(Reading time: 15 - 30 minutes)

21. தொடர்கதை - சக்ர வியூகம் - சகி

Chakra Vyoogam

னைவருக்கும் பொதுவான ஸ்ருஷ்டி!உள்ளே விளைந்திருப்பதோ வஞ்சகமும்,பூசலும் மட்டுமே!!வலியவனுக்கு வலியவன் இங்கு உருவாகியப்படியே இருக்கிறான்.இன்றையக் காலக்கட்டத்தில்,வெற்றி என்பது நீதியையும்,சத்தியத்தையும் சார்ந்தது அல்ல!அது பொறாமைகளையும்,போட்டிகளையும் அடிப்படையாக கொண்டிருக்கிறது எனலாம்.நீண்டு வளர்க்கின்ற தாமரை மலரானது,அக்னிப் பிழம்பான ஆதவனிடத்தில் மையல் கொள்கிறது.ஆதவ ஔி அல்லையேல்,தாமரையானது தளர்வுற்று சிதைவுறுகிறது.குளிர்ச்சி நிறைந்த தாமரை,வெப்பத்தின் மீது எவ்வாறு மையல் கொள்கிறதோ,அதுபோலவே,மனித வாழ்வும்,இன்னல்களின் மேல் மையல் கொள்கிறது.என்னை எவரும் விரும்பவில்லை என்பர் பலர்!சற்றே சிந்தியுங்கள்...ஒருவரை வெறுக்கும் காரணத்தினால் தான் பூமாதேவியானவள்,வலிகள் தாங்கி நம்மை சுமக்கிறாளா??மனித மனம் என்றும் தன் மீது அகங்காரம் கொண்டு வாழும்!!அது அதன் இயல்பே!அதே அகங்காரம் சுயநலமாய் திரியும் போது குற்றங்கள் பெருகுவது உறுதி!!குற்றங்களை தடுக்க தேர்ந்தெடுக்கப்படும் ஒருவன் பல்வேறு இன்னல்களை கடக்க வேண்டும் என்பது நியதி!!உறுதியான நெஞ்சத்தினால் தான் எதிர்வரும் யாவற்றையும் அடக்கி ஆள இயலும் அல்லவா?மனிதனுக்கு இன்பம் என்றும் ஓய்வினை தர வல்லது!துன்பங்கள் மட்டுமே அவனை வலிமை மிக்கவனாக மாற்ற வல்லது!!

"கடைசியா கேட்கிறேன் மாயா!உனக்கு பிரதாப்பை பிடித்திருக்கா?இல்லையா?"-இறுதி வாய்ப்பை நல்கினான் அர்ஜூன்.

"பிடிக்கும் அர்ஜூன்!எனக்கு ருத்ராவை பிடிக்கும்!ஆனா,என்னால அவனை கல்யாணம் பண்ணிட்டு ஒரு சாதாரண மனைவியா வாழ முடியாது அர்ஜூன்."

"ஏன்??"

"காரணம்!என்னால குடும்பங்கிற ஒரு வட்டத்துக்குள்ள அடங்கி இருக்க முடியாது!நான் சுதந்திரமானவள்.என்னால ஒரு சராசரி மனைவியா அவன் கூட வாழ முடியாது!"

"ஆனா!பிரதாப் உனக்கு முழு சுதந்திரம் கொடுக்க தயாரா இருக்கான் மாயா!"

"அவன் என்ன தயாரா இருக்கிறது?நான் சம்மதிக்கணும்!"

"ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிற?ருத்ரா தன்னுடைய முதல் காதலை இழந்துட்டான்.இப்போ இரண்டாவது காதலும் கிடைக்கலைன்னா,அவன் ரொம்ப நொறுங்கிடுவான் மாயா!"

"பிடிவாதம்...!"-அவள் புன்னகைத்தாள்.

"என் பெயருக்கேற்ற மாதிரி நானும் மாயா தான் அர்ஜூன்!எல்லாரும் என்னை தன் கூட தக்க வைத்துக்க விரும்புவாங்க!ஆனா,நான் யாருக்கும் கிடைக்காதவள்!ருத்ராவோட முதல் காதல் அழிந்ததுக்கு நான் காரணமில்லை.அவன் என்னை விரும்புனதுக்கும் நான் பொறுப்பேற்க முடியாது.என் பிடிவாதம் உயிரோட இருக்கிற வரை,என்னால ருத்ராக்கூட சேர முடியாது!"

"போதும் நிறுத்து மாயா!"-கொதித்துவிட்டான் அவன்.

"பிடிவாதம்...பிடிவாதம்...என் சாதித்துவிட்ட அதனால?உன்னால எதையும் செய்ய முடியலை.உன் உயிரையே காப்பாற்றினவன் அவன்!ஒருமுறை இல்லை,இரண்டுமுறை காப்பாற்றி இருக்கான்.ஆனா நீ??இப்போ சொல்றேன் மாயா!நீங்க இரண்டுப் பேரும் ஒண்ணு சேராம இருந்தா தான் அவன் சந்தோஷமா இருப்பான்.அவன் வாழ்க்கையைவிட்டு நிரந்தரமா போயிடு!"-இரு கரம் கூப்பி அவளை வணங்கிவிட்டு வெளியேறினான் அர்ஜூன்.

அவளது இதழின் ஓரம் கசப்பான ஒரு புன்னகை வெளியானது!!அதில் ஔிந்திருந்த அர்த்தங்கள் யாவும் அவள் மட்டுமே அறிந்திருக்கலாம்!!

"துக்காகடா அவக்கிட்ட இப்படி பேசுன?"-தன் நண்பனின் சட்டையை பிடித்துக் கேட்டான் ருத்ரா.

"விடு பிரதாப்!எல்லாத்துக்கும் ஒரு அளவு உண்டு...மாயா அதை மீறிட்டா!காதல் அவளுக்கு விளையாட்டா போயிடுச்சுடா!பிடிவாதமாம் பெரிய பிடிவாதம்!"

"அர்ஜூன்...இதுக்கெல்லாம் மாயா கடந்து வந்த பாதை தான்டா காரணம்.மாயா எந்த ஒரு பொண்ணும் வாழ பயப்படுற நிலையை வாழ்ந்து காட்டி இருக்கா!நான் ஏற்கனவே காதலை இழந்தவன் அர்ஜூன்.எனக்கு இதுவும் பழகி போயிடும்!அவ சொன்னது உண்மைதான்.மாயாவும்,நானும் ஒண்ணு சேர்ந்தா எங்களால சந்தோஷமா வாழ முடியாது."

".............."

"விட்டுவிடு அர்ஜூன்!மாயா அவ விருப்பப்படி வாழட்டும்.தயவுசெய்து அவளை தர்மசங்கடமான நிலைக்கு தள்ள வேண்டாம்.அவளுக்கு அவளுடைய வாழ்க்கையை வாழ சகல உரிமையும் இருக்கு!நான் அதை பறிக்க விரும்பலை."

"பிரதாப்..."

"அவ வாழ்க்கையில யாரோவா வந்தேன்!யாரோவா போயிடுறேன் அர்ஜூன்!"-அவனது பேச்சுக்கு தடை விதித்தான் ருத்ரா.நிரந்தரமான தடை!!!

"தேவசேனா!"-குரல் கொடுத்தாள் மாயா.

"மா!"

"எங்கே அவங்க?"

"யாரும்மா?"

"..........."

"காயத்ரி??"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.