(Reading time: 12 - 24 minutes)

12. சர்வதோபத்ர... வியூகம்...!!! - வசுமதி

Savathopathra... Viyoogam

ருளையுடைத்து ஆதித்யன் அதிவேகமாய் அன்றைய நாடகத்தைக் காண அவதரித்துக் கொண்டிருந்தான்.. சிற்பக் கோயிலின் உச்சியை அடைந்தவன் அவ்வதிகாலை வேளை உள்ளிருப்பவர் யார் என்பதறிய தன் கண்களை பாய்ச்சினான் உள்ளே..

ரு ஜோடி கண்கள் அங்கிருந்த சிலைகளை ரசித்துக் கொண்டிருக்க ஒரு ஜோடி கண்கள் அந்த சிலைகளை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது..

“மயா.. இந்த பெண் சிலையில் இருக்கும் கம்மலை பாரேன்..ரொம்ப நேச்சுரலா செதுக்கி இருக்காங்கல..”,என்ற க்ரியா மயாவின் புருவ முடிச்சைக் கண்டு என்னவென்பது போல் சைகையால் கேட்டாள்..

“இங்கு இருக்கும் எல்லா சிலையையும் ரொம்ப நுணுக்கமா செதுக்கி இருக்கறவங்க ஏன் எல்லாவற்றிலும் சிறு குறையை விட்டிருக்காங்க..?? அதுதான் யோசிச்சிட்டு இருந்தேன்..”

“சீக்கிரம் எதுக்குன்னு கண்டுபிடிச்சரலாம் டார்லிங்..ரொம்ப யோசிக்காதீங்க..”,என்ற க்ரியா ஒரு சிலையை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த தியாவிடம்,”தியூ..நீ என்னத்தை இவ்ளோ சீரியஸா பார்த்திட்டு இருக்க..??”,என்று கேட்டாள்..

“இந்த சிலையோட கண்கள் ஏதோ ஒரு இடத்தை கூர்ந்து பார்ப்பது போல் இருக்கின்றது..அதான் பார்த்திட்டு இருக்கேன்..”

அந்த சிலையை உற்று பார்த்த க்ரியா வியப்புடன்,“யா தியூ.. இந்த கண்கள் எதையோ உற்றுப் பார்ப்பதுபோல் இருக்கு..ஆனால் எந்த திசையை பார்க்குதுன்னு தெரியலையே..”

“எந்த திசையில் நின்று பார்த்தாலும் இது நம்மையே பார்ப்பது போல் இருக்கு..அதான் கொஞ்சம் குழப்பமா இருக்கு..”,என்றாள் தியா..

“இந்த சிலையுடைய கண்களைப் போல் வேறு சிலைகள் இருக்கான்னு பார்க்கலாம்..ஏதாவது தெளிவு கிடைக்கும்..”,என்றாள் மயா..

“கரெக்ட்..நானும் அது தான் நினைத்தேன்..”,என்றாள் தியா..

“இது முழுமையடைந்த சிலை தானே..?? ஒருவேளை முழுமையடைந்த சிலைகளை  மட்டும் இப்படி செதுக்கி இருக்கின்றார்களோ என்னவோ..??”,என்று சந்தேகமாக இழுத்தாள் க்ரியா..

“மே பீ இருக்கலாம்.. ஆமாம்.. பசங்க எல்லாம் எங்க..??”,என்று கேட்டாள் தியா..

“அவங்க பின்னாடி இருக்க மண்டபத்துல இந்த ஆறு சிலைகளோட ஸ்கெட்ச்சை பற்றி டிஸ்க்கஸ் பண்ணிட்டு இருக்காங்க..கூப்பிடனுமா..??”,என்றாள் மயா..

“இல்லை இப்போ வேண்டாம்..முதலில் முழுமையடைந்த சிலைகளை செக் செய்து பார்ப்போம்..சப்போஸ் அதில் இது போன்ற கண்கள் இல்லை என்றால் அவர்களை அழைத்து மற்ற சிலைகளையும் செக் செய்து பார்க்கலாம்..”,என்ற தியா சிலைகளை பார்வையிடத் துவங்கினாள்..

இம்மூன்று பெண்களின் கெஸ் சரியே.. முதல் சிலையை போல் மற்ற ஐந்து சிலைகளின் கண்களும் எதையோ நோக்குவது போல் இருந்தது..

ஒரு குதூகலதுடன் இதனை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்ட மயா அனைவரும் அங்கு அழைத்து வந்தாள்..

சிலைகளைப் பார்வையிட்ட மற்றவர்களும் ஒரு சில நிமிடங்கள் அவற்றை பார்வையிட்டு அதன் பார்வை கருவறையை நோக்கி இருப்பதை போல் உணர்ந்தனர்..

“நாம் ஏன் கருவறைக்கு சென்று ஏதாவது க்ளூ இருக்கான்னு பார்க்க கூடாது..??”,என்ற சுஜன் கருவறையை நோக்கி முன்னேறத் துடங்கினான்..

“இந்த கருவறையில் தான் ஒன்னும் இல்லையே..அங்க என்ன க்ளூ கிடைக்கப் போகுது..”,என்று வினவினான் ரிக்கி..

அவனது கேள்வியில் சலனமுற்ற அனைவரும் ஒரு நிமிடம் ஒருவரையொருவர் அவன் கூறுவது உண்மைதானே என்பது போல் பார்த்துக்கொண்டனர்..

ரிக்கி..உனக்கு அப்பப்போ கிட்னி வேலைசெய்யுது..”,என்று அவனின் சிகையை கலைத்த வண்ணம் வாரியது அகிலன்..

அனைவரும் தனது வார்த்தைகளைக் கேட்டு கொலைவெறியுடன் நோக்குவதை சட்டை செய்யாது,”இந்த சிலைகளுக்குள் கண்கள் மட்டும் தான் ஒன்று போல் இருக்கா..??”,என்று அவர்களை பார்த்து வினவியது அகிலன்..

“நாங்க பார்த்தவரைக்கும் கண்கள் மட்டும் தான் ஒற்றுமையாக இருக்கு..”,என்றான் எழில் அதனை முறைத்தவண்ணம்..

சகசாட்சிகாழ் திலகத்தில் ; பாணியை அயில் சேர் ; ஆறினை சினைகள் திலகத்தில்; வில்லும் ஞாயிறில்..”,என்றபடி பறந்து சென்றது அந்த சேட்டைக்காரன்..

“இது என்ன உளறிக்கிட்டுப் போகுது..”,என்றபடி கடுகடுத்தான் எழில் அகிலன் மீதிருந்த கோபத்தால்..

“ஷ்..எழில் வெயிட் அது உளறவில்லை.. க்ளூ கொடுத்திருக்கு..”,என்ற க்ரியா அதன் வார்த்தைகளை ஒரு காகிதத்தில் வரி வடிவமாக்கி அனைவருக்கும் வாசித்துக் காண்பித்தாள்..

“சகசாட்சி ஒரு பெர்சனை குறிக்குதா..?? ஐ மீன் அ பெர்சன் ஹு இஸ் அ விட்னெஸ்..”,என்று கேட்டான் ரிக்கி..

“இல்லை ரிக்கி.. சகசாட்சினா சூரியன்னு நினைக்கிறேன்..”,என்றான் விக்கி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.