(Reading time: 23 - 46 minutes)

விக்னேஷ், இவளையும் காப்பியையும் கவனாமாய் பருகினான், அடுத்த சில நிமிடங்களில் வெளியே கிளம்பும் விதமாக ஆடை அணிந்து அறையைவிட்டு வெளியே வந்த இலாவை இருவரும் பார்த்தனர்.

 “சொல்லிட்டீங்களா விக்கி?” – இலாவின் வார்த்தைக்கு சட்டென நிமிர்ந்தாள் இவள்.

“எங்க உன் தங்கச்சி பேசினா உலக அதிசயம் தான்போ! ஐ திங்க் அவளோட குட் டைம நான் டிஸ்டர்ப் பன்னிட்டேன்நு நினைக்கேன் ”

அவசராமாய் நிமிர்ந்து இல்லை என்பதாய் தலையசைத்தாள், இளமாறனும் விக்கியும் சின்ன புன்னகையை பரிமாறிக்கொண்டனர். “கிளம்பு செல்வி, அம்மாட்ட சொல்லியாச்சு, மிச்சத போகும்போது பேசிக்கலாம்” – அண்ணனின் முகத்தைப்பார்த்து முறைத்தவள். “காலையிலே எங்கண்ணா போணும், எனக்கு நிறைய வேலையிருக்கு!”

“இது கூட உனக்கு பிடிச்சமான உன்னால மட்டும் செய்ய முடிஞ்ச ஒரு வேலை, செல்வி, இன்னும் சொல்லப்போனா, ஒரு ஹெல்ப், நீ பன்னுவேனு நம்புறேன்” - விக்னேஷ்.

இவள் நிச்சயமாய் முடியாதென மறுப்பதற்கு இருந்தாள், “விக்கி, நீங்க செஞ்ச உதவிக்கு எங்களால ஏதாச்சும் திருப்பி செய்ய முடிஞ்சா, வீ ஆர் கிரேட்ஃபுல்.., அதுமட்டுமில்லாம.. செல்வி இத நிச்சயம் மறுக்க மாட்டா”

“குட், அப்ப ஃபாஸ்டா, கிளம்பலாம், கார்லயே போயிடலாம் இலா!”

“இல்ல, நான் திருப்பி ஆஃபீஸ் போனும், சொ என்னோட டூவிலர்ல வர்றேன், நீங்க இரண்டுபேரும் கார்ல வாங்க!” அடுத்த விவாதத்திற்கு வாய்ப்பு கொடுக்காது இவர்களுக்கான தனிமையை அவன் விட்டுசென்றது விக்னேஷிற்கு பிடித்திருந்தது. செல்வி தயக்கமாய் யோசித்து, உள் அறையை பார்க்கும்போது, “நாம போலாம் செல்வி, அம்மாகிட்ட அப்பவே சொல்லிட்டேன், கார்ல போயிட்டே பேசலாம்..இட்ஸ் எ எமஜென்சி!”

“ஓ, நல்லது இவன் ஏதோ மருத்துவ, இல்லையெனில் சிகிச்சைக்கான உதவி வேண்டி இவளை அழைத்திருக்கக்கூடும், இப்போது நிம்மதி, ஏனெனில் இவனோடு காரில் உலா வரும் எண்ணம் அவளுக்கில்லை. மொத்தத்தில் இவன் முகம் பார்ப்பதற்கு கூட விருப்பமில்லை. அவனது வேகத்திற்கு அவன் பின்னால் ஓடினாள், காருக்குள் புகுந்து, உள்ளே அமரும்போது இவள் முகம் பார்த்து புன்னகைத்தான், “சாரி செல்வி, உன்ன இப்படி இரிடேட் பன்றது எனக்குகூட பிடிக்கலதான் .. பட்!” சொல்லிக்கொண்டே காரைக் கிளப்பினான்.

“ஸ்ஸ்… யாருக்கு என்னனு சொல்றீங்களா? எமர்ஜென்சினு சொனீங்க? ஆனா இப்படி நிதானமா கார ஓட்டுறீங்க!”

இதுவரை முகத்தில் தவழ்ந்திருந்த புன்னகை காணாமல் போனது, “செல்வி, என்னோட ஃப்ரண்டுக்கு ஒரு சின்ன ஆக்சிடன்ட், இலா கூட அவரோட ஃபெர்ம்ல தான் ஜாயின் பன்னிருக்கான், அதான் இப்போதைக்கு ஹீ நீட்ஸ் ஜஸ்ட எ அப்சர்வேஷன்,உன்ன மாதிரி நல்ல மெடிசின் நாலேஜ் உள்ளவங்க அவனோட ரிப்போர்ட்ஸ் பார்த்துசொன்னாங்கன்னா..இட் வி பி ஹெல்ப்ஃபுல், கொஞ்சம் பயமில்லாம இருக்கலாம்!”

“விக்கி ப்ளீஸ், இத நீங்க முன்னாடியே சொல்லிருந்தீங்கன்னா, நான் என்னால முடியாதுங்கிறத தெளிவா சொல்லிருப்பேன்…!”

“இல்ல செல்வி, அதுக்காக மட்டுமில்ல, அவங்க நம்ம ஃபேமிலி மாதிரி, ரொம்ப நெருக்கமானவங்க, அவங்க அத்தை கூட உன்ன பார்க்கனும்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காங்க, அவங்களும் ஒரு சின்ன சர்ஜரி, இந்த வீக். சோ நீ கொஞ்ச நாளைக்கு, ஜஸ்ட் எ வீக், அவங்களோட இருந்தா ஹெல்ஃபுல்லா இருக்கும்!”

“ஹையோஓஓ, அங்க போய் என்ன நர்ஸ் வேலை பார்க்கசொல்றீங்களா? விக்கி!”

ஆமாம், என்பதாய் தலையசைத்தான்,

“நான் இதுக்கு ஒத்துப்பேனு எப்படி நீங்க டிசைட் பன்னலாம்?”

“ஏன்னா செல்விகிட்ட உதவினு போனா அவ நிச்சயம் செய்வானு தோணுச்சு”

“உதவியா? அதெல்லாம் யோசிக்கிற அளவுக்கு என் மனசு நிம்மதியா இல்ல, நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்டா ஃபீல் பன்றேன் விக்கி!”

“அப்படினா நீ இத நிச்சயமா, செய்வ செல்வி, நான் உன்ன ஃபோர்ஸ் பன்னலா, பட் உனக்கு பிடிச்சமான அந்த ஜாப்பையே நீ விட்டுடனு தெரிஞ்சப்பவே, ஐ நோ யூ ஆர் வெரி ஸ்ட்ரெஸ்டு, பட் நீ இத பன்னுனா, யூ வில் ஃபீல் குட் ஐயம் சுயர். உன்ன அங்க ஒரு நர்ஸ் மாதிரி யாரும் பார்க்கமாட்டங்க, ஆக்சுவலி நீ அவங்களுக்காக தான் அங்க போரனு ஆன்ட்டிக்கு தெரியாது, அவங்களோட சர்ஜரி முடியுற வரைக்கும் உன்ன மாதிரி ஒருத்தங்க அவங்க கூட இருந்தா எங்களுக்கெல்லாம் கொஞ்ச தைரியமா இருக்கும்”

என்ன பதில் சொல்வது இதற்கு! அவன் சொல்வது அத்தனை உண்மை, வேலையே விட்டதற்கான பின்னனியை அம்மாவோ, இளமாறனோ கேட்காதது இவளுக்கு வருத்தமே, இவனோ இவள் சொல்லாது மனநிலையை புரிந்து கொண்டான், அதற்கு வடிகாலாக ஒர் வழியையும் சொல்கிறான். நிச்சயம் இவளுடைய வலிகளுக்கு இவன் ஒர் நல்ல மருந்தாய் இருப்பான். யாரையும் செய்கையிலோ, வார்த்தையிலோ காயப்படுத்தாது வாழும் மென்மையானவள் தான் செல்வி , இவனை கூட இப்போது கடிந்து கொண்டது அப்படியாவது இவளை வெருத்து அவன் ஒதுங்கட்டும் என்னும் மேலான எண்ணம், அந்த செயல்பாடுகளை அடுத்தடுத்து கிழிதெரிந்தான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.