(Reading time: 7 - 13 minutes)

இடம்: மேற்கு வங்கம்

ஷ்வி தன்னை காண வந்தது யார்? என்று விடுதி நிர்வாகியிடம் வினவினாள்.

அவர் நோக்கிய திசையில் பார்த்தவளுக்கு கைகால்கள் உதற ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். வந்திருந்தது காவல்துறை அதிகாரி, அவள்தான் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தவள் என்றும்,அவர்கள் எப்பொழுது அழைத்தாலும் காவல் நிலையம் வரவேண்டுமென்றும் அவளிடம் கூறப்பட்டிருந்தது.ஆனால் அவள் நிலையே இங்கு சரியில்லாத பொழுது, அடுத்தவருக்கு உதவுவது என்பது எளிதான காரியமா? மனதில் மட்டுமே இவ்வார்த்தையை கூற முடிந்தது அவளால்!

தயக்கத்துடனே அவர் அருகில் செல்ல, அவரும் எழுந்து நின்று மெல்லிய குரலில், அருகில் இருக்கும் சிற்றுண்டி கடைக்கு வருமாறு  பணிந்துவிட்டு சென்றார்.

இயல்பாகவே யஷ்வி சற்று பயந்த சுபாவம் கொண்டவள், தான் இருக்கும் இடத்திற்கும் தனக்கும் எந்தவொரு சம்பந்தமுமில்லை என்பது போல் இருப்பவள்.நடந்த சம்பவங்கள் மேலும் அவளை பயத்தின் உச்சியில் தள்ளியிருக்கிறது.

தைரியமாய் இரு ! என்று தனக்குத் தானே பலமுறை சொல்லிய படியே அவ்விடத்தை அடைந்தாள்.

எதுவும் பேசாமல் தன் எதிரே அமர்ந்திருப்பவளை கூர்மையாக ஆராய்ந்துக்கொண்டிருந்தவர், தன் கேள்விகளை ஒன்றன்பின் ஒன்றாக கேட்க ஆரம்பித்தார்.

அங்கு நடந்ததை எந்தவொரு ஒளிவு மறைவுமில்லாமல் சொல் யஷ்வி, உன்னை பாதுகாக்கும் கடமை எனக்குள்ளது. அதனால் அன்று மறைத்தை, இன்று சொல் என்றார்.

யஷ்வி என்னதான் பயந்தவள் என்றாலும், அவள் தன் மனசாட்சிக்கு பயந்தது இதுவே முதல்முறை! ஆம்! அன்று காவலரிடம் சில உண்மைகளை மறைத்தவளால், தன் மனதிடமிருந்து மறைக்க முடியவில்லை.அதன் கேள்விகளின் தாக்கத்தில் துன்பப்பட்டவளுக்கு,அதிலிருந்து விடுபட  எளிதாக ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது! ஆனால், இவரை எவ்வளவு தூரம் நம்புவது என்று மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

அவருக்கும் அவளின் நிலை புரியாமலில்லை,என்ன செய்வது?

தீயவர்கள் அனைத்து துறைகளிலும் அனைத்து நிலையிலும்தான் இருக்கின்றனர். அதற்காக நன்மைகளை நாம் செய்யாமல் விட்டுவிட முடியுமா?

அனைவரும் இச்சமுகத்தில் கடமை என்று ஒன்று இருக்கிறது அல்லவா? இல்லை, நான் பார்த்தவர்கள் பெரும்பாலும் தீயவர்கள் என்பதால் நான் யாருக்கும் உதவ மாட்டேன் என்பது சரியா?

இன்றைக்கு நாம் ஒருவருக்கு கைக் கொடுத்து காப்பாற்றாமல் விட்டால், மேலும் மேலும் மனம் குறுகி மனித தன்மையை இழந்து விட மாட்டோமோ? வருங்காலத்தில் நம் சந்ததியருக்கு நல்ல பண்புகளையும் விதைத்து செல்வதும் நம்முடைய கடமைதானே!

இவ்வாறாக அவர் கூற, மனதின் அனைத்து தயக்கங்களை விடுத்து, அன்று தான் பார்த்தவகைகளை அனைத்தையும் கூறியவள் தனக்கு அங்கு கிடைத்த டைரியை மட்டும் கூறாமல் விடுத்தாள். ஏனோ அதற்கு மட்டும் அவளுக்கு மனம் வரவில்லை.

அனைத்தையும் கேட்டவர், தன் தனிப்பட்ட கைப்பேசியின் எண்களைக் கூறி, எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று நம்பிக்கை தந்து விடைப்பெற்றார்.

ஆவளும் பலவற்றை சிந்தித்துக் கொண்டே தன் அறையை அடைந்தாள்.

டைரியின் பக்கங்களைப் பிரித்து மீண்டும் படிக்கத் தொடங்கினாள்.

இடம்: பீகார்

தண் பகதூர் தன் முன்னே இருப்பவனின் கண்களைப் பார்த்துக்கொண்டே கேள்விகளை தொடங்கினான்.

ஹேய்! என்னைப் பற்றி தெரியும்தானே! என்னிடமே உன் வேலையைக் காட்ட நினைக்கிறாயா?

எங்கேடா அந்த குட்டி?

என்கூடதான் வந்தா எப்படி தொலைந்து போனாளுனு தெரில, என்று பயந்தப்படியே சொன்னான்.

நீ என்ன காரியம் பண்ணியிருக்கனு, உனக்கு தெரியுதா?

எதிரே நின்றிருந்தவனுக்கு சற்று பயமிருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் தைரியமாய் தண் பகதூரை பார்த்தான்.

என்ன பார்க்கிற? அவள் மட்டும் அனைத்தையும் சொல்லிட்டா  நமக்கு பெரிசா பிரச்சனை வராது என்பதற்காக, அலட்சியமா இருக்கலாமா? இந்த தொழில்ல அலட்சியம் இருக்கக் கூடாது! இனிமேலாவது கவனமா இரு!

அவனும் தலையை அசைத்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

இந்நாட்களில்

தொலைந்து போவது

மனிதர்கள் மட்டுமல்ல

மனிதமும் தான்!

மனிதாரவது என்றேனும்

அகப்படுவர்

ஆனால் மனிதம்?

விடை தேடும் பல கேள்விகள் தொடரும்...

Episode 06

{kunena_discuss:1124}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.