(Reading time: 23 - 46 minutes)

இளமாறன் ரிஷியுடன் கைக்குலுக்கிவிட்டு செல்வியிடம் சின்ன தலையசைப்புடன் கிளம்பினான். விக்கியின் பக்கம் திரும்பிய ரிஷி, “டேய் நீயும் கிளம்பல?”

“போணும்!” நிதானமாய் அவன் பார்வை செல்வியின் பக்கம் வந்தது.

“கிளம்புடா, அதான் எனக்கு கம்பெனிக்கு செல்வி இருக்காங்களே!” அவன் தன் நண்பனிடம் விளையாட்டாய் சீண்டுகிறான் என்று புரிகிறது, அது பொய் என்றாலும் அப்படி ஒரு தனிமைக்கிடைத்தால் இவளுக்கு ஆனந்தம் தான்.

“போர்டு மீட்டிங்க், அதிலும் உங்க கீர்த்தனா மேம், இன்னிக்கு அவங்க ப்ராஜெக்ட் ஃபைனல் டிஸ்கஷன் கொடுக்கிறாங்க!”

“ரிஷி போதும், நீ இன்னிக்கு அங்க வந்தா, உனக்கே புரியும்! கீர்த்தனா மேம் மீட்டிங்க் ஹால் போறதுக்குள்ள ஐ வில் பி தேர், ஐடோன் வான்ட் டூ மிஸ் தேட்.. வேணும்னா சொல்லு, உன்னையும் ஒரு வீல் சேர்ல போட்டு தூக்கிட்டு போறேன்” விக்கி கிண்டலாய் சொன்னாலும், ரிஷியின் மேல் உள்ள அதிகப்படியான அன்பினால் நண்பர்களுக்கு உள்ளான இந்த விவாதம் கூட அவளை காயப்படுத்தியது.

“நாட் நீடட், நான் தான் என்னோட மாஸ்டர் பீச, அனுப்பியிருக்கேனே!” இளமாறனை சொல்கிறான் என செல்விக்கும் புரிந்தது, செல்வி அருகே இருந்ததால் விக்னேஷ் அதை தொடரவில்லை.

“செல்வி, உங்ககிட்ட பேசனும்னு நானும் நிறைய தரவ ட்ரை பன்னினேன் இவன் தான் உங்கள கண்ணுலயே காட்டல! உங்க எங்கேஜ்மென்ட் டிஸ்டர்ப் ஆனதற்கு நானும் ஒரு காரணம் சோ, உங்க கிட்ட மனப்பூர்வமா சாரி கேக்கனும் நினைச்சேன்!”அது நின்றதால் இவளுக்கு எந்த வருத்தமும்மில்லை என்று அவள் முகம் சொல்லியது, ஆனால் அதை நண்பர்கள் இருவருக்கும் காட்டாது, தலையை கவிழ்த்துக்கொண்டாள். ஆனா செல்வி, நீங்க உண்மையிலேயே வெரி வெரி லக்கி, விக்கி ஒரு ஹேன்ட்சம் பேர்சன், ஆசம் பேர்சன் டூ…அப்புறம்..”

“டேய் போதும்டா, போற போக்கப்பார்த்தா ஏதோ வாரப்போறனு தெரியும்..ப்ளீஸ் அவளே ரொம்ப நாளைக்கப்புறம் இப்பதான் என்னோட பேசுறா இதில நீ வேர!”

“ஹையோ, விக்கி இப்படி குறுக்க குறுக்க பேசினா எனக்கு நீ எழுதிக்கொடுத்த டயலாக் எல்லாம் மறந்துடும், அப்புறம் உன்னபத்தி செல்விக்கிட்ட தப்பு தப்பா போட்டுகொடுத்துடுவேன்!”

“உன்ன, நல்ல செமத்தையா அடி பட்டும் உன் கொழுப்பு மட்டும் குரையலடா!” என ரிஷியின் வலது தோள்பட்டையின் கீழ் இரண்டு குத்து குத்த, இவளுக்கு வலித்தது. நண்பர்களின் உரையாடலில் புன்னகை அரும்பியது. “செல்வி, விளையாடாம சொல்றேன், நீ ரொம்ப லக்கி! விக்னேஷ்க்கு உங்க மேல பைத்தியமான ஒரு லவ்! நீங்க அவனுக்கு கிடைச்சா சான்சே இல்ல, உங்கள அப்படி பார்துப்பான். ஆன்ட்டியல்லாம் சீக்கிரமா சமாளிச்சிடலாம், அடுத்து உங்க எங்கேஞ்ச்மென்ட் தான்!” ஆர்வமாய் கண்கள் குதுகலிக்க அவன் சொன்னான். இவள் அமைதியாய் இருந்தாள்.

“டேய், விளையாட்டெல்லாம் இருக்கட்டும், எப்படி அடிபட்டுச்சு, ஏன் நேரா வீட்டுக்கு போகாம இப்படி கேஸ்ட் ஹவுஸ்ல கிடக்கிற, சொல்லு!”

“எத்தன தரவ டா, சொல்றது, படில ஸ்லிப் ஆயிட்டு, அர்த்த இராத்திரில ஊர சுத்திட்டு வீட்டுக்கு போனா, அத்தையும் சரி, கீர்த்தியும் சரி வருத்து எடுத்துடுவாங்க, அதுமட்டுமில்லாம அங்க போன, அது இதுனு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பன்னிடுவாங்க அதான், சேஃப்ஃபா இங்க வந்துட்டேன்!”

“தலைல அடி பட்டுச்சுன்ன ஹாஸ்பிட்டல் கேர் முக்கியம், ஒரு சி.டி ஸ்கேன் கண்டிப்பா பார்க்கனும்!” - செல்வி

ரிஷியின் முகத்தில் புன்னகை. தேங்க்ஸ் செல்வி, நீங்க இந்த மாதிரி கேரிங்கா இருக்கிறது ரொம்ப ஹேப்பியா இருக்கு!, இதுவரைக்கும் ரிலேஷன்ஷிப்புக்கு அவ்ளோ இம்பார்டென்ஸ் குடுக்காம தனிமையா இருந்துட்டேன், இப்ப நீங்க, இலா, விக்கி எல்லாரும் பக்கத்தில இருக்கிறது, ஐ வீல் டிஃப்ரண்ட் அண்ட் ஹேப்பி!”

“டேய், நாங்க பக்கத்தில இருக்கிறது ஹப்பியா, இல்ல சிஸ்டர் பக்கத்தில நேத்திக்கி ஃபுல்லா இருந்தது ..” அவன் முடிக்கும் முன் தன் பின்னே இருந்த தலையணையைத் தூக்கி அவன் மீது எறிந்தான் ரிஷி!

“உன் அளவுக்கெல்லாம் நான் இன்னும் போகலடா!” சிரித்தான் ரிஷி.

செல்விக்கு தான் இதயம் உடைந்தது, இவன் மனதில் இன்னொரு பெண் இருக்கிறாளா? யாரவள்? நிமிர்ந்து இருவர் முகத்தையும் பார்த்தாள். அவளுக்கு விளக்கும் விதமாய், “செல்வி, ரிஷிக்கு ஃபிக்ஸ் ஆயிடுச்சு, லவ் கம் அரேஞ்சுடு!”

“ஆமாங்க, சீக்கிரமா உங்ககிட்ட இன்ட்ரோ குடுக்கிறேன்!” பேருக்கு அவன் முகத்தை பார்த்து புன்னகைத்தாள். அழுதுவிடுவாளா? தன்னைத்தானே அடக்கிக்கொண்டாள், “கங்கிராட்ஸ்” மென்மையாய் சொன்னாள். உள்ளே வலியும் பொறாமையும்.

“தேங்க்ஸ்!”

“நாம கிளம்பளாமா?” – செல்வி விக்கியின் முகத்தைப்பார்த்தாள்

“ஆக்சுவலி, செல்வி ஒரு சின்ன ஹேல்ப்!” – ரிஷி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.