(Reading time: 10 - 19 minutes)

11. பொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்

PEPPV

ழுந்த துடைத்த முகத்துடன் தனது இருக்கையில் வந்தமர்ந்த சந்தாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்தனர் ரித்தியும் ஸ்வேதாவும்…

ரித்தி தன் கண்களை காட்டி ஜாடையில் ஸ்வேதாவிடம், “நீ பேசு….” என்பது போல் குறிப்பிட,

“நான் மாட்டேன்… நீயே பேசு…” என பதிலுக்கு கண்களை உருட்டினாள் ஸ்வேதா….

“ஏய்… விளையாடாம பேசித்தொலைடி….” என ரித்தி கோபத்துடன் முகத்தினை வைத்து முறைக்க

ஸ்வேதாவோ “நான் மாட்டேன்ப்பா…” என கையெடுத்தே கும்பிட்டுவிட்டாள்…

நடக்கும் சம்பாஷனைகள் யாவும் அறிந்தும் அறியாதவளாய் அமர்ந்திருந்தாள் சந்தா அமைதியாக தனது வேலையினை பார்த்தபடி…

இப்படியே சென்றால் எதுவும் நடக்காது என உணர்ந்து கொண்ட ரித்தி,

“ஹே… வேதா… பரந்தாமன் சார் ரிட்டையர்டு ஆகப்போறதால பார்ட்டி வச்சிருக்குறாங்கல்ல… நான் போய் உனக்கு பிடிச்ச லட்டு எடுத்துட்டு வரட்டா?...”

ரித்தி கேட்டதும், “அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம் ரித்தி… நீ வேணா போய் சாப்பிட்டு வா…” என்றாள் ஸ்வேதா இலகுவாக…

“வேதா… உனக்கு பிடிச்ச லட்டு லூசு… வேணுமா…. வேண்டாமா……” என அந்த வேண்டாமா என்பதில் அழுத்தம் காட்டி ரித்தி கூற,

ஸ்வேதாவோ, உடனேயே “ஹே… ரித்தி அப்போ எனக்கு இரண்டு லட்டு எடுத்துட்டு வந்துடு… உனக்கு வழக்கம் போல, அந்த பாழாய் போன ஜிலேபியே எடுத்துட்டு வா…” என்றதும்,

“ஷப்பாடா மரமண்டைக்கு புரிஞ்சிட்டு…” என சற்றே உதித்த புன்னகையுடன், “ஏண்டி… உனக்கு பிடிச்சதை மட்டும் வேகமா எடுத்துட்டு வர சொல்லுறல்ல… அப்போ சந்தாக்கு பிடிச்சதை யாரு எடுத்துட்டு வருவா?...” என்றவாறு ரித்தி கேட்டுக்கூட முடிக்கவில்லை…

“ஸ்வீட் எடுத்துக்கோங்கம்மா…” என ஒரு வேலையாள் வந்து மூவரின் முன்பும் நீட்டினான்…

புருவத்தை சற்றே உயர்த்திய ரித்தி, “நாங்களே வந்து எடுத்துப்போமே… நீங்க ஏன் கஷ்டப்படுறீங்க….” என கேட்க

“இதுதானம்மா என் வேலை… நீங்க எடுத்துக்கோங்க…” என்றான் அவன் தன்மையாக…

ரித்தியிடம் ஜிலேபியை அவன் கொடுக்க, அவளோ, ஒரு ஆச்சரிய புன்னகையுடன் அதனை வாங்கிக்கொண்டாள்…

ஸ்வேதாவும் தனக்குப் பிடித்த லட்டை எடுத்துக்கொள்ள, சந்தாவிடம் அவன் நீட்ட, அவளோ “இல்ல எனக்கு வேண்டாம்…” என்றாள் மெதுவாக…

“இல்லம்மா… எல்லாத்துக்கும் கொடுக்க சொல்லியிருக்காங்க… எடுத்துக்கோங்க… இல்லன்னா நான் தான் கொடுக்கலைன்னு என்னை திட்டுவாங்க…” என அந்த ஆள் கூற,

தன்னால் இன்னொருவர் துன்பம் படக்கூடாது என்றெண்ணியவள், தனக்கு பிடித்த பொரிகடலை லட்டை எடுத்துக்கொள்ளவும் அவனும் அங்கிருந்து சென்றான்…

ரித்தியும் ஸ்வேதாவும் மாறி மாறி சாப்பிட ஆரம்பிக்க, சந்தாவோ சாப்பிடாமல் இருந்தாள்…

“ஹே… டார்லிங்க்… என்ன வாங்கி அப்படி ஓரமா வச்சிட்ட… எடுத்து சாப்பிடு…”

“இல்ல ரித்தி… நான் அப்புறமா சாப்பிடுறேன்…”

“அப்புறமான்னா எப்புறம்?... சாப்பிடு டார்லிங்க்… ப்ளீஸ் எங்களுக்கு கம்பெனி கொடு…”

ரித்தி சந்தாவிடம் கேட்டுக்கொண்டிருக்க,

“ஆமா சந்தாக்கா… எங்களுக்கு கம்பெனி கொடுக்கவாச்சும் சாப்பிடுங்களேன்… ப்ளீஸ்….” என ஸ்வேதாவும் கூற,

“இல்லடா எனக்கு இப்போ வேண்டாம்…” என மறுத்தாள் சந்தா மீண்டும்..

“இங்க பாரு டார்லிங்க்… அது ஒரு வேளை ஜிலேபியா இருந்துச்சுன்னா, நான் உன்னை சாப்பிட சொல்லி கம்பெல் பண்ணவே மாட்டேன்… நானே எடுத்து சாப்பிட்டு முடிச்சிருப்பேன்… பட் இப்போ அதுக்கும் வழி இல்லாம நீ வேற ஒரு ஸ்வீட் எடுத்து வச்சிருக்குற… அதை நானும் சாப்பிடமாட்டேன்… வேதாவும் சாப்பிடமாட்டா… சோ நீ இப்பவே அத சாப்பிடுறது தான் நல்லது… இல்லன்னா எறும்பு கிறும்பு வந்திடும்டி…. சொன்னாக்கேளு…”

ரித்தி சந்தாவின் மூளையை சலவை செய்ய,

“ஆமாக்கா… அவ சொல்லுறதும் ஒரு வித்த்துல சரிதான்… அதுமட்டுமில்லாம, இன்னும் கொஞ்ச நேரத்துல பேங்க்குக்கு ஆட்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க… அதுபோக பரந்தாமன் சார் கொடுக்குற ட்ரீட் இது… இத நாம சாப்பிடலைன்னு தெரிஞ்சா அவர் மனசு கஷ்டப்படும் தான?...”

ஸ்வேதாவும் தன் பங்கிற்கு சந்தாவினை மாற்ற, அவளுக்கும் ஸ்வேதா சொன்ன கடைசி வார்த்தை மனதினை உறுத்த,

“சரி சாப்பிடுங்க…” என்றவள், தானும் எடுத்து உண்ண, அதை தூரத்திலிருந்து ப்ரசன் பார்த்துக்கொண்டிருந்தான் புன்னகையுடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.