(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 10 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

வாங்க மேடம் வாங்க.... என்ன உன் சைட் வேலையெல்லாம் கச்சிதமா முடிச்சுட்டியா..... உன் மாமியார் எப்படி இருக்காங்க?”

“என் மாமியாருக்கு என்ன குறைச்சல்.... பிரமாதமா இருக்காங்க..... ஆமா அதை ஏண்டா இவ்ளோ காண்டா கேக்கற......  உனக்கும் வத்தலோ, தொத்தலோ ஏதோ ஒண்ணு மாட்டும் சப்பாணி.... don’t worry… be happy…”,வடிவேலு குரலில் பாரதி பேச கடுப்பானான் சாரங்கன்.

“ஏண்டி பேசமாட்ட... நீ பாட்டுக்கும் சைட் அடிக்க கிளம்பிட்ட... அதுக்கப்பறம் நான் மட்டும்தானே சீனியர் கிட்ட மாட்டிக்கிட்டேன்.... சட்டத்தை மீறுறது எத்தனை தப்புன்னு ஒரு மணி நேரம் உக்கார வச்சு ஆத்து ஆத்துன்னு ஆத்தி தள்ளிட்டார்.... ராத்திரி எழுப்பி கேட்டாக்கூட  இந்திய அரசியலமைப்பு சட்டம் எத்தனை மகோன்னமானதுன்னு பேசித்தள்ளிடுவேன்.... தாளிச்சுட்டாறு....”,சாரங்கன் சொல்ல பாரதி சிரித்தாள்.

“ரொம்ப அடி பலமோ..... விடு விடு சாரங்கா...... சீனியர் நம்மளைத் திட்டறதும், நாம அவர்க்கிட்ட திட்டு வாங்கறதும்  சகஜம்தானே.... புதுசா என்ன பீலிங்க்ஸ்....”

“போடி.... எப்பவும் நீயும் சேர்ந்துதானே திட்டு வாங்குவ.... இன்னைக்கு நான் மட்டும்தானே வாங்கினேன்....”

“ஓ உனக்கு நீ திட்டு வாங்கினது பெரிசா தெரியலை.... நானும் சேர்ந்து வாங்காததுதான் உன்னோட கடுப்புக்கு காரணமா.... உன்னோட எண்ணத்துல தீயை வைக்க.....”

“சரி சரி விடு... அப்பறம் வாத்யார் என்ன சொன்னாரு.... இன்னைக்கு ஒரே கண்ணும் கண்ணும் நோக்கியாவா....”

“நீ வேற ஏண்டா..... நோக்கியாவும் இல்லை. சாம்ஸங்கும்  இல்லை....”

“Why பேபிம்மா.... So much சலிச்சுஃபயிங்....”

“இப்போதாண்டா சப்பாணி அவர் மேடம்லேர்ந்து மிஸ்ஸுக்கு இறங்கி வந்திருக்காரு.... இன்னும் பாரதிக்கு வந்து அப்பறம் லவ்வை சொல்லி.... ஹ்ம்ம் மோஸ்ட்லி அறுவதாம் கல்யாணம்தான் நினைக்கறேன்....”

“நீ கவலைப்படாத பக்கி.... அப்படி எல்லாம் வாத்யாருக்கு நல்லது நடக்க விட மாட்டேன்..... எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் அவர் கைல கால்ல விழுந்தாவது  அவர் வீட்டுக்கு உன்னைத் தள்ளி விட்டுட மாட்டேன்....  எம்புட்டு நாள்தான் நாங்க மட்டுமே உன்னோட கொடுமைய அனுபவிக்கறது.....”

“மண்ணெண்ணெய் .... வேப்பெண்ணெய்.... விளக்கெண்ணெய் .....

நீ சொன்னதை சோக்குன்னு ஒத்துக்க முடியலை......”

“ரைமிங்..... ரைமிங் சரியா வரலை பாரு பக்கி.....  உங்களின் பாடலில் பிழை உள்ளது”

“ஆமா இவர் பெரிய பானபத்திர ஓணாண்டி..... அப்படியே பிழையை கண்டுபிடிச்சுட்டாறு.....”

“சரி அதை விடு.... லவ் சொல்லலைனா அப்பறம் இவ்ளோ நேரம் என்னதான் பண்ணின.....”

“இல்லைடா அவர் பக்கத்துல இருக்கற பசங்களுக்கு கிளாஸ் எடுத்துட்டு இருந்தாரு.... சரி ஆன்ட்டிக்கு போர் அடிக்குமேன்னு நான் அவங்களோட உக்கார்ந்து பேசிட்டு இருந்தேன்.....”

“நீ பேசினதை கேட்டு அவங்களுக்கு கால் வலி போய் காது வலி வந்துடுச்சா.....”

“ஈஈஈஈஈஈ  நீ சொன்ன மொக்கைக்கு சிரிச்சுட்டேன் போதுமா.....”

“சரி சரி விடு.... ஆமா  உன்னோட ஆளை எனக்கு எப்போ காட்டப் போற....”

“இதோ இப்போவே காட்டறேன்.....”,தான் மொபைலில் எடுத்த ராஜாவின் புகைப்படத்தை சாரங்கனிடம் காட்டினாள் பாரதி.

“அடியே தேவாங்கு மாதிரி இருக்கற நீ எங்க..... தேவ குமாரன் மாதிரி இருக்கற இவர் எங்க.... உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா... ச்சே என்னம்மா இருக்காரு.... இவரெல்லாம் உனக்கு ரொம்ப இல்லை ரொம்ப ரொம்ப அதிகம் சொல்லிட்டேன்....”

“டேய் போடா... நாங்கல்லாம் மனசைப் பார்த்துதான் லவ் பண்ணுவோம்....”

“அடிப்பாவி நீ அவர் மனசைப் பார்த்து லவ் பண்ணின ...... இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேண்டாம்.... அவரோட அழகைப் பார்த்து தலை குப்புற விழுந்துட்டு ஹார்ட்டு,   பீலிங்க்ஸ்ன்னு புளுகாத.....”

“அது மொதல்ல அப்படித்தான் ஆரம்பிச்சுது சப்பாணி.... ஆனா இன்னைக்கு ஆன்ட்டியும், ராஜாவும் கஷ்டப்படற பசங்களுக்கு ஹெல்ப் பண்றதெல்லாம் கேட்ட பிறகு அப்படியே மாறிப் போச்சு...”

“அது சரி.... அப்பறம் எப்போ லவ் declare பண்றதா இருக்கே.....”

“லவ் சொல்றதெல்லாம் நடக்காது போல சப்பாணி..... ஆன்ட்டியை கவுத்து டைரக்ட்டா கல்யாணத்துக்கு போய்ட வேண்டியதுதான்....”,இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது பாரதியின் கைப்பேசி அழைத்தது.

“சொல்லுங்க மதி சார்... எப்படி இருக்கீங்க.....”

“நல்லா இருக்கேன் பாரதி....  நீயும் சாரங்கனும் எங்க இருக்கீங்க?”

“வீட்டுலதான் இருக்கோம் மதி சார்....”

“ஓ இப்போ ஏதானும் முக்கியமான வேலை இருக்கா பாரதி....”

“இல்லை சார் சும்மாதான் பேசிட்டு இருக்கோம்....”

“ஓ அப்போ நீங்க ரெண்டு பேரும் கிளம்பி சந்திரன் சார் வீட்டுக்கு வர முடியுமா?”

“வர்றோம் சார்.... ஏதானும் முக்கிய விஷயமா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.