(Reading time: 23 - 46 minutes)

12. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

முழுநிலவின் பாலொளியில் இரவு வானம் மின்னியது. அந்த நெடுஞ்சாலையில் காரை அதிவிரைவாய் செலுத்தியவனின் உள்ளத்தில் முன்னும் பின்னும்மாய் முரண்பாடுகள். காவ்யா இவ்வளவு எளிதாய் தன்னை ஏற்பாள் என ரிஷி நினைக்கவில்லை. இது ஒரு வகையில் அவளை குழப்பி, பின் தெளிய வைக்கும் முயற்சி. ரிஷியைப்பொருத்தவரையில் அவனுக்கு காவ்யா வேண்டும், இவ்வளவு நாள் தனிமையின் பரிசாய், ஒரு தோழமையாய், காதலாய், அவனது ஆண்மையை நெகிழ வைக்கும் உன்னத உறவாய் காவ்யா வேண்டும். சம்பந்தத்துடனான ஒப்பந்தத்திற்காக அவர் இல்லம் சென்ற நாள் இப்போது அவனுக்கு ஞாபகம் வந்தது. கண்கள் கார் கண்ணாடியின் ஊடே சாலையை இரசித்திருந்தாலும் உள்ளம் முழுக்க குறும்பு தவழும் காவ்யாவின் முகம் தான். அன்று சம்பந்தத்தின் இல்லத்திற்குள் அவன் நுழையும்போது, அது காவ்யாவின் பிறந்தநாள் விருந்து. அந்த வீட்டின் அன்றைய விழாபற்றி அறிந்ததும் அவனுக்கு எரிச்சல் தான் வந்தது. அவனைப் பொருத்தவரையில் அன்றைய நாள் வீண் என அப்போது தோன்றியது. தன் மகளின் பிறந்தநாளுக்கு இவனை சம்பந்தம் அழைத்திருக்கிறார், என்று தெரிந்தால் இவன் அன்று அங்கு வந்திருக்கவே மாட்டான்.

கையில் இருந்த பூங்கொத்துடன் அவன் உள்ளே நுழையும்போது, காவ்யாவின் தோளைப்பற்றி நின்று சம்பந்தம் யாருடனோ உரையாடிக்கொண்டிருக்க, இவன் அவளை பார்க்கும்போது, சிறு பெண்ணாய் கீர்த்தனாவுடன் விளையாடிய காவ்யா இவள்? என தோன்றியது, இந்த பெண்கள் ஏன் இப்படி சீக்கிரமாய் வளர்ந்து கண்களுக்கு வினையாய் நிற்கிறார்கள் எனத் தோன்றியது. அவன் கையில் வைத்திருந்த பூங்கொத்தை வேலையாளின் கையில் கொடுத்து அவளிடம் கொடுக்க சொல்லிவிட்டு அவளது முகமலர்ச்சியை நிதானமாய் இரசித்தான்.

சம்பந்தத்தின் கைகளில் இருந்து விடுபட்ட அவள், அவனை நோக்கி வரும்போது ஏனோ அவனுக்கு அவளை எதிர்கொள்ள முடியவில்லை, கையில் ஓரு கோப்பை ஆரஞ்சு பழசாறுடன் விலகி நின்று இவளை இரசித்தான். கண்களை உருட்டி அவள் பேசும்போதும், தன் வீட்டு வேலையாட்களை மரியாதையாய் நடத்திய பாங்கும், எல்லாரையும், சாப்பிட சொல்லிய பண்பும், இதையெல்லாம் விட, கொஞ்சம் சிறியவளாய், ஆனால் அழகாய், புடவையில் சின்ன சிற்பமாய் நின்றவள் இவன் கண்களுள் விழுந்து முழுவதுமாய் சலனப்படுத்திவிட்டாள். காவ்யாவைப் பற்றி கொஞ்ச கொஞ்சமாய் அறிய முற்படும்போது, இவன் அறிந்துகொண்டது அவனை திகைக்க வைத்தது. முதல் நாள் தோன்றிய ஈர்ப்பு அவளை பின் தொடரும் நாட்களில், காதலாகிப்போனது.

அந்த காதலை அவன் உணர்ந்துகொண்டபோது, அதை கொஞ்சமும் தயங்காது சம்பந்தத்திடம் அவன் எடுத்துரைக்க, அவர் தான் முதலில் தயங்கினார், இறுதியில் அவனது அத்தை அருந்ததி சம்பந்தத்தையும், மீராவையும் சந்தித்து பேசிய மறுநாள் இவர்களது வீட்டு பெண்ணாக மாறிவிட்டாள் காவ்யா!

இப்போதும் உள்ளம் தித்தித்தது. அவளுடனேயே இருக்க உள்ளம் விரும்பியது, அடித்து துரத்தாத விதமாய் அவள் இவனை வீட்டுக்குபோக சொன்னது நினைவு வர, முகத்தில் புன்னகை அரும்பியது. இவளை வீட்டில் விட்டு அவளது காதலை மனதில் சுமந்துகொண்டு இரவு காரை செலுத்திக்கொண்டிருந்தவனின் கண்களில் தூரத்தில் யாரோ ஒருவர் சாலையில் விழுந்துகிடப்பதுபோல் இருக்க, மெதுவாய் காரை செலுத்தி, அவர் அருகே கொண்டு நிறுத்தினான், அந்த நபர் சாலையின் ஓரத்தில் குப்புற கிடந்தார், இவன் வண்டியை நிறுத்தி இரங்கி, கீழேக் கிடந்தவரின் அருகே சென்று அவர் தோளை தொடும்பொது, ரிஷியின் பின் தலையில் நச்சென்றுவிழிந்தது ஒர் அடி, அவன் திரும்பும்போது நெற்றியில் விழுந்தது இன்னும் ஒரு அடி, அடுத்த அடி அவன் மீது விழும்போது அதை தடுக்க நினைக்கும்போது அவன் கையில் ஓங்கி விழுந்தது இன்னொரு அடி.

அடித்த தடியை இவன் அழுத்தி பிடிக்க அது ஒரு ஹாக்கி ஸ்டிக் என புரிகிறது, ஆனால் தலையில் விழுந்த அறைக்கு கண்கள் சொருகி, மயங்கி சரிந்தான். ஒரு சில நிமிடங்களில் நடந்தது அந்த நிகழ்வு, மயக்கத்திலும் அவனது மூளை தன்னை தாக்கியவனின் செயலையும், நிழலாக தெரிந்த அந்த உருவங்களையும் பதியவைத்துக் கொண்டது. முழுவதுமாய் நினைவு மங்கும்போது தீப்பொறியாய் ஓர் நினைவு, அர்த்த இராத்திரியில், இவன் தோள் தழுவி நின்ற செல்வியின் முகம், அவளை தோட நினைத்த கையை முறித்து இவன் தாக்கிய நினைவு, அதே கரம், இவன் துப்பாக்கிதோட்டாக்கு பயந்து ஓடிய கூட்டம், இப்போது தனியாய் அவர்களுக்கு இறையாய் இவன் சிக்கியிருக்கிறான், இத்தனையும் முழுவதாய் ஞாபகம் வரும் முன் அவன் மயங்கிசரிந்தான்.

அவனைக்காயப்படுத்தியக் கூட்டம் விரைவாய் அவனது பேண்ட்பாக்கெட்டைத் தூழாவியது, அடுத்து திறந்திருந்த காரின் டேஷ்போர்டில் எதையோ தேடிவிட்டு கிடைக்காதுபோக, அரை மயக்கத்தில் கிடந்தவனின் காலில் இன்னொரு அடி அடிக்க வலியில் இவனிடம் மெல்லிய அசைவு. அவன் தலையில் விழயிருந்த இன்னொரு அடியை விதி தடுத்து அவன் உயிரைக்காத்தது. வெகு அருகில் கேட்ட, இரவு நேர காவல் துறையினரின் ரோந்து வண்டி சயரன், அந்த கூட்டத்தை நடுங்க செய்தது, அவர்கள் ஒரு புதருள் பதுங்க, அடுத்த ஐந்து நிமிடத்தில் இரத்தக் காயத்துடன் கிடந்த ரிஷியை காவல்துறை கவனமாய் மருத்தவமணைக்கு எடுத்து செல்ல, அவனுக்கு ஞாபகம் வரும்போது தலையில் ஒரு கட்டு, காலில் இன்னும் காயங்கள், வலது கையிலும், கால் பாதத்திலும் மயிரிழை பிளவு, அவனுடைய நிலையைப் புரிந்து அவன் முதலில் அவனது ட்ரைவர் கோபியை அழைக்க, காவல் துறையினருக்கு வேண்டிய தகவலை அளித்துவிட்டு, மருத்துவமணையில் முதலுதவியும், சிகிச்சையும் பெற்றுக்கொண்டு இரவோடு இரவாக அவன் தன்னுடைய கெஸ்ட் கவுஸை அடைந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.