(Reading time: 9 - 18 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 16 - தேவி

vizhikalile kadhal vizha

செழியன் கொடுத்த கிப்ட் கவர் அங்கேயே பிரித்து பார்த்தவள் தன் கண்களையே நம்ப முடியாமல் கண்ணை சிமிட்டினாள். அந்த கவர் பாக் பண்ணிய விதம் பார்த்து அது ஏதோ பெயிண்ட்டிங் என்று யூகித்தாள். ஆனால் அதில் தன்னை பார்த்து அசந்து நின்றாள். அவளும் செழியனும் சந்தித்து கொண்ட அந்த முதல் நாள் சம்பவத்தை வரைந்து இருந்தான்.

அவளின் ஸ்கூட்டி மரத்தின் அடியில் நிற்க , அதற்கு எதிர் திசையில் நடந்து வரும் மலர். அவள் ஹெல்மெட் கழற்றாமல் அந்த கிளாஸ் மட்டும் ஏற்றி விட்ட போஸில் வரைந்து இருந்தது. அவளின் ஸ்கூட்டி நிறம், நம்பர் பலகை, அவளின் ஸ்கூட்டியில் செய்து இருந்த டெட்டி பியர், டோரா பெயிண்ட்  எல்லாம் அப்படியே இருந்தது. மலர் அன்று உடுத்தி இருந்த புடவை, அதன் மேல் அணிந்து இருந்த சட்டை நிறம் எல்லாம் தத்ரூபமாக இருந்தது.

அதிலும் அந்த விழிகளின் பாவம் .. ப்பா.. என்று சொல்ல வைத்து. அன்றைக்கு இருந்த தர்மசங்கடமான நிலையும், அதே சமயம் ஒரு ரசிக்கும் பாவமும் கலந்து இருந்த அந்த விழிகள் வரையப்பட்டு இருந்த விதம் கண்டவள் தன்னை மறந்து சற்று நேரம் நின்று விட்டாள்.

முதல் வியப்பு விலகி, செழியனை பார்த்தவள்

“அற்புதம் இளா.. “ என , இப்போது அதிர்வது செழியனின் முறை ஆனது.

“விழி.. உனக்கு எப்படி இந்த பெயர் தெரியும்..?”

“நீங்கள் சொல்லா விட்டால் யாருக்கும் தெரியாதா?”

“வாய்ப்பு மிகவும் குறைவு மலர். நான் என்னை அறிமுகபடுத்தி கொள்ளும் போது வெறும் செழியன் மட்டும் தான் எல்லோரிடமும் சொல்லுவேன்.. என் சர்டிபிகேட் எல்லாமே அந்த பெயர் மட்டும் தான் இருக்கும்.. “

“அது ஏன் .. உங்கள் முழு பெயர் சொல்வதில்லை? எதுவும் காரணம் உண்டா?”

“பெரிதாக ஒன்றும் இல்லை.. நண்பர்கள் இளா என்று அழைக்காமல் செழியன் என்று அழைக்கவே நானும் டென்த் எக்ஸாம் எழுதும் போது அந்த பெயர் கொடுத்து விட்டேன். அதன் பிறகு ஒன்று போல் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றிலும் அதே பெயர் மாற்றி விட்டேன். அதனால் இங்கேயும் எல்லாருக்கும் அந்த பெயர் தான் தெரியும்.. உனக்கு மட்டும் எப்படி தெரிந்தது.. ?”

 “உங்க பெயிண்ட்டிங்லே கையொப்பம்... என்ன போட்டு இருக்கீங்க.. பாருங்க..” என

அதை பார்த்தவன்

“வாவ்.. நானே இதை எதிர்பார்க்கலை மலர்.. இது எப்போதும் செய்வது தான் என்றாலும் , மற்றபடி எல்லோருக்கும் நான் செழியன்.. இது உன் கண்ணில் பட்டு, நீ தனியாக அழைக்க வாகாக அமைந்தது என் அதிர்ஷ்டம் & ரொம்ப சந்தோஷம் விழி..” என்றவன்..

“சரி.. பெயிண்ட்டிங் பத்தி என்னவோ சொல்ல வந்தியே ?” என

“அற்புதமான படைப்பு இளா ... எப்படி உங்களுக்கு இந்த படம் வரையும் போது  எல்லா விஷயமும் நியாபகம் இருந்தது.. ?”

“என் கண்ணுக்குள் நிற்கின்ற என் தேவதையான உன்னை வரைவது கஷ்டமா என்ன?”

அவனின் வார்த்தைகளில் மகிழ்ந்தாலும், தன் குறும்பு குறையாமல்

“பார்த்து செழியன் சார்.. வெயிட் தாங்காமல் உடைந்து விட கூடும். கண்ணுக்கு டம்பர் கிளாஸ் போட்டு விடுங்கள்..” என்று உரைக்க,

செழியனோ “நோ.. ப்ரோப்லேம்.. டியர்.. டம்பர் கிளாஸ் ஓட சேர்த்து ஸ்க்ராட்ச் கார்டும் போட்டுட்டேன்.. “ என்று சிரித்தான்.. அவனின் பதிலை கேட்டு மலரும் சற்று சிரித்தவள், பிறகு,

“ரொம்ப நல்லா இருக்கு இளா.. என்னுடைய சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல முடியல.. தேங்க்ஸ் பெயிண்ட்டின்கிற்கும் அந்த ஸ்வீட் மெமொரீஸ்க்கு உருவம் கொடுத்ததற்கும்... ரொம்ப தேங்க்ஸ்..”

“ஹேய்.. விழி.. தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம்.. என்னுடைய இன்ப, துன்பம் எல்லாம் உன்கிட்ட ஷேர் பண்ண விருப்பப்படும் போது, இது என் லைப் லைன் போன்ற சம்பவம்.. உன்னை என் வாழ்க்கை ஆக பார்க்க வைத்த இச்சம்பவம் என் மனதில் என்றும் அழியாமல் இருக்கும்.. அந்த இன்பத்தை உன்கிட்ட ஷேர் பண்ண தான் உனக்கு கிப்ட் ஆ கொடுத்தேன்..” என்று முடித்தவன்,

“மலர்.. டைம் ஆயிடுச்சு.. வீட்டில் தேடுவார்கள்.. கிளம்பு..”

“வருகிறேன் செழியன்.. “ என்றபடி கிளம்பினாள்.

ருவரும் வெளியில் சாதரணாமாக இருந்தாலும் உள்ளுக்குள் உற்சாகமாக இருந்தனர். செழியன் எண்ணம் எல்லாம் அவளிடம் உள்ள அன்பை சொல்லி, அதற்கு அவளின் பதிலும் கிடைத்தது என்பது அவனை பொறுத்தவரை எதிர்பார்க்காத புதையல் தான்.. அவன் சொல்லும்போது  அவளின் பதில் யோசித்து சொல்வதாக சொல்லுவாள் என்ற எண்ணம் தான். அவளும் தன்னை விரும்புகிறாள் என்பது துள்ளி குதிக்க தூண்டியது.

அங்கே மலரின் நிலையும் அதுவே.. வீட்டிற்கு செல்லும் வழி எங்கும் செழியனின் அன்பும், அதற்கு தன் பதிலும் தான்.. அவளால் நம்பவே முடியவில்லை.. அவனின் கேள்விக்கு எப்படி தன் மனம் தன்னை அறியாமல் அவளை காட்டிக் கொடுத்தது என்று புரிய வில்லை..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.