(Reading time: 9 - 17 minutes)

22. யார் மீட்“டி”டும் வீணையிது? - புவனேஸ்வரி கலைச்செல்வி

Veenai             

"ன தைரியம் ! அந்த மன தைரியத்தை தூண்டுறதும் , உடைக்கிறதும் கூட ஊடகங்களின் வேலைதான் !" என்று நிரூபணா உரைக்கவும் சில நொடிகள் அங்கு நிசப்தம் நிலவியது . அனைவரையும் தீர்க்கமாக பார்த்தாள்  அவள்.

" கருத்து சுதந்திரத்தின் முழு அர்த்தத்தை இப்போதெல்லாம் சொல்லுறவங்களும் புரிஞ்சுக்கிறது இல்லை .. கேட்குறவங்களும்  புரிஞ்சுக்க தயாராக இல்லை . விமர்சனம் என்பது நல்லதை மட்டுமே எடுத்து சொல்லுறது இல்லை . எது சரி இல்லையோ அதை கண்ணியமான முறையில் எடுத்து சொல்வதும் தான் !"

".."

" நம்ம கலைஞர்களின்  எல்லா படைப்புகளும் பாராட்டை  தட்டிட்டு போகுற அளவிற்கு தரமாக இல்லை . ஆனால் அதை எத்தனை பபேரு  அவர்களின் முகத்திற்கு நேராக  சொல்லுறீங்க ? இணையத்திலும் சஞ்சிகைகளிலும் விமர்சித்து கொட்டுவது மட்டும் நேர்மை அல்ல . ஒரு நடிகரோ டைரக்டரோ  உங்க முன்னால் அமர்ந்து இருக்கும்போது அவங்க படத்தில் தப்பு இருந்தால் அதை உடனே சொல்லணும் .."

".."

" தரமான படைப்பை பாராட்டுவதற்கும், வீண் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கு .. ஒரு  படம் நடித்தாலும் புகழ்ந்து தள்ளுறீங்க .. பத்து படம் நடித்தாலும் புகழ்ந்து தள்ளுறீங்க .. "

".."

"பிற மாநிலத்தில் இப்படி நடத்துறது இல்லை .. நம்ம தமிழ் சினிமாவில் தான் நடிகர்களை  திரையில் கடவுளாகவும் , அவர்களின் அந்தரங்க வாழ்க்கையை பற்றி பேசும்போது தாழ்வாகவும் நடத்துறோம்" . இந்த முறை அவளின் கூற்றிற்கு எதிர்ப்பு வரவில்லை . சிந்தனை ரேகைகள் அனைவரின் முகத்திலும் படர்ந்தன .

"காலத்திற்கு ஏற்ப எல்லாமே மாறிட்டு இருக்கு . தியேட்டரில் தான் புதுப்படம் பார்க்க முடியும் என்ற முறையே மாறி இப்போ வீட்டில் இருந்துகொண்டே எல்லாத்தையும் பார்க்கிறோம் .. இது இன்னமும் மாறலாம் . நடிகர்களே வெவ்வேறு துறையில் கவனம்  செலுத்தலாம் . தேவை இல்லாத அலட்சியங்கள் வரலாம். பிறருக்கு நம்ம மேல அவமரியாதை வரலாம் . வாய்ப்புகள் இருக்கிறவரை திருத்தி கொள்ளவும், மாற்றங்கள் புரியவும் முடியும். அதை விட்டுட்டு பார்வையாளர்களே  எங்கள் பொழுது போக்கை நாங்களே பார்த்துக்குறோம் .. உங்கள் சேவை வேணாம்னு சலிப்புடன் சொல்லிட்டு போயிட்டா , அது எல்லாருக்குமே படு தோல்வி !" என்று நிரூபணா  சொன்ன கருத்தை அனைவருமே ஏற்றுக்கொண்டனர் .

" இங்கு கலைஞர்களின்  பிரதிநிதிகளும் இருப்பதால் இன்னொரு விஷயமும் நான் நினைவு படுத்த விரும்புகிறேன் . எப்போதும் ஒற்றுமை தான் வலிமை தரும். உங்கள் துறையை சார்ந்தவர்கள் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்வது உங்களுக்கு ஆரோக்யமான செயல் இல்லை . இன்னைகு அவங்க , நாளைக்கு நீங்க ! அவ்வளவே வித்தியாசம் . நீங்கள் குழுவாக முடிவெடுத்து இந்த தற்கொலை நிகழ்வுகளை பற்றி  மேற்கொண்டு விசாரித்து நீதி வழங்க சொல்லி கேட்டால், நிச்சயம் நாங்கள் முன் நிற்போம் !" என்று உறுதியளித்தாள் அவள் . அவளின் பேச்சும் திறனும் அனைவரையும் கட்டி போட்டது, ராகவேந்திரன் உட்பட !

" துக்கு கரண்ட் ஷாக் அடிச்ச  மாதிரி ரெண்டு பேரும்  பார்க்குறீங்க ? " இலகுவாக கேட்டு வைத்தாள்  கண்மணி . சத்யேந்திரனும் அர்ப்பணாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் . சினிமா துறையில் அதிர்ஷ்டம் தூக்கி விட்டு தலை நிமிர்ந்தவர்கள் இல்லை இருவருமே ! அதனால், வெற்றியின் கடின உழைப்பும் அவனது கனவுகளின் ஆழத்தையும் இருவராலும் புரிந்து கொள்ள முடிந்தது . முடியாது என்று எப்படி சொல்லிட முடியும் ?

தம் இருவரையும் இணைத்து நடிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கும் அவனது திட்டத்தில் நிச்சயமாக கல்மிஷம் இருக்காது . கண்டிப்பாக உரிய காரணம் இருக்கும் . ஆனால் ?? இதுவரை காத்து வந்த கொள்கையை விடுவதா ? நட்பு என்று வந்துவிட்டால் கொள்கை இரண்டாம் பட்சம் தான் ! ஆனால் ஒரு நடிகனாக , நடிகையாக அவர்கள் ஏற்கனவே சொன்ன கூற்று மாறும்போது விமர்சனங்கள் வெடிக்குமே ! அடிக்கடி கேட்டு கேட்டு சலித்து போன விமர்சனம் என்றாலுமே ஒருவரை ஒருவர் தர்ம சங்கடத்தில் ஆழ்த்திதான் ஆக வேண்டுமா?

கண்மணியை முறைத்தான் சத்யன். அதை கண்டும் காணாதவள் போல கண்மணி இருக்கவும், அவளின் தப்பிக்கும் சுபாவத்தை கண்டு கொண்டான் அவன் . " ஓஹோ .. நாம கோபப்போடுறோம்னு மேடமுக்கு தெரியாதாம் ! நாமளே தான் ஆரம்பிக்கணும் போல !" என உள்மனம் கூவியது .

" கண்ணம்மா " என்று அவன் காதல் பொங்கிட அழைக்கவும் , அவனது உள்மனம் கேலி செய்தது .

" ஹம் கும் .. போடா நீயும் உன் கோவமும் !"

" ம்ம் சொல்லுங்கப்பா .. என்ன ?"

" காதல்னா  சந்தோஷமான விஷயங்கள் பகிர்ந்து கொள்ளுறதுக்கு  மட்டுமில்ல .. ! சங்கடத்தை பத்தியும் பேசுறதுக்கு தான் !"

" தெரியுமே .. இப்போ நான் என்ன சங்கடத்தை உணர்ந்திட்டேன் ? "

 " நீ உணரலதான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.