(Reading time: 2 - 3 minutes)

12. வரத்தினால் பெற்ற சாபம்... - ரேவதிசிவா

Varathinal petra saabam

ஔவை வணங்கிய அரசம்

அடிமட்டும் கிடக்க

அருகில் ஆனைமுகன்

நிழல்கூட  படாமல் வீற்றிருக்க

நினைத்தேன்!

ஆரம்பத்தில் என் அன்பர்கள்

அளித்த இடம்  எவ்வளவு

வசதி வாய்ந்ததென்று...

வறட்சியில்  ஐங்கரனே வாடினால்

என்னவர்களின் நிலை !

எனக்குப் புரிய ஆரம்பமாக

அவர்களுடன் மேலும் முன்னேற – நாவரல

அருந்த நீர் கிடைக்குமா? என்று வினவ

தயங்கியப்படியே அழைத்துச் சென்றனர்...

தண்ணீருள்ள நீர்நிலையை தேடி...

நீர்நிலை இருந்தது- ஆனால்

நீர்தான் இல்லை...

மேலும் நகர

மிச்சமிருந்த ஒரு நீர்நிலையைப் பார்க்க

அதிர்ந்தேன்!

ஆலைக் கழிவுகள் அதிலிருக்க

அவர்களை ஏரெடுத்தும் நோக்க முடியவில்லை...

அவல நிலையை எண்ணி மனக்குமுற

அமர்ந்தேன்...

துக்கத்தால் விக்கலும் நிற்க-அவர்களின்

துன்பநிலைக்கு காரணமான

என் இனத்தவரோடு சேர்த்து

என்னையும் வெறுத்தேன்...

திடீரென்று சத்தம் கேட்க

தூரத்தில் துப்பாக்கியோடு

துஷ்டர்கள்! வருவதை கண்டு

துரிதமாக நண்பர்களை அழைத்து

மறைய இடம் தேட....

ஐயகோ!

எத்தகைய ஈனர்கள் என் இனத்தர்!

எங்கும் பெரிய மரமோ !

அடர்ந்த மரமோ இல்லாததால்

அருகிலுள்ள குகையில் சென்று மறைய

அதற்குள் அனைவரும் முள் புதரால்

காயமடைந்துப்போனோம்!

மணிகள் பல கடந்து வெளியே வர

மாலைப்பொழுது வந்திருந்தது...

களைப்பும் பசியும் எடுக்க

கண்டேன்! என்அன்பர்களின் கஷ்டம்...

உணவருந்த வருகிறீரா? என வினவ

உடைந்துப்போனேன்- அவர்களின்

உயர்ந்த பண்பைக் கண்டு ...

ஆம்.

பகைவரும் வீடு வந்தால்

ஈய வேண்டும்! என்ற

பண்பை மனிதர் மறந்து போக-இதோ!

என் அன்பர்கள் தன்னுடைய

எதிரியின் இனத்தை சேர்ந்த

என்னை மதிக்கிறார்களே!

இதுதானே பகைமையையும் போற்றும்

நம் பண்பாடு!

தொடரும்

Varathinal petra saabam 11

Varathinal petra saabam 13

{kunena_discuss:1101}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.