(Reading time: 12 - 24 minutes)

“கரெக்ட் விக்கி.. திலகம் என்றால் நெற்றியில் இடுவது..அந்த வார்த்தை ஏன் இரண்டு முறை வருகிறது..??”,என்றான் எழில் கேள்வியாக..

“க்ரியா.. நீ என்ன நினைக்கிற..??”,என்று கேட்டாள் தியா..

“சகசாட்சி னா சூரியன் தான்.. ஞாயிறுக்கு நெறையா அர்த்தம் இருக்கு.. சூரியன், தாமரை.. அகி சொன்ன ஞாயிறுக்கு தாமரையைக் குறிக்குது.. ஆனால் திலகம்.. ம்.. ம்..  யா காட் இட்..திலகம் நெற்றியில் வைப்பது..இந்த கோயிலில் நெற்றி என்றால் கோபுரத்தின் முகப்பு.. அதில் திலகம் போல் திகழ்வது கலசம்..சோ திலகம் என்றாள் கலசம்..”

“காழ்’னா பார்ப்பது..வில்னா அம்பு..??”,சரியா என்பது போல் வினவினான் சுஜன்..

“நீங்க சொல்லும் அர்த்தம் இதில் பொருந்தவில்லை அண்ணா.. காழ்’னாலும் வில்லு’னாலும் ஒளி அப்படீங்கற அர்த்தத்தை கொடுக்குது இங்க..”,என்ற க்ரியா மீண்டும் அகிலனின் வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு அனைவரையும் ஒரு பார்வை பார்த்து அகிலன் சொன்னதுக்கு அர்த்தம் இதுவாகக் கூட இருக்கலாம் என்றபடி

“சூரியனின் ஒளி கலசத்தில் ; கையை வேலில் சேர் ; ஆறு ஜோடி கண்கள் கலசத்தில் ; ஒளிரும் தாமரையில்.. சினை அப்படீன்னா உறுப்பு.. கண்களைப் பற்றித்தான் நாம் பேசிக்கொண்டிருந்தோம்.. சோ அகி சொன்ன சினை என்னும் சொல் கண்களைக் குறிக்குது.. பாணின்னா கைகள் என்று அர்த்தம்..அகிலன் அயில் என்று குறிப்பிட்டது வேல் மாதிரி ஏதோ ஒரு ஆயுதத்தைன்னு நினைக்கிறேன்.. ”,என்று முடித்தாள் க்ரியா..

சூப்பர் என்ற வண்ணம் அவளை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்க தியாவோ  க்ரியாவை நோக்கி,” சூரியனின் ஒளி கலசத்தில் என்றால் உச்சி வெயிலில் கோபுரத்தில் விழும் சூரிய ஒளி என்று தானே அர்த்தம்..”,என்று கேட்டாள்..

வானை நோக்கிய க்ரியா,“ஆமா தியூ.. கதிரவன் உச்சிக்கு வர இன்னும் சில நிமிடங்களே..அதற்கும் இந்த சிலைகளின் கண்களை கலசத்தை நோக்கித் திருப்ப வேண்டும்..”,என்றாள்..

அனைவரும் அரக்கப் பறக்கச் சென்று சிலைகளின் கைகளை சிலைகளின் அருகிலுள்ள ஆயுதங்கலில் சேர்த்தனர்..

ஒரு சில நொடிகளில் கதிரவனின் ஒளி கலசத்தில் வீழ்ந்தது..ஒளியின் பிரதி பிம்பம் ஆறு சிலைகளின் கண்ணின் மூலம் கருவறையின் எதிரே இருந்த பிரம்மனின் வாகனமான அன்னப்பறவையின் கண்ணின் வழியே கருவறைக்குள் சென்றது...

ஒளியைத் தொடர்ந்து அனைவரும் கருவறைக்குள் பயணப்பட்டனர்..

கருவறையின் சுவரில் பட்டுத் தெறித்த ஒளி சுவரில் வரையப்பட்டிருந்த தாமரையின் மேல் நிலைத்து..

சில நொடிகளில் அந்தத் தாமரை மறைந்து பெண்ணாய் உருமாறி பாம்பாய் படமெடுத்து கருங்குவளை ஒன்று மலர்ந்து மறைந்தது ஒளியை தன்னுள் புதைத்து மீண்டும் தாமரை தடமாகியது..

சில நொடிகளில் வந்து மறைந்த உருவங்கள் சிலருக்குத் திகைப்பையும் சிலருக்கு தான் சென்றுகொண்டிருக்கும் பாதை சரியானதுதான் என்ற நிறைவையும் கொடுத்தது..

ங்கு தோன்றி மறைந்த படங்களைப் பற்றி யாருக்காவது ஏதாவது ஐடியா இருக்கா..??”,என்று தனது திகைப்பை தன்னுள் அடக்கிய வண்ணம் கேட்டான் ரிக்கி..

“சருகு காடு..”,என்று முனுமுனுத்தாள் மயா..

“என்னது..சருகுக் காடா..?? அது எங்க இருக்கு..??”,என்று கேட்டான் சுஜன்..

“நம்ம கூடாரத்தில் இருந்து கொஞ்ச தூரத்துல இருக்கு அண்ணா..”,என்றான் எழில்..

“உங்களுக்கு அது எப்படித் தெரியும்..??”,என்று கேட்டான் சுஜன்..

“அது.. நாங்க இங்க வந்த முதல் நாள் சும்மா ஊர் சுற்றப் போயிருந்தோம்.. அப்போ ஒரு பெரியவர் அந்த காட்டை பற்றிக் கூறினார்”,என்றான் எழில் தியா அன்று அங்கு சென்றதையும் கண்டதையும் யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு..

“ஓ”,என்ற சுஜன்,”ஆச்சார்யா சார் டவுனுக்குப் போயிருக்காரு..அவர் வந்த பின்னாடி இங்கு நடந்ததைப் பற்றியும், அகில் அப்புறம் அன்றைக்கு நாம் பார்த்த கழுகை பற்றியும் சொல்லலாம்னு நினைக்கின்றேன்..”,என்றான்..

“இன்னைக்கு சொல்ல வேண்டாம் சுஜன்.. இன்னைக்கு பெரியப்பா பப்புவுக்கு சாமி கும்பிட போயிருக்காங்க.. சோ நாளைக்கு சொல்லிக்கலாம்..”,என்றான் விக்கி..

“சரி..அப்போ நாளைக்குப் சொல்லிக்கொள்ளலாம்”,என்று அமைதியானான் சுஜன்..

“நாம் சருகு காட்டுக்கு இப்போ போகலாமா..??”,என்று கேட்டான் ரிக்கி..

மின்னலாய் அச்சமயம் அங்கு வந்த அகிலன்,”இது என்ன கேள்வி..நன்றே செய்..அதை இன்றே செய்.. கேள்விப்பட்டதில்லையா..??”,என்றுவிட்டு மீண்டும் பறந்தது..

“இப்போ இது என்ன சொல்லிட்டுப் போகுது..??”,என்று சலித்தபடி கேட்டாள் மயா..

“இன்னைக்கே சருகுக் காட்டுக்குப் போகச் சொல்லுது..”,என்றான் விக்கி சிரித்தபடியே..

மாலைக்காற்று மனதை மயக்க.. குறுகுறுவென குறுகுறுக்கும் மனதுடன் சருகுக் காட்டுக்குள் எட்டுப் பேரும் நுழைந்தனர்..

கால்களில் சருகுகள் ஒட்டி கால்கள் பிசுபிசுத்தாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் பெய்த மழையால் குளுமையாகவே இருந்தது அந்தக் காடு..

“நம்ம பார்த்த காட்சியில் தோன்றிய அந்த மலரின் பெயர் என்ன..??”,சருகுகளின் சத்தத்திற்கு இணையாக குரலுயர்த்தி கேட்டான் விக்கி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.