(Reading time: 15 - 29 minutes)

அப்போது மாடியில் இருந்து கம்பீரமான ஒரு ஆள் இறங்கி வந்தார். அவனுடைய அப்பாவின் வயது இருக்கலாம். எல்லாருடைய கவனமும் அவர் புறம் திரும்பியது. அவர் தான் சேதுராம்

என்ன விமலா  நீ பிள்ளைய  வந்த உடனே ஓய்வு  எடுக்க விடாம  பிடித்து வைத்திருக்க  இனிமேல் இங்க தானே இருக்க போகிறான். இப்போது அவனை அவனுடைய ரூம்கு கூட்டிட்டு போ

இல்லை இப்போது எனக்கு ஓய்வு  தேவை இல்லை. உண்மை மற்றும் சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் யார். நான் எதுக்கு இங்கே வந்திருக்கிறேன்.

அந்த மல்லிகா  உன்னிடம் உண்மையை சொல்ல வில்லையா என்றாள் விமலா

இல்லை அதனால் தான் உங்களிடம் கேட்கிறேன்

கார்த்திக் உனக்கு உண்மை கட்டாயம் தெரிவிக்க படும் . ஆனால் இன்று மட்டும் பொறுமையாக இரு. நாளைக்கு நானே சொல்லி விடுகிறேன்  என்றார் சேதுராம். அவனும் சரி என்று மண்டையை ஆட்டினான்.

பக்கத்தில் கீர்த்தி வயதில் இருந்த அருந்ததியை அருகில் அழைத்தார் விமலா. அரு  கார்த்திகை அவனுடைய அறைக்கு அழைத்து செல்லம்மா.

சரி அத்தை  என்றவள் அவனை அழைத்து சென்றாள். அவனும் அவள் பின்னோடு எழுந்து கீர்த்தியை பார்த்தான்.அவள் முகத்தை பார்த்தவன் மனம் அமைதி அடைந்தது யாருமே தெரியாத இடத்தில் நின்றாலும் என்னோட கீர்த்தி என் அருகில் இருக்கா  என்பது  பெரிய தெம்பை  அளித்தது. அதே மன நிலையில் தான் அவளும் இருந்தாள் . அவளை பார்த்தவுடன் எழுந்தவள் அவன் அருகில் சென்றாள்.

அந்த அரு  என்கிற பெண் மாடிக்கு போக கார்த்திக் பின் நடந்தான் அவனோடு கீர்த்தியும்.

அப்போது அருகில் இருந்த மற்றொரு பெண்மணி அது தான் அருந்ததியின்  அம்மா ஏய்  இரு என்று கத்தினார். மூவரும் நின்றனர். யாரை பார்த்து கத்துகிறாள்  இந்த அம்மா என்று அனைவரும் அவள் முகத்தை பார்த்தனர். அவள் திட்டுவது  கீர்த்தியை பார்த்து  ஏம்மா பொண்ணு உனக்கு என்ன வெக்கமா  இல்லை ஒரு பையன் பின்னாடியே  போற ஆமா நீ யாரு எங்க கார்த்திக் கூட வந்துருக்க  ஒரு மேனஸ்  தெரிய வேண்டாம். உங்க வீட்டில இப்படி சொல்லி குடுத்து தான் வழத்தாங்களா.

இன்னும் என்ன பேசியிருப்பாரோ அதுக்குள் கார்த்திக் கத்தியே  விட்டான். போதும் வாயை மூடுங்கள் இனி ஒரு வார்த்தை அவளை பற்றி பேசினால்  தொலைத்து விடுவேன்.

எப்பா  கார்த்திக் அது உன் அத்தை  மங்களம்  அவளிடம் மரியாதை  இல்லாமல் பேசலாமா என்றார் விமலா

அவர்கள் பேசினார்களா மரியாதையாக வாய்க்கு வந்த படி  பேசுறாங்க.  என்ன சொன்னீர்கள் என் பின்னாடி  வருகிறாள் என்றா என் பொண்டாட்டி என் பின்னாடி  வராமல் யார் பின்னாடி  போவாள்

என்னது   பொன்டாட்டியா  அங்கு இருந்த அனைவருக்கும் அத்தனை அதிர்ச்சி. கீர்த்தியின் அகமும் முகமும் மலர்ந்தது சிரிப்பை மட்டும் மறைத்தவள் நினைத்து கொண்டாள் தாத்தா இவர்களின் அதிர்ச்சிக்காக மட்டுமே அன்னைக்கு  அப்படி கல்யாணம் செய்திருக்க வேண்டும் என்று. லவ் யூ டா  மாமா அப்படியே இறுக்கி கட்டிக்கணும்  போல இருக்கே உன்னை  என்று நினைத்தவள் அவர்களை பார்த்தாள் .

எங்க அம்மா சொன்னதுக்காக தான் நாங்க இங்க வந்துருகோம். இன்னொரு தடவை அவளை மரியாதை இல்லாமல் பேசினால்  அடுத்த நிமிசம் வீட்டை விட்டு சென்று விடுவோம் வா கீர்த்தி என்று அழைத்து கொண்டு மேலே சென்றான்.

ஆண் அழகனாக  வந்து இறங்கியவனை அது வரை கண்களால் பருகி கொண்டிருந்த அருந்ததி திருமணம் விசயம் கேட்டவுடன் பேய்அடித்தது போல்  ஆகி விட்டாள்  அவள் முன்னால் கீர்த்தியை அழைத்து சென்று நிறுத்தியவன்  அவளை பார்த்து ஹெலோ எக்ஸ்‌க்யூஸ் மீ  எங்க ரூம் எங்க இருக்குனு காட்டுரீங்களா  என்று கேட்டான்.

மௌனமாக ஒரு அறைக்கு கூட்டி  சென்று காட்டினாள்  அடுத்த நிமிடம் கீர்த்தியை உள்ளே இழுத்து கதவை அறைந்து  சாத்தினான் கார்த்திக். அவன் கதவை அடைப்பதுக்குள்  பொறுமை இல்லாமல் அவனை நெருங்கி இறுக்கி பிடித்து அவன் நெஞ்சினில் சாய்ந்திருந்தாள்  கீர்த்தி. அவனுக்குமே  அப்போது அந்த அணைப்பு தேவையாக  இருந்தது.

சுவடுகள் பதியும்....

Episode # 09

Episode # 11

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.