13. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா
வறுமையில் வாடுபவர்களை மேலும்
வருத்த விரும்பாமல் – இவர்களுக்கு
வாழ வழி செய்ய வேண்டும் என்ற
முடிவுடன் -என் அன்பர்களுக்காக
முயற்சியை இந்நொடியே தொடங்கினேன்....
அவர்களின் கூற்றுப்படி பகலை கழித்த
நான்
இரவையும் சந்திக்க வேண்டிய நேரம்வர...
மகிழ்ச்சிக்காக மற்றவர்களை மாய்க்கும்
மனிதர்களின் நடமாட்டம் கேட்க....
அப்பொழுதுதான் வந்தவர்கள் போகவில்லை, என அறிய
அவர்களை அழைத்துக் கொண்டு
மீண்டும் சென்றேன்!
எங்களின் பாதுகாவலனாகிய குகையிடம்...
அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு
சிறிது நேரம் ஓய்வு கொள்ளும்
நான் வெளியே காவலில் உள்ளேன்...
இன்று ஒருநாளாவது
பயம் கொள்ளாமல் உறங்குங்கள்!
என்றுரைத்துவிட்டு
வெளியேறினேன்....
என் செயலால் மகிழ்ச்சியடைந்த மூளை
பணிநியமனம் இல்லாமலே-தன்
பணியை செய்ய ஆரம்பித்தது...
அடுத்த அத்தியாயத்துடன் முற்றும்!
{kunena_discuss:1101}