(Reading time: 23 - 46 minutes)

 “யாருக்கும் உதவி செய்ற அளவுக்கு என்னோட மனநிலைமை இல்ல!” இப்படி சொல்லவேண்டும் போலிருந்தது செல்விக்கு. ஏனோ, விக்னேஷின் முகத்திற்கு முன் அவனை உதாசினப்படுத்தவோ, காயப்படுத்தவோ, இல்லை அதிகாரமாய் பேசவோ அவளால் முடியாதுதான். “எனக்கு விருப்பமில்லன்னா என்ன ஃபோர்ஸ் பன்னமாட்டீங்கன்னு நினைக்கேன்!” அமைதியாய் சொன்னாள். இவளையே பார்த்துகொண்டிருக்க வேண்டும்போலிருந்தது அவனுக்கு. “மாட்டேன், ஆனா செல்வி, எனக்காக இதை நீ நிச்சயம் செய்வ!” அதிகப்படியான உரிமையை அவளிடம் எடுத்துக்கொள்வதாய் அவனுக்கு எப்போதும் தோன்றியது இல்லை. செல்வி அதற்கு அந்த பதிலும் சொல்லவில்லை. அந்த மௌனம் கூட அழகாய் இருந்ததாய் அவனுக்கு தோன்றியது.

இவன் காரை நிதானமாக செலுத்தி, ஓர் சிறிய பங்க்ளாவின் முன் நிறுத்தினான், இவள் இறங்கி அந்த இடத்தின் அழகை இரசித்தாள், சிறியதாய் ஆனால் அழகாய் இருந்த வீடு, அழகுக்காக மட்டும் அமைக்கப்பட்ட தோட்டம், சிறிய கல் இருக்கைகளும் அதன் அருகே முன் விளக்குகளும், அப்போது தான் விடியல் தொடங்கியிருந்ததால் இன்னும் மலர்களில் பனித்துளிகள் நின்றிருந்தது. அவன் வழிகாட்ட நிதானமாய் அந்த புல் தரையின் ஊடே பதிக்கப்பட்ட கல் பாதையில் நடந்தாள். ஓர் அறையின் உள்ளே நுழையும்போது மாறனின் குரல் கனிரெனக் கேட்டது. விக்னேஷ் அந்தக் கதவை விரலைக்கொண்டு இரு முறைத்தட்ட,

“டேய், வாடா, உனக்கு தான் வெயிட்டிங்க்!” – அது ரிஷியின் குரல். இவளுக்கு இதயம் ஒரு முறை நின்றுத்துடித்தது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரன், முகம் மறக்ககூடாதென பல நாள் இவள் தூங்காது கவனமாய் மனதில் பதித்திருந்தவனின் முகம், கான ஒரு அடி முன் வைத்தவள், தயங்கி விக்னேஷின் முகம் பார்த்தாள், இவளையேப் பார்த்திருந்தவன், இப்போது புன்னகைத்தான்.

கதவைத்திறந்து அந்த சிறியப் படுக்கை அறையுள் நுழையும்போது, ரிஷி மெத்தையில் சாய்வாய் தலையணை வைத்து அமர்ந்திருந்தான். இவளுக்குதான் எத்தனை எத்தனை எண்ணங்கள். தலையில் சிறியக்கட்டு அவன் நெற்றியை மறைத்து பிடரி முடிக்கற்றைக்குள் இருத்திக்கட்டப்பட்டிருந்தது. இரு கால்களையும் நீட்டி, ஒன்றை ஒரு தலையணைமேல் வைத்திருந்தான், அதிலும் ஓர் காலில் அடிப்பட்டதற்கு அடையாளமாய் ஒர் வெள்ளைக்கட்டு. இவள் அவனை பார்க்கும்போது, மாறனிடம் குனிந்து ஒரு கோப்பைக்காட்டி எதையோ பேசிக்கொண்டிருந்தான், இவளுக்கு தொண்டை வரண்டு போயிற்று. இப்போதும் அழகாய் இருந்தான். அந்த அழகைத்தாண்டி அர்த்த இராத்திரியில், பெரும் ஆபத்தில் சிக்குண்டிருந்தவளின் மானத்தைக்காத்த ஆபத்பாந்தவன் ஆயிற்றே. இவனுக்கு என்ன ஆயிற்று உள்ளம் பதறியது. உண்மையில் எங்கோ வலித்தது.

நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் விரிந்தது, இவளை அவனிற்கு நினைவிருக்கிறதா? கேட்டுவிட வேண்டும்போலிருந்தது செல்விக்கு,  ஆனால் வார்த்தை ஏதும் வரவில்லை. குனிந்திருந்தவளை ரிஷியின் குரல் கரைத்தது. “வாட் எ சர்ப்ரைஸ், வாங்க வாங்க…, இலா, சிஸ்டர் வர்றாங்கன்னு நீங்க சொல்லவே இல்ல!” இப்போது அடி பட்டதுபோல் வலி, இவளை இலாவின் தங்கையாய், அவனுக்கு தெரிகிறது.

“டேய் விக்கி ஃபைனலா உன் ஆளா கூட்டிட்டு வர்றதுக்கு நான் இப்படி செமத்தையா வாங்கி கட்டனும்னு இருக்கு!” – எல்லா பற்களும் பளிச்சென தெரிய சிரித்தான், அவனைத் தவிர எல்லாரும் மௌனமாய். “ஏய், ப்ளீஸ் என்னயிது, இப்படி எல்லாரும் சோகமா மூஞ்சிய வச்சா எனக்கு ரொம்ப டிப்ரஸ்டா இருக்கு!” பாவமாய் முகத்தை வைத்து சொன்னான்.

“என்னச்சுங்க, எப்படி அடி பட்டுச்சு!” உண்மையான பதற்றத்துடன் செல்வி நிமிர்ந்து அவன் முகம் பார்த்து கேட்டாள்.

“அத கேளு செல்வி, நாங்களும் இரண்டு மணிநேரமா இத தான் கேட்கிறோம் பதிலே சொல்ல மாட்டிகிறான்.” - விக்னேஷ்

“ஹேய், என்னடா வந்தவுடனே சிஸ்டர்கிட்ட கம்ப்ளைன்டா?” – ரிஷி

“ப்ளீஸ் என்ன செல்வினு கூப்பிடுங்க சார்!” –செல்வி

ஒரு நொடி மௌனம், பின் அனைவரும் சிரிக்க, “செல்வி உங்கக்கிட்ட எனக்கு பிடிச்சது இதுதான், கூர்மையான பேச்சு, ஐ லைக் இட், நீங்களும் என்ன ரிஷினே கூப்பிடலாம், ஐயம் ஹேப்பி அபௌட் இட்!”

“எப்படி அடிபட்டுச்சு ரிஷி..ஏன் ப்ராப்பரா கட்டு போடல?” செல்வியின் கவனம் முழுவதும் அவன் காயங்கள் மேல் தான் இருந்தது. விக்னேஷும் ரிஷியும் ஒருவரை ஒருவர் பார்த்து ஒர் சின்ன புன்னகையை பரிமாறிக்கொண்டனர்.

“செல்வி நீங்க உண்மையிலே செம ப்ரவஷ்னல்! இந்த கூட்டத்த முதல கலச்சுட்டு அப்புறம் நாம ஃப்ரீயா பேசலாம்! இது ஒரு சின்ன ஆக்சிடன்ட், நல்ல விடிஞ்சவுடனே ஹாட்ப்பிட்டல் போகலம்னு நினைச்சேன், இப்போதைக்கு ஐ ஹேடு ஃபர்ஸ்ட் எய்டு” இப்போது அவன் இலாவின் பக்கம் திரும்பினான். “இலா, நீங்க கிளம்புங்க, ஈவ்னிங்க் நேரா, வீட்டுக்கு வந்திருங்க, வீடு தெரியும்ல!”

“இலா, இட்ஸ் ஆல் இன் யுவர் ஹேண்டு! யாருக்கும் ஆப்பர்ச்சூனிட்டியே குடுக்காதீங்க, யாருக்கும்!” கடைசிவரியை அவன் அழுத்தி சொன்னது அப்போது இளமாறனுக்கு புரியவில்லை, ஆனால் விக்னேஷிற்கு புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.