(Reading time: 8 - 16 minutes)

தொடர்கதை - சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 16 - ஜெய்

Saathiram pesugiraai kanamma

யார் பாரதி போன்ல....”

“சப்பாணி... ச்சே... சாரங்கன் பேசறான்... அவனுக்கு உங்களைப் பார்க்கணுமாம்...”

“ஓ வீட்டுக்கு வர சொல்லேன்....”

“நானே ஏகப்பட்ட வேலை பண்ணி இன்னைக்குதான் உங்களை கரெக்ட் பண்ணி இருக்கேன்.... நாம பேசும்போது நந்தி மாதிரி அவன் எதுக்கு இங்க”

“ஏய்... என்ன பேச்சு இது... கரெக்ட் பண்ணி இருக்கேன்னு.... கேக்கவே ரொம்பக் கேவலமா இருக்கு....”, இந்தப்புறம் ராஜா பாரதியை அதட்டுவதைக் கேட்ட சாரங்கன் ஏக குஷியில் இருந்தான்.

“பாஸ் காதலோட அரிச்சுவடியே தெரியலையே.... காதலி எதை சொன்னாலும் ரசிக்கணும்.... இப்படி அதட்டக்கூடாது....”

“அதுக்குன்னு காதலி கன்றாவியா பேசினால்லாம் ரசிக்க முடியாது... இப்போ போனை காதுல வச்சுட்டு இந்த ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம்... அவரை கிளம்பி இங்க வர சொல்லு...”

“இதெல்லாம் அநியாயம்.... இன்னும் நீங்க ஒழுங்கா ப்ரொபோஸ் கூட பண்ணலை... அதுக்குள்ள அந்தப் பக்கி இங்க வரணுமா”

“கவலைப்படாத, நமக்கு முதல் குழந்தை பொறக்கறத்துக்குள்ள லவ்வை சொல்லிடறேன்...”, ராஜா கூற மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டே பாரதி சாரங்கனிடம் ராஜாவின் முகவரியைக் கூறினாள். 

இருவரும் கீழே இறங்கி சென்று சுகுணாவிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க சாரங்கன் அங்கு வந்து சேர்ந்தான்.

வந்தவன் நேராக சென்று நெடுஞ்சாண்கிடையாக ராஜாவின் காலில் விழ, பதைபதைத்து ராஜா நான்கடி பின்னால் நகர்ந்தான்.

“டேய் என்னடா பண்ற... ரெண்டு பேரும் எப்படி டென்ஷன் ஆகறாங்க பாரு....”

“தெய்வமே... எங்க பக்கிக்கு வாழ்க்கை கொடுத்து எங்களை எல்லாம் அவளோட கொடுமைலேர்ந்து காப்பாத்த வந்த என் குல சாமியே நீர் வாழ்க... நின் குலம் வாழ்க....”, என்று படுத்தபடியே வசனம் பேச, பளாரென்று முதுகில் ஓங்கி ஒரு அடி போட்டாள் பாரதி.... ராஜா சிரித்தபடியே சாரங்கன் எழ கைக்கொடுக்க சுகுணா சமயலறைக்கு சென்று அனைவருக்கும் உண்ண எடுத்து வந்தார்.

“ஆன்ட்டி நீங்க எதுக்கு உங்க காலை வச்சுட்டு நடந்துட்டு இருக்கீங்க...  வலிக்க போகுது... கொடுங்க நான் எடுத்துட்டு வர்றேன்..”, சுகுணாவிடமிருந்து ட்ரேயை வாங்கி வந்து டீப்பாய் மேல் வைத்தான் சாரங்கன்.

“ரொம்ப விளையாட்டுப் பிள்ளையா இருக்கியேப்பா.... வந்த ஒரு நிமிஷத்துல ஒரு கலக்கு கலக்கிட்ட...”

“பாரதிக்கு நண்பன்னா இப்படி இருந்தாத்தான் பொழைக்க முடியும் ஆன்ட்டி.... இல்லைன்னா அவளுக்கு பேச்சு வந்த உடனேயே என்னை தவிட்டுக்கு யாருக்கானும் வித்திருப்பா...”,சாரங்கன் கூற பாரதி அவனை முறைக்கும் சதவிகிதம் தங்க விலைப்போல ஏறியது....

“பாருங்க பாருங்க.... இப்போக்கூட எப்படி முறைக்கிறா...”

“சரி விடுப்பா... நீ இங்க வந்து உக்காரு.... இந்தா ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ....”, சுகுணா கூற பாரதிக்கு கொக்கு கொக்கு காண்பித்தபடியே சாரங்கன் அங்கிருந்த பலகாரங்களை மொக்க ஆரம்பித்தான்... அவன் தலையில் ஒரு கொட்டு வைத்த பின்னரே அடுத்த இருக்கையில் சென்று அமர்ந்தாள் பாரதி.

“என்ன பாரதி.... ராஜா அவனைப் பத்தி உன்கிட்ட எல்லாம் சொன்னானா....”

“அதுக்கு முன்னாடி மாம்ஸ் நீங்க இவளைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டீங்களா.... பூலான்தேவிக்கு இவ ஏதோ தூரத்து சொந்தம் போல.... அவங்களோட நிறைய terror effect இவக்கிட்டயும் இருக்கும்.... துப்பாக்கி இல்லாத தீவிரவாதி இவ.....”

“இது என்ன மாம்ஸ்.....”,ராஜா புரியாமல் சாரங்கனிடம் கேட்க.

“அதுவா மாமாவோட இந்தக் கால ஸ்டைல் காலிங்....”

“ஓ ஓகே.... இப்போ நீங்க வர்றதுக்கு முன்னாடி அதைப்பத்திதான் பேசிட்டு இருந்தோம்....”

“நீங்க... யூ மீன் நீங்க என்னையவா இத்தனை மரியாதையா கூப்பிட்டீங்க.... எனக்கு அப்படியே புல்லரிச்சு போச்சு போங்க..... சும்மா வாடா, போடான்னே கூப்பிடுங்க மாம்ஸ்.... இந்தக் கொசுவே என்னை அப்படித்தான் கூப்பிடுது... அப்பறம் இப்படி அரவிந்த்சாமி மாதிரி இருக்கற நீங்க எப்படி இந்த அண்டாசட்டிகிட்ட விழுந்தீங்க....”, சாரங்கன் கேட்க, ‘செத்தடா நீ’, என்றபடியே அவனைத் துரத்த ஆரம்பித்தாள் பாரதி.

சுகுணாவிற்கும், ராஜாவிற்கும்தான் இருவரின் குடுமிபிடி சண்டையைப்  பார்த்து நாக்குத் தள்ளியது.... ஒரூ வழியாக இருவருக்கும் இடையில் ராஜா புகுந்து சில பல அடிகளை நடுவில் வாங்கி அவர்களை இழுத்து வந்து ஸோபாவில் அமர்த்தினான்....

“நீங்க ரெண்டு பேருமே நிஜமாவே லாயர்ஸா.... நீங்க நடந்துக்கறதைப் பார்த்தா கண்டிப்பா அப்படித் தெரியலை....”

“நம்புங்க மாம்ஸ்.... இப்போக்கூட எங்க வீட்டு மொட்டைமாடிக்குப் போனீங்கன்னா வடாத்தைக் காக்கா கொத்தாம இருக்க இவளோட வக்கீல் கௌன்னைத்தான் குச்சில பறக்க விட்டுட்டு வந்திருக்கேன்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.