(Reading time: 9 - 18 minutes)

கடந்த இரண்டு நாட்களாக அவனின் பார்வை மாற்றத்தை உணர்ந்தே தான் இருந்தாள். அவனின் கேசுவல் உடை விட பாரம்பரிய உடையில் அவனிடம் மயங்கி தான் விட்டாள் எனலாம்.. இன்றைக்கு அவனுடைய அழைப்பு எதற்காக என்று உணர்ந்தே அதற்கு பதில் சொல்ல கூடாது என்ற முடிவோடு தான் வந்து இருந்தாள்.

ஆனால் அவன் பேசிய போது அவளால் வார்த்தையில் கூட மறுக்க முடியவில்லை என்பதை விட, அவள் எண்ணத்தில் மறுப்பு என்ற உணர்வு மருந்துக்கு கூட இல்லை என்பது தான் உண்மை..

அவளின் சம்மதத்திற்கு பிறகான அவனின் பேச்சுக்களை அசை போட்டபடி வந்து கொண்டு இருந்தவள், அவனின் பரிசை எண்ணி உள்ளம் சிலிர்த்தாள்.

செழியனின் நினைவுகளோடு பயணித்தவள் கைகளும் கால்களும் தானாக வீடு கொண்டு வந்து சேர்த்து இருந்தது. அதிலும் வீடு கேட் அருகே தானாக கைகள் பிரேக் போட்டு ஸ்கூட்டி ஐ நிறுத்திய பின் தான் அவள் சுற்றுபுறம் உணரந்தவளாக நின்றாள்.

வழக்கமாக மலர் வீடு திரும்பும் நேரம் வாசலில் அமர்ந்து இருக்கும் அவளின் ஆச்சி அன்றைக்கு அவள் எப்போது வருவாள் என்பது தெரியாததால் , உள்ளே அப்போதுதான் சென்று சாப்பிட ஆரம்பித்து இருந்தார். வள்ளியும் தன் மாமியாரின் உணவில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தாள்.

அப்படியும் வண்டி சத்தம் கேட்டு எழுந்திருந்த  மாமியாரை அமர வைத்து விட்டு, வாசலுக்கு வர, மலர் உள்ளே வந்து கொண்டு இருந்தாள்.

“ஏன் மலர்... நேரத்தோட வர மாட்ட? பாவம் வயசான ஆச்சியை ஏன் கஷ்டபடுதுற? “

“அம்மா.. நான் எப்போ வரேன்னு தெரியாதுன்னு சொல்லிட்டு தானே போனேன். ஏன் ஆச்சி இப்படிதான் கோள் மூட்டி விடுவியோ?”

“இல்லடா.. ராசாத்தி .. உங்க அம்மா அவளாதான் நம்ம ரெண்டு பேரும் சோடி போடுரோம்ம்னு நம்மள பிரிக்க பார்கிரவ... நாம யாருன்னு அவளுக்கு இன்னும் தெரியல ..? நீ சாப்பிட வா கண்ணு..”

அவள் அப்படியே ஆச்சியிடம் செல்லம் கொஞ்சிக்கொண்டே சாப்பாடு வாங்கி கொள்ள,

“ஹேய்.. மலர்.. பேருதான் பெரிய ப்ரோபிச்சொர்ரர்ர்ர்ரர்ர்ர்ர்.. வெளிலே போயிட்டு வந்து கை கால் கழுவி சாப்பிட வர தெரியாது..இதுலே ஆச்சியும்,  பேத்தியும் என்னிய நையாண்டி பண்ணிட்டு இருக்கியளோ..? ஓடு  போய் மூஞ்சு கழுவிட்டு வா..”

“போம்மா.. ஆடு மாடு எல்லாம் கை கால் கழுவிட்டா சாப்பிடுது.. நீ வேற வீட்டுக்குள்ளே வரும்போதே ஆளை தூக்கிற மாதிரி மணமா பருப்பு உருண்டை குழம்பும், அதுக்கு சேப்பங்கிழங்கு வருவலும் வறுத்து .. அந்த வாசனை ஊரை கூட்டுது.. நான் சாப்பிட வருவேனா.. இல்லை கை கழுவுவேனா..? அதில பாரு நான் என் கையால கூட சாப்பிடல.. எங்க ஆச்சி கையால் தான் தின்னுட்டு இருக்கேன்.. ஏன் ஆச்சி.. நீ கை கழுவிட்டே தானே.. “

“உங்காத்தா கிடக்கா விடு கண்ணு.. நான் உனக்கு சோறு ஊட்டுதேன். “

“நல்லது சொன்னா இந்த வீட்டு பெருசுலேர்ந்து சிறிசு வரைக்கும் ஒன்னும் காதுலே ஏறாதே.. “ என்று முனங்கிய படி , அவள் அப்படியே சோபாவில் எறிந்த வண்டி சாவி, ஹன்ட் பாக் எல்லாவற்றையும் எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

“மலர்.. இது என்ன பாக்ஸ் டா..? காலையில் போகும்போது நீ எடுத்துட்டு போகலையே? “ என்று வினவ,

மலருக்கு புரை ஏறியது.., என்ன சொல்ல என்று யோசிக்கும் போது, அவள் தலையில் தட்டிய வடிவு

“ஏனத்தா .. புள்ள திங்கும் போது தான் இந்த சோலி எல்லாம் பாக்கணுமா.. அவ சாமான அவளே எடுத்து வைப்பா... நீ வந்து குழம்பு ஊத்து.. “ என்று அவளை காப்பாற்றினார்..

இருந்தாலும் “அது.. சார்ட் ம்மா.. அது நாங்க எடுக்க வேண்டிய பாடம் பத்தின சில விளக்கம்.. அதிலே கொஞ்சம் சரி பார்க்கணும் நு வளர் மேடம் கொடுத்து அனுப்பினாங்க.. “ என்று சமாளித்தாள்.

“அவ்ளோ முக்கியமானது என்றால், உள்ளே கொண்டு வச்சுட்டு வாரமால், உங்க ஆச்சி கிட்டே என்ன கொஞ்சல் வேண்டி கிடக்கு..” என்று மீண்டும் ஆரம்பிக்க,

அவசரமாக “ஆச்சி.. உங்கையால சாப்பிட்டது போதும்.. நான் தனியா சாப்பிட வரேன்.. நீ முடிச்சுடு.. இல்லாட்டா என் பங்கை உனக்கு வச்சுட்டேன்னு எங்கம்மா என்னை பழி தீர்க்கும்.. மீ கமிங் சூன்.. “ என்றபடி தன் பாக், சார்ட் பாக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு விரைந்தாள்.

உள்ளே வந்து கதவை தாளிட்டவள் , பெருமூச்சு எடுத்து தன்னை நிதான படுத்திக் கொண்டாள்.

“ஊப்ஸ்.. நல்ல வேளை.. அம்மா பெயிண்ட்டிங் பாக்ஸ் தொறந்து பாக்கலை.. செழியன் சார்ட் கடைசியில் “பார் மை ஸ்வீட் லவ் “ என்று எழுதி இளா என்று கையெழுத்து இட்டு இருந்தான்.. “

அதை பத்திரமாக தன் அலமாரியில் வைத்து விட்டு மீண்டும் தன் அன்னையை நோக்கி சென்றாள்,

லர் புறப்பட்டு சென்ற பிறகு, செழியனுக்கு வேலையே ஓடவில்லை.. வழக்கமாக பாஸ்கட் பால் விளையாடும் பசங்களிடம் அவர்களின் சரி தவறு பற்றி உடனுக்கு உடன் கரெக்ட் செய்பவன் .. அன்றைக்கு அவன் பார்வை மட்டுமே விளையாட்டில் இருந்தது.. எண்ணம் எல்லாம் தன் நாயகியின் மேல் இருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.