(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 11 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

கீழே  அதிர்ச்சியோடு  நின்றவர்கள் பின்  அவர் அவர் திசையில் சென்று விட்டார்கள்.

கார்த்திக் மனம் முழுவதும் குழப்பம். விருந்தாளியாக தானே இவர்கள் என்னை பார்க்க வேண்டும். ஆனால் இவர்கள் கண்களில் அதையும் மீறி நான் இவர்களுக்கு தான் உரிமை உள்ளது போல் பார்க்கிறார்கள். யார் இவர்கள் அனைவரும். ஏதோ பெரிய விசயம் நடக்க போகுதோ. ஏன்   வாழ்க்கை நொடிகொரு தரம்  மாறுகிறது என்று யோசித்தான்

அதே நேரம் கீர்த்தியின் மனதிலும்  பயம் சூழ்ந்திருந்தது என் மாமாவை எல்லாரும் சேர்ந்து  ஆழ  வைக்க போறாங்க தெரிஞ்சே ஒண்ணும் செய்ய முடியாமல் இருக்கேனே  என்று நினைத்தவள் அவனை ஒட்டி கொண்டு படுத்து கொண்டாள். தன்  நினைவுகளை விட்டு அவளை பார்த்தவன் மனம் நிம்மதியானது . இன்னைக்கு  எங்களுக்கு  என்ன நடக்க  வேண்டியது ஆனால்  இங்க யார் வீட்டிலோ  இருக்கோம்.

ஒரு வாரமாக இந்த நாளுக்காக காத்திருந்து அவளை வம்பு செய்தது எல்லாம் ஞாபகம் வந்து சிரிப்பை உண்டாக்கியாது. சரியான  வாலு  என்று நினைத்து கொண்டே அவள் நெற்றியில்  ஒரு முத்தம் பதித்தான். இருவருமே அவரவர் நினைவொடு தங்கள் தூக்கத்தை தொடர்ந்தனர்.

ன்று முழுவதும் இருவருக்கும் எப்படி சென்றது என்று தெரிய வில்லை. மதியம் சாப்பிட அழைத்தார்கள். இருவரும் இறங்கி சென்ற போது இவனை மட்டும் தான் கவனித்தார்கள். கீர்த்தியை கவனிக்காதது கண்ணில் பட்டது. அவளுக்கு வைத்த சிறு  உணவையும் அவள் சாப்பிடாமல் அலைந்து கொண்டு இருப்பது தெரிந்தது. இரவு உணவை அறைக்கே கொண்டு வர சொல்லி விட்டான்

இரவு வீட்டில் உள்ள அனைவருக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இருவரும் பேசினார்கள் ஆனால் மல்லிகா மட்டும் அவனிடம் பேச மறுத்து  விட்டார்.அவனும் அம்மா அழுது கொண்டே இருப்பார்கள் என்று புரிந்து கொண்டான்.அன்று இரவு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கழிந்தது.

காலையில் கீர்த்திக்கு பட  பட  என்று இருந்தது. இருவரும் குளித்து முடித்து விட்டு கீழே  வந்தனர். சாப்பிடும் போது அவள் கைகளை பற்றி அருகில் அமர்த்தி கொண்டான். தன்னுடைய தட்டில்  இருந்து எடுத்து அதிகமாக இருக்கிறது இதையும் சாப்பிடு என்று சொல்லி அவள் தட்டில்  வைத்தான். எல்லாரும் அதை முறைத்து பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களை இருவரும் கண்டு கொள்ளாமல் உண்டு முடித்த பின்பு அவனை அழைத்தனர்.  இப்போதும் அவளை விடாமல் அருகில் உக்காற வைத்து கொண்டான்.

சுற்றி மொத்த குடும்பமே இருந்தது. இவர்களுக்கு எதிரில் விமலாவும்  சேதுராமும் இருந்தனர். அருந்ததி  கீர்த்தியை முறைத்து கொண்டு இருந்தாள்  அவள் அருகில் அவளுடைய அப்பா அம்மா மங்களமும் சுப்ரமணியும்  அமர்ந்திருந்தனர்.

இன்னொரு பெண் அவள் கணவருடன் அமர்ந்திருந்தாள் அவள் கைகளில் ஒரு அழகிய குழந்தை அமர்ந்திருந்தது.

எல்லாரையும் ஒரு முறை பார்த்தவன் கடைசியில் விமலாவை  பார்த்தான். விமலா  தான் அனைவரையும் அறிமுக படுத்தினார். இது என் அண்ணன் மணி அவனுடைய மனைவி மங்களம்  அது அவர்கள் மூத்த மகள் கீதா  அது அவளுடைய கணவன் கிரிஷ்ணா  அது அவர்கள் குழந்தை பிரபு

இது அண்ணணுடைய ரெண்டாவது மகள் அருந்ததி இவளுக்கு தான் உன்னை கட்டி வைக்ணும்னு நினைச்சோம் இப்ப தான் ஏதோ நடந்து போச்சே  என்ற உடனே அனைவரின் பார்வையும் கீர்த்தியின் மேல் கொலை வெறியாய்  விழுந்தது. அதை பார்த்தவளுக்கு சற்றே குறும்பு தலை தூக்க சட் என்று அவன் கைகளை இறுக்கி பிடித்து கொண்டு என் மாமா எனக்கு மட்டுமே சொந்தம் என்கிற மாதிரியான பார்வையை அவர்களை நோக்கி வீசினாள்.

அவள் செய்கையை பார்த்து கார்த்திக்கு  சிரிப்பு வந்து விட்டது. இந்த பழக்கம் இவளுக்கு இன்னும் போகல என்று நினைத்து கொண்டே அவர்களை பார்த்து கேட்டான்

நீங்கள் எல்லாரும் என்னுடைய சொந்த காரங்களா . உங்களை பார்த்தால் என் அம்மாவை போலவே இருக்கிறது.

அம்மாவை போலவா  அம்மாவே தான் அவள் உன் அம்மா இல்லை. நான் தான் உன் அம்மா இவர் தான் உன் அப்பா. அவன் தலைகளில் இடியை  தூக்கி போட்டாள்  விமலா

கிடைத்த அதிர்ச்சியில் கார்த்திக்கின் கண்கள் கூட சிறிது கலங்கி விட்டது.கீர்த்தியின் கைகளை இறுக பற்றி கொண்டான். அவள் முகத்தை பார்த்தான் அதில் சலனமே இல்லாமல் எனக்கு இந்த விசயம் தெரியும் என்று சொன்னது

விமலா  பேசி கொண்டே இருந்தார். பாத்திங்களா இந்த அநியாயத்தை என் பிள்ளையை என்னிடம் இருந்து பிரித்ததும் இல்லாமல் என்னை என்  வாயாலே  நான் தான் உன் அம்மா என்று சொல்ல வைத்து விட்டாளே அவள் நல்ல இருப்பாளா  என்று திட்டி கொண்டிருந்தாள்..

நான் இதை நம்ப மாட்டேன் என்றான் கார்த்திக்.

நான் சொல்வதை நீ நம்ப வேண்டாம் மகனே இங்கு இருக்கிறானே என் அண்ணன் மணி அவனிடம் கேளு நீ யார் மகன் என்று சொல்லுவான்.

அவர் மட்டும் உண்மையை சொல்லுவர் என்று எப்படி சொல்ல முடியும்.அவர் உங்கள் அண்ணன் தானே உங்களுக்கு சாதகமாய் தான் சொல்லுவார் இல்லை கார்த்திக் அவர் உன்னுடைய அம்மாவுக்கும் அண்ணன் தான் மல்லிகா என் கூட பிறந்த தங்கை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.