(Reading time: 15 - 29 minutes)

அட பாவி கிழவா  ஒழுங்கா நான்  உண்டு என்  வேலை உண்டுனு இருந்தவனை கல்யாணம் பனிக்கலனா வீட்டை  விட்டு போய்ருவனு சொல்லி  மிரட்டல் அப்டிங்குற  பேர்ல காமெடீ பண்ணி  கல்யாணத்த செஞ்சு வச்சு அதுவும் அவ படிப்பு  முடியுற வரைக்கும் அவ கிட்டயே போக  கூடாதுனு கண்டீசன்  வேற போட்டு  படுத்தி எடுத்திங்க.

இன்னைக்கு  நம்ம  மயிலு பளிச்சுணு காத்துட்டு இருக்கும்னு வந்தால்  இந்த குயிலு வந்து இருட்டு முகத்தோட உக்காந்திருக்கு கார்த்திக் உனக்கு கட்டம் சரி இல்லை டா

அவனை பார்த்தவர் முகம் அழுகையில்  துடித்தது. அவரை பார்த்தவன் அதிர்ந்து விட்டான். தாத்தா என்ன ஆச்சு ஏன்  இப்படி இருக்க. என்ன ஆச்சு  தாத்தா திடீர் என்று சொல்லாமல் வந்திருக்க. நாங்க தான் ரெண்டு நாளில்  அங்க வறோம் னு அம்மாகிட்ட  சொன்னேனே. அதும் இவ்வளவு   சோகம். கீர்த்தி கீர்த்தி எங்க இருக்க இங்க வா தாத்தா ஏன் சோகமா இருக்காரு

வரேன்  மாமா. அப்ப  இருந்து இப்படி தான் இருக்கான் இந்த ராஜூ நானும் எவ்வளவோ கேட்டுவிட்டேன் சொல்ல மாட்டிக்கான் ஊருக்கு  போனும் கிளம்புணு ஒரே அடம் அதான் எல்லாம்  எடுத்து வச்சிட்டு  இருக்கேன்.

இல்லை  கார்த்திக் கொஞ்சம் அவசரம் ஊருக்கு போனும் காலைல அங்க இருக்கணும். என்ன தான் தாத்தா ஆச்சு  யாருக்கும் உடல் நலம் சரி இல்லையா

கார்த்திக் உனக்கு பல உண்மைகள் தெரிய வேண்டிய நேரம் வந்து விட்டது. அதை தாங்குவதுக்கு  சக்தியை கொடு என்று மட்டும் கடவுளிடம் கேள். வேறு எதுவும் என்னை கேக்காதே.

குழப்பத்தோடு கீர்த்தியை பார்த்தான் அவளும் அவனை அதே குழப்பத்தோடு தான் பார்த்தாள்.

தாத்தா என்னவாயிற்று ப்ளிஸ்  சொல்லுங்கள் மாமா முகம் சோர்ந்து  விட்டது.

அம்மாடி கீர்த்தி இனி உன் மாமனை நீ தான் பார்த்து கொள்ள வேண்டும். அவன் துவண்டு  விழக்கூடிய  நேரம் இது. கார்த்திக் ஒரு மாதம் லீவ்  எடுத்து கொண்டு கிளம்பு கீர்த்தி நீயும் சீக்கிரம்.

என்ன தாத்தா விளையாடுறீங்களா  ஒரு மாதத்துக்கு யாரு லீவ் குடுப்பார்கள். வேலைய விட்டே அனுப்பி விடுவார்கள்.

ரொம்ப நல்லது  அதை நீயே  வேண்டாம் என்று சொல்லி  விடு.

அவர் பதிலில் திடுக்கிட்டு இருவரும் பார்த்தார்கள். வேலை செய்யாமல் இருப்பது தவறு என்று சொல்லும் அவர் இப்படி சொல்வதா அடுத்து  இருவரும் நிலைமையின் தீவிரம் அறிந்து உடனே கிளம்பினார்கள்.

கிளம்பும் வேளையில் வினோத்க்கு  விவரம் சொல்ல  அவனும் குழம்பி தான் போனான். போன உடனே போன் பண்ணு  என்று சொல்லி  அனுப்பி   வைத்தான் மூவரையும்

அங்கு போன உடன் மேலும் மேலும் குழப்பம் தான் வந்தது. ஏதோ துக்க  வீடு மாதிரி இருந்தது. கீர்த்தி வந்திருக்கிறாள் என்றவுடன் அவர்களை பார்க்க வந்த அவளுடைய அம்மா அப்பாவும் திகைத்தனர் கார்த்திக்கின் பெற்றோர்களை பார்த்து ஏண்டி  உன் அண்ணனுக்கும்  அண்ணிக்கும் என்ன டீ  ஆச்சு  என்று கேட்ட பவித்ரனுக்கு  தெரியாது என்று பதில் அளித்தார் பொன்மணி

அடுத்து வந்த இரண்டு நாள்கள் குழப்பமாய் கழிந்தாலும் விவரம் சொல்வதுக்கு  ஆள் இல்லை. பெரியவர்கள் மூவரும் மௌனம் சாதித்தனர். தன்  அன்னையை கண்ணீர் முகத்துடன்  பார்க்க அவனுக்கு சகிக்க வில்லை. எப்படி எல்லாமோ கேட்டு பார்த்து விட்டான். அவனை அருகிலே அமர்த்தி அவன் மடியில் படுத்து கொள்வதும் அவனை தன் மடியில் படுக்க வைப்பதுமாய் இருந்தார் அவன் அன்னை. உணவை கூட அவர் தான் ஊட்டி  விட்டார். கீர்த்தியின் குறும்புகள் கூட அவர்களை சிரிக்க வைக்க வில்லை.அவளும் அடுத்து ஊமையாகி போனாள்.

ரண்டு நாள்கள் கழித்து வீட்டுக்கு வெளியில் வந்து ஒரு கார் நின்றது. யாரு என்று கேட்டு கொண்டே வெளியில் வந்தவன் அம்மா அப்பா வின்  அதிர்ச்சியான முகத்தை பார்த்தான். அவன் பேசுவதுக்குள் அவனை ஒரு அறைக்கு அழைத்து சென்றார் மல்லிகா  கூடவே போன கீர்த்தியையும் அவன் அருகில் அமர வைத்த மல்லிகா நீங்க ரெண்டு பெரும் எனக்கு ஒரு உதவி செய்யணும் என்று கேட்டார்

என்ன மா சொல்லுங்க  ஏன்  இப்படி அழுரீங்க  என்ன தான் ஆச்சு . சொல்லுங்க  செய்றேன்.

நீங்க ரெண்டு பேரும்  ஒரு வீட்டுக்கு போகணும். கொஞ்ச நாள் அங்க தங்கி  இருக்கணும். வேற எதுவும் என்னிடம் கேக்காதே கார்த்திக்.அங்கு போன உடன் உனக்கே காரணம் புரியும். ஆனால் என் மேல் ஆணை அங்கு நீ போக வேண்டும் தங்க வேண்டும். அவர்களாக உன்னை அனுப்பும் வரை நீ வர கூடாது

என்னமா  இது நீங்க அழுதுட்டு இருக்கீங்க. என்னை போக சொல்றீங்க யாரு வீடு என்று கூட தெரியாமல் எப்படி அம்மா.

என்னை உன் அம்மாவா  நினைத்தால்  இதை நீ  செய்யணும் இல்லை என்றால்  விடு.

நான் போறேன் அழாமல் இருங்க. நான் போவது பிடிக்காமல் தான் அழுதுட்டு இருக்கீங்க  ஆனால் போக சொல்றீங்க என்ன தான் நடக்கோ.கிளம்பு கீர்த்தி.

இருப்பா  ஒரு நிமிசம் இதை கீர்த்தி கைகளில் போடு .நீயும்  அவன் விரலில் போடு  மா  என்று இரண்டு மோதிரங்களை குடுத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.