(Reading time: 23 - 46 minutes)

“நீங்க என்னோட வீடு வரைக்கும் வரணும், அத்தைக்கிட்ட, இது சாதாரண அடிதானு ஒரு சர்ட்டிஃபிக்கேட் கொடுக்கனும், அப்புறம், விக்கி சொன்னானானு தெரில, அத்தைக்கு ஒரு சர்ஜரி அன்ட் செக்கப் நீங்க கூட இருந்தாபோதும், அவங்க டையபடீஸ் பேஷன்ட், உங்களமாதிரி மெடிசின் நாலேஜ் உள்ள யாராச்சும் அவங்க கூட இருந்தா எங்களுக்கு நிம்மதியா இருக்கும்!”

செல்விக்கு என்ன சொல்வதென புரியவில்லை. அவன் மனதில் இன்னொரு பெண் இருக்கிறாள் என்பது தெரிந்ததிலிருந்து அவன் அருகில் இருக்கும் தைரியமில்லை. தன்னுடைய மனநிலையையோ காதலையோ இவனிடம் சொல்லுவதற்கு கூட இனி வழியில்லை என்பது வேதனையாயிருந்தது. எங்காவது ஒரு தனியான இடத்தில் போய் அமர்ந்து அழ வேண்டும்போலிருந்தது அவளுக்கு!.

“செல்வி, நோ கம்பல்ஷன், உனக்கு விருப்பம இல்லனா…!” – விக்கி

விக்கியின் வார்த்தைகளை முறித்து பதில் வந்தது செல்வியிடமிருந்து, “நான் பார்த்துக்கிறேங்க, அவங்க அத்தை இருக்கிற வீட்டுக்கு என்ன கூட்டிட்டுப்போங்க!” அவள் அறியாது அந்த வார்த்தை வந்தது.

“பார்த்தீங்களா, நான் எவ்வளவு ரெக்வொஸ்ட் பன்னினாலும் நீங்க ஓகே சொல்லல, ஆனா விக்கி ப்ளீஸ் பன்னினா உங்களால தாங்கிக்க முடியல, தேட்ஸ் லவ்!” விக்கி நீ ரொம்ப லக்கி டா!

“அஃப்கோர்ஸ் ஐயம்!” – விக்கியின் முகத்தில் ஒரு மின்னல், பெருமிதம், நண்பர்கள் இருவரும் ஏதேதோ பேசி சிரித்தனர், அவள் மனம் புயலில் மாட்டிக்கொண்ட ஓடமாய் தத்தளித்தது.

“சரி உன்னால நடக்க முடியும்னா, நீயும் கிளம்புடா, மூணு பேருமா கிளம்பலாம், உன்ன வீட்டுல விட்டுட்டு, அத்தைய பார்த்துட்டு நாங்க கிளம்புறோம்!” - விக்கி

“ஐயோ, நானும் உங்க கூட வந்தா, ஏதோ முன்னாடியே செட் பன்னின மாதிரி ஆயிடும், நீ செல்விய கூட்டிட்டு போ, நான் ஈவ்னிங்கா அங்க வர்றேன். அதுமட்டுமில்ல எனக்கு இன்னும் ஒரு முக்கியமான வேலை இருக்கு” – ரிஷி

நண்பர்களின் உரையாடலின் ஊடே, விக்னேஷ் செல்வியை அழைக்க, “செல்வி நீங்க இனிமே எங்க வீட்டுல தான் ஃபுல் டைம் ஸ்பென்ட் பன்னப்போறீங்க, இஃப் யூ விஷ் நீங்க அங்கேயே ஸ்டே பன்னிக்கலாம்”

செல்வி மென்மையாய் ஒரு புன்னகையை உதிர்த்தாள். “செல்வி உங்களுக்கு ஆப்போசிட்டா அங்க ஒரு வாலு இருக்கு, அவள சமாளிக்கிறதுதான் கொஞ்சம் கஷ்டம், அத்தையை அட்டை மாதிரி ஒட்டிக்கிட்டு உங்கள பக்கத்திலேயே விடமாட்டா!”

யாரவள் என்று இவள் புருவம் சுருக்க, “என்னோட ஆருயிர் தங்கச்சி கீர்த்தனா, நீங்க கண்டிப்பா அவள மீட் பன்னனும்! உங்க இரண்டுபேருக்கும் நல்ல டைம் பாஸ் ஆகும், அப்படியே அவ என்ன நோண்டுறதையும் விட்டுடுவா ஐவில் பீ ஃப்ரீ”

“அம்மாக்கு வெளில ஸ்டே பன்றது பிடிக்காது ரிஷி, பட் நான் நிச்சயம் ஆன்ட்டிய அடிக்கடி வந்து பார்க்கிறேன்!” – செல்வி

“ஐயோ, என்னங்க இப்படி சொல்றீங்க, இந்த மேட்டர நம்பி விக்கி பெரிய பெரிய ப்ளான் வச்சிருக்கான், அவனோட டேட்டிங்க் டேசா அத ஃபிக்ஸ் பன்னிருக்கான்! நீங்க அத ஸ்பாயில் பன்னிடாதீங்க!”

“டேய், போதும், இப்ப அவ என் கூட வரணும், நீ போடுற பிட்டுக்கு, இனி அவ என் பக்கத்தில கூட வரமாட்டாடா, பேசாம மாத்திரைய சாப்பிட்டுட்டு தூங்கு, நாங்க கிளம்புறோம்!” – நண்பர்கள் கைகுலுக்கிக்கொண்டு பிரிய, இவள் ஒருமுறை ரிஷியைப்பார்த்தாள், அவன் இதழ்களில் புன்னகை இருந்தது, அவனுக்கு இவளுடைய முந்தைய சந்திப்பு ஞாபகத்திலிருந்ததற்கான அறிகிறி ஏதுமில்லை,

“கண்டிப்பா, ஒரு சி.டி ஸ்கேன் எடுக்கனும் ஹெட் இஞ்சுரி இருக்கு கேர்லெஸா இருக்காதீங்க.. ப்ளீஸ்!”

சரி என்பதாய் தலையசைத்தான்!, விக்னேஷின் கார் வெளியே வரவும், அதி விரைவாய் காவ்யாவின் கார் உள்ளே வந்தது. புலர்ந்து விட்ட அந்த பொழுதின் இயக்கங்கள் எந்த மாறுபாடுமில்லாது தொடர்ந்தது…

தொடரும்

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1120}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.