(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 10 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

கார்த்திக் தெளிவாக இருந்தான். ரெண்டு வருசம் காதலை மட்டும் அனுபவிப்போம். வாழ்க்கையை பிறகு பார்ப்போம் என்று. அது வரை  கவனமா படிக்க மட்டும் செய்

அப்ப  ஏன்  கிஸ்ஸ்னு பக்கத்துல வரிங்களாம். அப்ப  படிப்பு  கெடாதோ

ஏண்டி  மனுசனை நடு  ராத்திரில கட்டி புடிச்சு கடுப்ப கிளப்ப வேண்டியது. பின்ன  ஒண்ணுமே  தெரியாத மாதிரி கேக்க வேண்டியது. நீ  பாஸ் பண்ற  அளவுக்கு படிச்சாலே போதும். அதுவும் க்லாஸ்சில திங்காம  தூங்கமா படிச்சாலே போதும். என் கிஸ் ஒண்ணும் செய்யாது. ஆனா நீ பாஸ் பண்றது கஸ்டம் தான் 

என்ன ஓ  ஆமா கீர்த்தி நீ  ஏன்  இப்படி சொல்ற என்னமோ நான் மட்டும் தான் கிஸ் னு பக்கத்துல வறேனு. நான் வரலைனா நீ  என்னமோ  அமைதியா இருக்குற  மாதிரி தான்.

இப்ப நீங்க வாய மூடலை அத்தையை கூப்டுவேன்

ஓ மேடம்க்கு  வெக்கமா  தயவு செஞ்சு சொல்லிட்டு படு  தாயே மயங்கி விழுந்துற  போறேன் ஏற்கனவே அந்த அழகுல அன்னைக்கு  மயங்குனவன் இன்னும்  எழுந்திருக்கல.ஆமா கீர்த்தி நீ  ஏன்  அப்றம் புடவையே கட்டவேயில்லை. ஆனா இன்னைக்கு  கட்டி இருக்க  சோ இன்னைக்கு  நான் வந்த உடனே ட்ரெஸ் மாத்து  சரியா என்று சொல்லி அவளிடம் கிள்ளு  வாங்கினான்.

காதலும் வளர்ந்தது அவள் சேட்டைகளும் தான். ஆனால் கடைசி வரை அவன் சமையல்  திறன் மட்டும் பூஜியம் தான்.

மாற்றி  மாற்றி  கார்த்திக்கும் வினொத்தும் தான் அவளுக்கு சமையல் செய்து கொடுத்தனர் சமையல் செய்வது கூட எனக்கு பெருசு இல்லை டா கார்த்திக் ஆனா உன் பொண்டாட்டி நம்ம செஞ்சு வைக்கிறதை தின்னுட்டு இப்படி செஞ்சி இருக்கலாம் அப்படி செஞ்சி இருக்கலாம் னு சொல்றது தான் தாங்க முடியவில்லை என்று புலம்பினான் 

அபர்ணா வினோத் காதலும் வளர்ந்தது அதே நேரம் வினொத்தும் தெளிவாய் இருந்தான் அவளை சலன படுத்த கூடாது என்று. அவளை பார்க்க வேண்டும் என்று தோணினால் வீட்டுக்கு செல்வான் ஒரு மணி நேரம் பேசுவான் வந்து விடுவான் இரவு மொபைலில்   பேசும் வழக்கத்தை நிறுத்தி விட்டான். அவள் முதலில் ஏன்  என்று கேட்டாள் ஆனால் தனக்காக தான் செய்கிறான் என்று புரிந்து அவளும் ஒத்து கொண்டாள்

கீர்த்தியை பாக்க  வீட்டுக்கு வரும் போது கிடைக்கும் தனிமையிலாவது தன்னை அவன் நெருங்குவான் என்று அபர்ணா நினைப்பாள் ஆனால் அப்பவும்  அவன் அருகில் வர மாட்டான். ஆனால் தனிமை கிடைக்கும் போது அவனை நெருங்கி நாலு திட்டு  திட்டுவாள் எதுக்கு டா அன்னைக்கு எனக்கு முத்தம் குடுத்த அதுவே ஞாபகம் வருது தெரியுமா 

அதே ஞாபகம் வர கூடாதுனு தான் டீ நான் உன்னை விட்டு விலகி இருக்கேன் 

போடா பரதேசி நீ கிஸ் குடுக்காத னால் தான் அப்படி எல்லாம் தோணுது 

அப்ப குடுக்கவா 

நீ  எல்லாம் பையனா வினோ எனக்கு சந்தேகமா இருக்கு அவன் அவன் என்ன என்னமோ செய்றாங்க நீ ஒரு கிஸ்க்கு இப்படி யோசிக்க வேண்டாம் அப்பு என்னை ஏத்தி விடாத நீ ஃபர்ஸ்ட் க்லாஸ் ல பாஸ் பண்ணுவனு சொல்லு நான் தரேன் 

போடா டேய் உன் கிஸ் எனக்கு வேண்டாம் நான் போறேன் 

அட பாவி பேச்சுகாவது சரி னு சொல்லுரியா

நான் படிப்பேன் அதுக்கு அப்புறம் எம் ஈ முடிப்பேன் காலேஜ்ல ப்ரொபசர் வேலைக்கு போகணும் அது என் ஆசை ஆனால் படிச்சா தான் தருவன்னா எனக்கு ஒண்ணும் வேண்டாம் உனக்கு ஆசையே இல்ல நான் தான் வெக்கத்தை விட்டு கேக்கேன் போ சண்டை

ஏண்டி எனக்கு மட்டும் ஆசை இல்லையா நானே என்னை கண்ட்ரோல் செஞ்சிட்டு இருக்கேன் ஆனால் இப்படி ஏத்தி விட்ட பிறகு சும்மா இருந்தால் உலகம் தப்பா பேசாது அதனால  என்று சொல்லி நெருங்கினான் 

அது வரை வாயடித்து கொண்டிருந்தவள் அமைதியாக தலை குனிந்தாள்

அருகில் வந்து அவள் முகத்தை நிமிர்த்தியவன் மென்மையாக அவள் இதழ்களை சிறை செய்தான் வேண்டும் என்று சொன்னவள் போதும் என்று சொல்லியும் அவன் விட வில்லை இவன் தான் இத்தனை நாள் அமைதியாக இருந்தவனா என்று எண்ணும்  படி இருந்தது அவன் செய்கை  

ப்படியே அனைவருடைய ஏக்கங்களும்  முடிவுக்கு வரும் வேலை வந்தது. இரண்டு வருடம் சென்றது தெரிய வில்லை. காதல் , கனவுகள், சேட்டைகள், சிணுங்கல்களோடு  முடிவடைந்தது.

முதல் முகூர்த்தத்திலெயே திருமணத்தை வைக்க சொல்லி விட்டான் வினோத். எதுக்கு வினு உடனே கொஞ்ச நாள் போகட்டுமே என்று அபர்ணா கேட்டதுக்கு என் கஸ்டம் எனக்கு தான் தெரியும். இதுக்கு மேல் காத்திருக்க முடியாது என்று சொல்லும் போதே அவன் பார்வை மாற்றத்தை புரிந்து கொண்டவள் வெக்கம்  என்னும் முக மூடியில் மறைந்து தான் சம்மதத்தை தெரிவித்தாள்

ன்று கல்லூரி கடைசி நாள். கார்த்திக்கு  சந்தோசம் ஏதேதோ கனவுகளுடன் கீர்த்தியை  தேடி வீட்டுக்கு வந்தவன் அங்கு அமர்ந்திருந்த தாத்தாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.