(Reading time: 9 - 17 minutes)

ஆனா வெற்றிக்கு ஒன்னுன்னா அது உனக்கும் தானே ? இது அவனுடைய கனவு . அந்த கனவு பலிக்காதுன்னு அவன் கண்ணு முன்னாடியே நாங்க சொல்லி இருக்கோம் . பாவம் அவனுக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும் ?"

"இருந்துச்சு தான் .. பட்  நான்தான் அவன் கூடவே இருந்தேன்ல ? என் நண்பனை எனக்கு பார்த்துக்க தெரியாதா?"

" இருந்தாலும் கண்மணி ?" என தயக்கமாக இழுத்தாள் அர்ப்பணா .

"பெர்சனல் லைஃப்  வேற தொழில் வேற. ரெண்டையும் எப்பவும் குழப்பிக்க கூடாது . ஒருவகையில் நாமெல்லாம் ஒரே குடும்பம் ஆக போறோம் .. அதுக்காக நம்மளுடைய தனிப்பட்ட முடிவுகளை விட்டுக்கொடுத்து  போகணும்னு அவசியம் இல்லை .. வேலைன்னால நமக்குள்ள மனஸ்தாபமோ எதிர்பார்ப்போ எப்பவுமே வர கூடாது ..இதை நான் சொல்லல வெற்றி தான் சொன்னான் . அவனுக்கு என்ன வேணுமோ அதில் அவன் தெளிவாகத்தான் இருக்கான் . உங்க ரெண்டு பேரையும் விட எனக்குத்தான் அவனை நல்லா தெரியும். அவன் பெயருள்ள இருக்குற வெற்றி லைஃப்ளையும் வரும்.."

" உங்க நட்பை நான் மதிக்கிறேன் கண்ணம்மா .. ஆனால் நீ சொன்னதை  உனக்கே ஞாபகபடுத்துறேன் . நாம எல்லாருமே ஒரே குடும்பம் அந்த  வகையில் வெற்றிக்கு நாங்களும் இருக்கோம் "என்று சத்யன் புன்னகைக்கவும் அவனை வாஞ்சையுடன் பார்த்தாள்  கண்மணி . தன்னை பற்றி மூன்று ஜீவன்கள் நினைத்து கொண்டிருப்பதை உணர்ந்தவன் போல கண்மணியை போனில் அழைத்தான் வெற்றி .

" ஹேய்  காட்டுப்பூச்சி !" . காட்டுப்பூச்சி என்ற அவனின் விளிப்பே  அவனது உற்சாகமான மனநிலையை எடுத்து காட்டியது .  அவனது சந்தோசம் கண்மணியையும் தொற்றிக் கொண்டது .

" டேய் மூட்டைப்பூச்சி .. ! என்னமோ சோத்துல உப்பு போட்டு சாப்பிடும் ரோஷக்காரன் மாதிரி சிலுப்பிகிட்டு ஓடி போனியே இப்போ என்னடா போன் ? பண்ணுற ?"

" உனக்கெல்லாம் ப்ரண்டு ஆன பிறகு சூடாவது சொரணையாவது .."

" இது .. இது ..இதுதான் என் நண்பன் "

" எப்பவுமே நான் உனக்கு தான் டீ நண்பன் .."

"சரி மொக்க போடாமல் எந்த பார்ல உட்கார்ந்து இருக்க சொல்லு ?"

" பாரா ? அடியே !"

" என்னடா ? அவனவன் காதலி விட்டுட்டு போனாலே தண்ணி  அடிக்கிறான் .. நீ என்கிட்ட ரெண்டு மூணு நாலா சரியா பேசலையே ..அதான் கேட்டேன் .. "

" அய்யே .. போடீ உனக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்ல .."

" இப்போ சொல்ல தெரியுதுல வக்கனையா ! அப்பறம் ஏன்டா  கோச்சுக்கிட்டு போன ? " ஆதங்கம் தாங்கிய குரலில் கேட்டாள்  கண்மணி . அவள் அருகில் இருந்த அர்ப்பணா  சத்யேந்திரன் இருவருமே அவள் முகம் வாடி போயி நிற்பதை பார்த்து திடுக்கிட்டனர் . இவ்வளவு நேரமாக விளையாட்டு தனமாக சிரித்து கொண்டிருந்தது நிஜமா? அல்லது வெற்றியிடம் காட்டிடும் முகம் நிஜமா?

" எனக்கு எப்படி கோபத்தை காட்டனும்னு தெரியல கண்ணு! உன் காதலை நீ முதலில் சொன்னாமல் போனதும், உலகத்துக்கே ஊடகம் மூலமா தெரிஞ்ச பிறகு தான், எனக்கே தெரிய வருதேன்னு ஆதங்கமும் என்னை கஷ்டப்படுத்திடுச்சு. உன் மேல கோபம்னு சொல்றத விட வருத்தம் தான் அதிகமாக இருக்கு!"

"டைரக்டராச்சே,பேச சொல்லியா தரனும் உனக்கு? கோபமோ வருத்தமோ அதை வார்த்தையால காட்டு ..மௌனத்தினால காட்டாதே! "

"மன்னிச்சிடு கண்ணு.."

"நீயும் மன்னிச்சிடு டா!"

"ஹேய் ஒரு குட் நியூஸ் சொல்லனும் டீ.. நோநோ..ஒன்னு இல்லை ரெண்டு குட் நியூஸ்..எதை முதலில் சொல்லட்டும்??" துள்ளலுடன் கேட்டான் வெற்றி.

"டேய் ரெண்டுல ஒன்னையாவது சொல்லேன்டா!"

"ஹா ஹா..அலையாத..சொல்லுறேன். முதல் குட் நியூஸ், விஹாஷினியின் அப்பா, எனக்கு மாமனார் ஆகறதுக்கு ரெடியா ஆகிட்டாராம்!"

"ஹேய்ய்ய்!!!!!"

"யெஸ்.. ரெண்டாவது குட் நியூஸ்.. எனக்கு மாப்பிள்ளை னு ப்ரமோஷன் கிடைச்ச மாதிரி,  உனக்கு டைரக்டர் ப்ரமோஷன் கிடைச்சிருக்கு.."

"என்னடா உளறுற"

"ஹேய் மக்கு ... நான் டைரக்டர்ன்னா நீயும் டைரக்டர் தானே?" என்று அவன் கேட்க

"வெற்றி நிஜமாவா சொல்லுற? இரு ஒரு நிமிஷம்" என்றபடி சத்யனின் அருகில் வந்து வேகமாக அவன் கன்னத்தை கிள்ளினாள்.

"ஆஆஆ...ராட்சசி வலிக்கிது டீ!" என்று சத்யன் அலறவும் அவள் என்ன செய்திருப்பாள் என்ற கணிப்பில் வெற்றியும் சிரித்தான்.

"அடிப்பாவி சத்யன்தான் உனக்கு பலி ஆடா?"

"ஒன்னில்லை ரெண்டு.அர்ப்பணாவும் இங்க தான் இருக்காங்க.."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.