(Reading time: 15 - 30 minutes)

"அன்னிக்கு  வந்திருந்தாங்கல்ல,அவங்களைப் பார்த்துட்டு வரேன்னு போனாங்க!"

"மணி பத்தாகுது!ஏன் இன்னும் வரலை?சரி நீ போ!"

"சாப்பிடுறீங்களா?"

"இல்லை..பசிக்கலை!பால் மட்டும் எடுத்துட்டு வா!"

"சரிங்கம்மா!"-என்று விலகினாள் தேவசேனா.நேரம் கடந்தப்படி இருந்தது...மணி பதினொன்று!

பொறுமை இழந்தவள் அர்ஜூனுக்கு அழைப்பு விடுத்தாள்.அவனுக்கு தகவல் போகவில்லை!!

"ப்ச்...!ஒரு வார்த்தை சொல்லிட்டு போக கூடாதா?"-அவள் சிந்தித்தப்படி இருக்க,அவள் கைப்பேசிக்கு ஓர் அழைப்பு வந்தது!

"ஹலோ!மாயா மகேந்திரன்!"

"மாயா மகேந்திரன்!பெயரிலே என்ன கம்பீரம்?"

"யாரது?"

"கண்டுப்பிடிம்மா செல்லம்!கடைசியா வந்து எச்சரிக்கை கொடுத்துப் போனதை கொடுத்தவளே மறக்கலாமா?"

"ரகுராம்!"

"புத்திசாலிப் பொண்ணு!"

"என்ன வேணும் உனக்கு?"

"நீதான்டி!உன் உயிர் தான் வேணும்.உங்க அம்மாவை தேடிட்டு இருக்க போல?"

"............."

"அவளோட சேர்ந்து,உன் கூட பிறக்காத தங்கச்சி உயிரும்,உன்னை சொந்த பேத்தியா கவனித்தவள் உயிரும் போக விரும்புறீயா?"

"எங்கே வரணும்?"

"நேரா விஷயத்துக்கு வந்துட்ட?பிடித்திருக்கு..!மகேந்திரன் ரத்தம் தானே!அவனை மாதிரி தான் இருக்கும்!"

"எங்கே வரணும்?"

"வா!மகேந்திரகிரிக்கு உடனே வா!உங்கப்பா சமாதி பக்கத்திலே உனக்கும் சமாதி தயாராகுது!"-பட்டென இணைப்பு துண்டிக்கப்பட்டது!!சற்றும் தாமதிக்காமல் கிளம்பினாள் அவள்.இருள் சூழ்ந்த பாதையை கிழித்துக் கொண்டு விரைந்தது அவளது கார்!!!விரைவாக,மிக விரைவாக தனது இலக்கை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தது!!அது வாழ்வியல் இலக்காகவும் இருக்கலாம்!பிறப்பின் நோக்கமாகவும் திரியலாம்!யார் அறிவார் காலச்சக்கரத்தின் கோட்பாட்டினை??

"துக்காக எங்களை இங்கே பிடித்து வைத்திருக்கீங்க?இந்த விஷயம் மாமாவுக்கு தெரிந்தா என்ன ஆகும்னு தெரியுமா?"

"யாரு ருத்ராவா?ச்சே...!அவனை வைத்து என்ன எல்லாம் பிளான் பண்ணேன் தெரியுமா?பிசினஸ் விஷயமா மாயா வாழ்க்கையில அவனை நுழைய வைத்தேன்!அவங்க இரண்டு பேரையும் எதிரியா உருமாற்றினேன்.மாயாவை கொல்ல சொல்லி ஆள் அனுப்பி பழியை ருத்ரா பெயரில் போட வைத்தேன்!அதனால,மாயா அழியணும்னு நினைத்தேன்.ஆனா,இந்த காதல்..என் சதியை எல்லாம் உடைத்துடுச்சு!"-அதிர்ந்துப் போனாள் மித்ரா.

"என்ன பண்ணிடுவான் அவன்?அவனுடைய வயசு என் அனுபவம்!இன்னும் கொஞ்ச நேரத்துல மாயா கதையையும்,காயத்ரி கதையையும் முடித்துவிட்டு உங்களை தோணுச்சுன்னா விட்டுவிடுறேன்!"

"எதுக்காகஅவங்களை சித்ரவதை பண்ற?உனக்கு என் உயிர் தானே வேணும்!என்னை கொன்னுடு!அவங்களை விட்டுவிடு!"

"ச்சீ..வாயை மூடு!உன்னால நான் என்ன சந்தோஷம் அனுபவித்தேன்?நீயும் எனக்கு கிடைக்கலை!உன் சொத்தும் எனக்கு கிடைக்கலை!இன்னும் அந்த மகேந்திரன் தானே உன் மனசுல இருக்கான்?அதனால தானே என்னை உன் நிழலை கூட நீ நெருங்கவிட்டதில்லை?நானும் அந்தச் சொத்துக்காக பொறுமையா இருந்தா,இப்போ அதுக்கும் உன் பொண்ணு தடையா வந்து நின்னுட்டா!இனியும் என்னால பொறுமையா இருக்க முடியாது!உனக்கு அவனை தானே பிடிக்கும்!அதான் அவனுக்கு பக்கத்திலே சமாதி பக்கத்திலே உனக்கும் சமாதி தயார் பண்ணிட்டேன்!"

"இதோ உன் பொண்ணு உன்னைத்தேடி வந்துட்டே இருக்கா!கொஞ்ச நேரம் தான்!"-அவர் ஆணவத்தில் ஆற்றிய உரை நடுவே இசைத்தது மாயாவின் வருகை!!

"அடடா!வந்துட்டா பாரேன்!"-காரிலிருந்து கீழே இறங்கினாள் மாயா.

"அப்படியே மகேந்திரன்கிட்ட இருக்க அதே தைரியம்!"-காயத்ரியின் மனதில் ஒருவித திகில் பரவியது!!

"மாயா!இங்கே வராதேம்மா!"-கண்ணீருடன் எச்சரித்தார் அவர்.

அவளோ இறுகிய முகத்துடன் முன்னேறினாள்.

"உனக்கு தைரியம் மாயா!ரொம்ப தைரியம் அதிகம்!"

"உனக்கு நான் தானே வேணும்!அவங்களை விடு!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.