(Reading time: 5 - 10 minutes)

54. மருவக் காதல் கொண்டேன்... - மீரா ராம்

Maruva kathal konden

காத்தியாயினி…

பிரம்மரிஷிக்கு தட்சேஷ்வர் பிறந்து வெகு வருடங்கள் கழித்து ஒரு நாள் அவர் கோவிலுக்கு சென்றிருக்கையில் அங்குள்ள ஒரு மண்டபத்தில் கேட்ட ஒரு அழுகுரல் அவரை திரும்பி பார்க்க் வைக்க,

அங்கே ஒரு பச்சிளங்குழந்தை ஒரு பெண் குழந்தை தனியே ஆதரவற்று தரையில் படுத்து அழுது கொண்டிருந்தது பசியில்…

பிறந்து ஒரு சில நாட்களே ஆன அக்குழந்தையை யார் விட்டு சென்றிருப்பார்கள் என்ற நோக்கத்தில் அவர் அங்கே பக்கத்தில் உள்ள இடங்களில் தேட ஆரம்பிக்க, யாருமே தென்படவில்லை…

பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் இருந்தவருக்கு, அந்த குழந்தையை அங்கேயே விட்டு வர மனமில்லாது தன்னுடனே எடுத்து வந்து தட்சேஷ்வரிடம் காண்பித்தார்…

அவருக்கும் அக்குழந்தை பிடித்து போக, இரு தகப்பனுக்கிடையில் வளர்ந்தார் காத்தியாயினி…

தட்சேஷ்வரும், சோமநாதனும் பால்ய நண்பர்கள்… தட்சேஷ்வரின் வீட்டிற்கு ஒரு புது உறவு வந்திருப்பது கண்டு சோமநாதன் காத்தியாயினியைப் பார்க்க அவருக்கு அக்குழந்தையைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்து போனது…

கனி… கனி… என்று செல்லமாக அழைத்து விளையாடுவார் சோமநாதனும் காத்தியாயினியை…

உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத சோமநாதன் காத்தியாயினியை தன் தங்கையாக நினைக்க ஆரம்பித்தார்…

தட்சேஷ்வருக்கு காத்தியாயினி மகளாகவும் தங்கையாகவும் வளர்ந்தார்… அவரும் தங்கையை அப்படித்தான் வளர்த்தார்… அவளை எந்த சொந்த பந்தங்களும் எதுவும் சொல்லிடக்கூடாது என்று கவனமாக வளர்த்தார்… அவளை வார்த்தையால் யாரும் காயப்படுத்தினால் கூட அதை தாங்க தன்னால் முடியாதென்ற நிலைக்கு பாசத்தால் பிணைக்கப்பட்டார்…

காத்தியாயினி வந்து இரண்டு வருடம் கழித்து சோமநாதனுக்கு தங்கையாக பிரசுதி பிறந்தார்…

இருவரையுமே ஒருவராக பாவித்து அவர்களிடம் எந்த வித வேறுபாடும் பார்க்காமல் பழகினார் சோமநாதன்…

பிரசுதி சோமநாதனை அண்ணா என்று அழைக்கும் வேளையில், காத்தியாயினியோ தட்சேஷ்வரை மட்டுமே அண்ணன் என்று அழைத்தார்…

நாட்களும் அப்படியே சென்று கொண்டிருந்தால் விதிக்கு அங்கே வேளை தான் யாது?...

மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்ட காத்தியாயினியை படிக்க வைத்த தட்சேஷ்வருக்கு திருமணம் செய்து வைத்து வைக்க பிரம்மரிஷி முடிவு செய்த வேளை, சோமநாதனின் தங்கை பிரசுதியை தன் மகனுக்கு மணமுடித்தால் என்ன என்ற எண்ணம் உதித்தது அவருக்கு…

அவர் தன் எண்ணத்தை மகனிடம் கேட்க, அவரோ உங்கள் முடிவே என் விருப்பம் என கூறிட, பெண் வீட்டாருக்கும் அதில் சம்மதம் இருந்திட, விரைவிலேயே திருமணமும் முடிந்தது…

ஒரு வருடம் கழித்து, காத்தியாயினி படிப்பை முடித்த வேளை, அவருக்கும் திருமணம் முடித்து வைக்க பிரம்மரிஷி நினைத்த வேளை, தட்சேஷ்வரரோ தன் நண்பன் பெயரை சிபாரிசு செய்ய, பிரம்மரிஷிக்கோ தூக்கி வாரிப்போட்டது…

அவருக்கு சோமநாதன் காத்தியாயினியிடம் பழகும் விதம் தெரியும்… இருந்தும் மகன் இந்த முடிவை எடுக்கிறானே என அவருக்கு அதிர்ச்சியாயிருக்க, தட்சேஷ்வரோ தகப்பனிடம் நண்பனின் பெயரை சொல்லிவிட்டு, தங்கையைப் பார்க்க்ச் சென்றார் உடனேயே…

தன் விருப்பத்தை அவர் தங்கையிடம் தெரிவித்த வேளை, “அப்பா வார்த்தை எப்படி உனக்கோ, அதுபோல எனக்கு உன் வார்த்தை அண்ணா…” என்றார் காத்தியாயினி சுருக்கமாக…

அதுமட்டுமில்லாது, காத்தியாயினிக்கு சோமநாதன் மீது ஒருதலையானக் காதல் இருந்து வந்தது… அதை அவர் யாரிடத்திலுமே தெரியப்படுத்திக்கொள்ளவில்லை… சோமநாதனிடத்தில் கூட…

இன்று தன் அண்ணன் மூலம் தன் காதல் கைகூடப்போகிறது என்ற எண்ணத்தில் அவரும் சோமநாதனை கைப்பிடிக்கத் தயாராக சம்மதம் தெரிவித்திட,

தட்சேஷ்வரோ தங்கையின் அந்த ஒருதலைராகத்தினை அறிந்தே வைத்திருந்தார்…

சோமநாதனின் பார்வையில் எந்த கள்ளம் கபடமும் தென்படாத நேரத்தில், தன் தங்கை, நண்பனைப் பார்க்கும் பார்வையில் இருந்த அழகான காதலை இனம் கண்டு கொண்டார் தட்சேஷ்வர்…

கனி கனி… என்று சோமநாதன் காத்தியாயினியிடத்தில் அன்பாக இருப்பதையும் பார்த்தவர், தன் நணபனைத் தவிர காத்தியாயினியை வேறு ஒருவராலும் சந்தோஷமாகப் பார்த்துக்கொள்ள முடியாதென்று நம்ப, அது அனைவருக்கும் இடியாய் அமைந்தது சில நாட்களிலேயே…

சோமநாதன் தட்சேஸ்வரின் முடிவு தவறென்று கூறி, காத்தியாயினியை திருமணம் செய்து கொள்ள முடியாதென்று மறுத்திட, தட்சேஷ்வர்ரோ காரணம் கேட்டார்…

“எனக்கு பிரசுதியும் காத்தியாயினியும் வேறு வேறு இல்லை…” என பட்டென அவரும் கூறிவிட, ஆணி அடித்தாற் போல் உறைந்து போனார் தட்சேஷ்வர்…

தங்கையை எப்படி சமாதானப்படுத்த என்று தெரியாமல் குழம்பி போனவர், தங்கையிடம் வந்து பக்குவமாக எடுத்துக்கூற,

“அவருக்கு அவர் முடிவு சரின்னா, எனக்கு என் முடிவு சரி….” என்றார் அவர்…

பதறிப்போய் கேட்ட அண்ணனிடம், “எனக்கு திருமணமே வேண்டாண்ணா… காலம் முழுக்க நான் இப்படியே இருந்துடுறேன்…” என்றார் காத்தியாயினி…

தங்கையின் வார்த்தையில் மலைத்துப்போனவர், அடுத்து என்ன செய்து தங்கையின் மனதை மாற்ற என்று புரியாமல் தவித்த போது, பிரம்மரிஷி மகனுக்கு ஆறுதல் கூறினார்…

“ஒரு பக்கம் என் உயிருக்கும் மேலான காத்தியாயினி, இன்னொரு பக்கம் என் உயிர் நண்பன் சோமு… இரண்டு பேர்ல யாரை எப்படி சமாதானப்படுத்தன்னு எனக்கு தெரியலைப்பா… என்னால இந்த சூழ்நிலையை இப்படியே விடவும் முடியலைப்பா… எதாவது ஒரு முடிவு எடுத்தே ஆகணும்…” என தட்சேஷ்வர் உறுதியாய் கூறிய வேளையில் பிரம்மரிஷியோ நடக்கப்போவதை முன் கூட்டியே அறிந்தது போல் கலங்கி போய் நின்றார்……

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுபெறும்….

Episode 53

Next episode will be published as soon as the writer shares her episode.

{kunena_discuss:1001}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.