கூடவே ரேகாவின் முகமும் ‘அவ்வளவு தானா’ என்ற விதத்தில் மாற்றம் கொள்ள, எனக்கு ரொம்பவே திருப்தியாக இருந்தது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.