(Reading time: 5 - 10 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 11 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

சாரங்கனும் பாரதியும் வீட்டை அடையும்போது ஏற்கனவே அங்கு மாரியும், மணியும் வந்து காத்திருந்தார்கள். 

“வந்து ரொம்ப நேரம் ஆச்சா மாரி.... அம்மா இவங்களுக்கு ஏதானும் சாப்பிட கொடுத்தீங்களா....”

“அதெல்லாம் ஆச்சு தங்கச்சி...  அந்த கவுன்சிலரை என்ன பண்ணலாம்ன்னு சொல்லு.... மாசாமாசம் இதே மாதிரி அந்தாள் பண்ணிட்டு இருந்தான்னா என்ன நியாயம் சொல்லு.... இந்த மாசமும் தூக்கி ஏதோ ஒரு பணக்காரனுக்குத்தான் தானம் பண்ணி இருக்கான்...  முன்னாடி எல்லாம் ரேஷன் சாமான்ல பூச்சி இருக்கும், புழு இருக்கும்ன்னு எவனும் வாங்கமாட்டான்.... இப்போ வர்றது எல்லாமே நல்ல தரமா இருக்கறதால வெளிய விக்கறதுல பாதி விலைன்னு எங்க வயத்துல அடிச்சு அவனுங்க பிடிங்கிக்கறானுங்க...  ஒரு ஒரு மாசமும் நாங்கதான் கடைசில அதிக விலை கொடுத்து வெளில வாங்க வேண்டியதா இருக்கு...”

“மாரி கவலையேபடாத.... அந்தாளை உள்ள போட எல்லா ஏற்பாடும் பண்ணிடலாம்..... ஆனா நமக்கு அவன்தான் பண்ணினான்னு கரெக்டா தெரியணும்..... ஏன்னா இவன் இத்தனை தைரியமா வெளி மார்க்கெட்ல விக்கறான்னா உள்ளுக்குள்ள ஆளுங்க இல்லாம பண்ண முடியாது.... So மொதல்ல அவனை கையும் களவுமா பிடிக்க நாம ஏதானும் வழி பண்ணனும்”

“என்ன தம்பி, இப்படி சொல்ற.... நீங்க என்னவோ போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்ன்னுதானே சொன்னீங்க.....”

“அப்படித்தான் மதி சார் சொன்னார் மணி...  ஆனா எந்த விதமான ஆதாரமும் இல்லாம நாம அவர் மேல கம்ப்ளைன்ட் பண்ண முடியாது.... நீங்களுமே ரேஷன் கடைல சாமான் தர மாட்டேங்கறாங்கன்னு போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னாலும் அவங்க உங்களை கவுன்சிலர்கிட்டதான் அனுப்பப்போறாங்க....  அந்தாள் அங்க வேலை செய்யறவங்கதான் திருடி வித்து இருக்காகன்னு சொல்லி, மணி மாதிரி ஆளுங்களை தூக்கி உள்ள போட சொல்லுவான்.... இதெல்லாம் தேவையா..... மாரி நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது அந்த கவுன்சிலர்கிட்ட  வேலை செய்யறாங்களா”

“என்னோட தோஸ்த் ஒருத்தன் அந்தாள் கிட்டத்தான் வேலைல  இருக்கான் தம்பி.... அவன்தான் இந்த விஷயத்தையே எங்கக்கிட்ட சொன்னான்.....”

“ஹ்ம்ம் சரி.... உன்னோட தோஸ்த்து என்ன வேலைல இருக்கான்.... அவன் நம்பக்கூடிய ஆளா.... இல்லை அந்தாளுக்கு  ஜால்ரா தட்றவனா”

“கவுன்சிலர்க்கு  கார் ஓட்டறான் தம்பி.... கண்டிப்பா நம்பலாம்..... அவனே அந்தாள் மேல செம்ம காண்டுலதான் இருக்கான்....”

“அப்போ ஒண்ணு பண்ணு.... நீ அவங்கிட்ட சொல்லி அந்த கவுன்சிலர் அடுத்து இந்த மாதிரி யார்கிட்டயானும் பேரம் பேசறாரான்னு பார்த்துட்டு நமக்கு சொல்ல சொல்லுங்க.... அவனை கையும் களவுமா பிடிக்க முடியுதான்னு பார்ப்போம்....”

“சாரங்கா எனக்கு என்ன தோணுதுன்னா இவங்களை நாளைக்குப் போய் கவுன்சிலரைப் பார்த்து இந்த மாதிரி ரேஷன்ல சாமானே இருக்க மாட்டேங்குதுன்னு சொல்ல சொன்னா என்ன....”

“இல்லை பாரதி... அது சரியா வராது.... அந்தாள் உஷார் ஆகி கொஞ்ச நாள் இதை ஸ்டாப் பண்ணிடுவான்.... நாம இதைக் கண்டுக்காத மாதிரியே இருக்கறதுதான் நல்லது....”

“அதுவும் கரெக்ட்தான்.... மணி உங்களுக்கு மாசத்துக்கு ரெண்டு வாட்டி சாமான் எடுத்துட்டு வருவாங்க இல்லை...”

“அப்படிக் கணக்கெல்லாம் இல்லை தங்கச்சி.....  சில சமயம் சாமானை மொத்தமா கொடுக்காம கொஞ்ச கொஞ்சமா அனுப்பி வைப்பானுங்க....  ஒரு சில மாசம் நாலைஞ்சு வாட்டிக் கூட வந்திருக்கு....”

“இதுதான் இந்த மாசத்தோட முதல் வாரம்..... உங்கக்கடைக்கு எல்லா சாமானும் வந்துடுச்சா...”

“இல்லை தங்கச்சி.... நேத்து வந்தது அரிசியும், சர்க்கரையும்தான்.... இனிதான் பருப்பெல்லாம் வரும்....  இன்னும் ரெண்டு நாள்ல அனுப்பறோம்ன்னு சொல்லி இருக்காங்க....”

“ஓ போன மாசம் எந்த சாமான் எல்லாம் அந்த கல்யாண வீட்டுக்கு கொடுத்தான்.....”

“அரிசி, சர்க்கரை அப்பறம்  துவரம் பருப்பு....”

“ஹ்ம்ம் இப்போ அவன் போனமுறை மாதிரியே இந்தக் கல்யாண வீட்டுலயும் பேசி இருந்தான்னா எப்படியும் ரெண்டு நாள்ல வர பருப்பையும்   நாடு வழில மறிச்சு அனுப்பி விட்டுடுவான்.... கண்டிப்பா ரெண்டு நாள்ல வந்துடுமா மணி...”

“வந்துரும் தங்கச்சி....  கோடௌன்க்கு நேத்தே ஸ்டாக் வந்துடுச்சு.... அதைப் பிரிச்சு அந்தந்த ஏரியா ரேஷன் கடைக்கு அனுப்பணும்.... அவ்வளவுதான்...”

“மாரி நீ உன் தோஸ்த்துக்கிட்ட சொல்லி அந்தாள் யார்க்கூடாயானும் இந்த பருப்பு சம்மந்தமா பேசறானான்னு  பார்க்க சொல்லு.... எனக்குத் தெரிஞ்சு நேரடியா இவன் போக சான்ஸ் இல்லை.... மோஸ்ட்லி போன்லதான் பேசுவான்.... என்ன பேசறான்னு கண்டு பிடிக்க முடியுதான்னு நாங்களும் பார்க்கறோம்....  இந்த முறை அவனை எவிடென்ஸோட பிடிச்சுடலாம்......”

பாரதி கூற மாரி தன் நண்பனிடம் பேசுவதாகக் கூறி விடைபெற்று மணியுடன் கிளம்பினான்.

சாரங்கா நான் மதி சார்கிட்ட பேசி முடிஞ்சா அந்த கவுன்சிலரோட Phone Conversation எல்லாத்தையும் ரெகார்ட் பண்ண சொல்றேன்.... நீ சீனியர்க்கிட்ட இப்போ மாரிக்கிட்ட நாம பேசின விஷயங்களை எல்லாம் சொல்லிடு.....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.