(Reading time: 12 - 24 minutes)

“கருங்குவளை மலர்.. தாமரை போல் குளங்களிலும் குட்டைகளிலும் மலரும் ஒரு வகை மலர்..”,என்றாள் அவன் அருகில் நடந்து கொண்டிருந்த மயா..

“இந்த காடு வறண்டு போய் இருக்கே..இங்கே குளம் குட்டையெல்லாம் இருக்குமா..??”

“இருக்கும்.. அதான் ஒரு வாரமாக மழை பெய்யுதே..சோ குட்டைகள் நிறைய இருக்கும்..”,என்றாள்..

“இரண்டு பேரும் ஒரு நிமிஷம் அமைதியாக இருங்கீன்களா..??”,என்று அவர்களின் பேச்சினுள் நுழைந்தாள் க்ரியா சிறிது பரபரப்புடன்..

“ஏன்..?? என்னாச்சு க்ரியா..??”,என்று கேட்டான் விக்கி..

“பாம்பு..”

“என்னது பாம்பா..??”,என்று அலறத்துவங்கிய மயாவின் இதழ்கள் சட்டென்று பொத்திய க்ரியா கைகளால் ஒரு நாகம் படமெடுக்கும் காட்சியை சுட்டினாள்..

“யாரும் அசையாதீங்க..”,என்று முணுமுணுத்தான் அந்த பாம்பையே பார்த்துக் கொண்டிருந்த ரிக்கி..

தன் கூரிய விழிகளால் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்த பாம்பு சட்டென தியாவின் காலைச் சுற்றியது..

அதனை கண்டு பதறிய அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் உறைந்தனர்..

அப்பொழுது பதற்றத்தில் தியாவை நெருங்கிய க்ரியாவை தடுத்த எழில்,”க்ரியா.. வெயிட்..பாம்பை டிஸ்ட்ரப் பண்ணின்னா தான் அது அவளை அட்டாக் பண்ண சான்ஸ் நெறைய.. சோ அவளை நெருங்காதே..”,என்ற வண்ணம் அவளின் கைகளை கெட்டியாக பற்றினான் அவள் தியாவை நெருங்கிவிடுவாளோ என பயந்து..

 தன் காலைச் சுற்றிய பாம்பை கண்டு சிறிது பயந்தாலும் அதன் மேனி தனக்கு தந்த கதகதப்பில் சில நொடிகள் லயித்துத் தான் போனாள் தியா தன் முகமூடி கடுமையை அகற்றிய வண்ணம்..

காற்றில் பறந்து வந்த சருகுகள் அவர்கள் சுற்றிப் பறக்க மென்மைக் குரலொன்று,”பாம்பை தொடர்ந்து செல்..”,என்றொளித்து மறைந்தது..

தென்றலென வருடிய அக்குரலுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் அந்த நாகத்தை பின் தொடர்ந்தனர்..

சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்ற பிறகு ஒரு அழகிய குட்டை அவர்கள் கண் பார்வையில் விழுந்தது.. குட்டை முழுவதும் கருங்குவளை மலர்கள்..

குட்டை வரும் வரை ஊர்ந்து சென்று கொண்டிருந்த நாகம், குட்டையைக் கண்டவுடன் அதனுள் சீறிப் பாய்ந்தது..

ஒரு சில நிமிடங்களில் குட்டையிலிருந்து வெளிவந்து மிதங்க ஆரம்பித்தது ஒரு ஓலைப் பெட்டி..

“அந்தப் பெட்டியை எடுக்கலாமா..??”,என்று பொதுவாக கேட்டான் எழில்..

“எடுக்கலாம்.. நான் எடுக்கறேன்..”,என்றபடி முன்னேறினான் சுஜன்..

சுஜனின் கைகள் அந்த பெட்டியின் நுனியைத் தொடவிருந்த அந்த நொடி அவன் கையருகில் சீறிப் பாய்ந்து முறைத்தபடியே வெளிப்பட்டது அந்த நாகம்..

அதன் சீற்றத்தைக் கண்டு சில அடிகள் தன் கால்களை பின்னெடுத்து வைத்தவன் பின்னிருந்த ஒரு குட்டையில் கல் தடுக்கி விழுந்தான்..

அவனை தூக்கிவிடவென சென்ற மற்றவர்களை தடுப்பது போல் சுஜன் விழுந்த குட்டையைச் சுற்றிலும் கண்மூடித் திறக்கும் முன் கொசகொசவென பாம்புகள் சூழ்ந்து கொண்டன..

அதனைக் கண்ட அனைவரும் செய்வதறியாது திகைத்து அதிர்ந்தனர் என்றால் சுஜனின் குரல் அந்த சருகுக் காடு எல்லை வரை நாரகாசமாக ஒலித்தது..

“இப்போ என்ன பண்றது..??”,அழுகையுடன் கேட்டாள் மயா..

“சுஜனுக்கு இங்க இப்போ ஒன்னும் நடக்காது.. நாகத்தின் அனுமதி இல்லாமல் இந்த ஓலைப் பெட்டியை எடுக்க முயற்சி செய்ததால் இவனுக்குக் கிடைத்த சிறு தண்டனை..”,விக்கியில் தோளில் அமர்ந்தபடியே கூறியது அகிலன்..

“என்னது சின்ன தண்டனையா..??”,என்று அதிர்ந்தாள் க்ரியா..

“ஆம்.. இது சின்ன தண்டனைதான்.. இந்த ஓலைப் பெட்டியிக்கு உரியவர் எவரோ அவரால் மட்டும் தான் இதனை தொடவே முடியும்.. அவரைத் தவிர வேறொருவர் இதனை தொட நினைத்தால் தண்டனை நிச்சயம்..”

“அப்போ இந்தப் பெட்டிக்கு உரியவர் யார்..??”,என்று கேட்டான் விக்கி..

“அதற்கான பதிலைத் தான் நாகம் சொல்லியதே..”,என்றது அகிலன்..

“நாகம் சொல்லுச்சா.. என்ன சொல்ல வருகிறாய் நீ..??”,என்று கேட்டான் எழில்..

“பகைவனின் காலில் சுற்றும் பாம்பு தலைவனின் காலிலும் சுற்றும்..”

தியாவின் காலை நாகம் சுற்றியதை தான் அகிலன் கூறுகிறது என உணர்ந்த மயா “அப்போ.. தியாவிற்கு தான் அந்த பெட்டி சொந்தமா...??”,என்று கேட்டாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.