(Reading time: 15 - 30 minutes)

அப்ப  தான் அததை  கொஞ்சம் தெளிவானங்க. பாசத்தை காமிச்சு கேட்டா  கூட உங்களை விட்டு கொடுக்க முடியாமல் துடிச்சிருப்பாங்க. ஆனால்  பணத்தை காட்டி உங்களை ஏமாத்த  முடியாதுனு  அத்தைக்கு தெரியுமே எப்படி ஆனாலும் என் பையன் என்கிட்ட வருவானு நம்பி சரி நான்  அவனை அனுப்பி வைக்கேன் நீயா அவனை அனுப்புற  வரைக்கும் நாங்க அவனை பார்க்க  மாட்டோம் னு சொல்லி  இருக்காங்க.

ஆனா அத்தை  அப்றம் முழுவதும்  அழுகையாம் உங்களுக்கு உண்மை தெரிஞ்சு துடிப்பீங்களே மாமா அதான்.

ரொம்ப கஸ்ட படுரீங்களா மாமா. எனக்கு கஸ்டமா இருக்கு மாமா.

கஸ்டமா இருந்தது கீர்த்தி இப்ப இல்ல. உண்மையிலே அம்மா பயப்பட மாதிரி இவங்க பாசத்தை காமித்தால் நான் கவலை பட்டிருப்பேன்  ரெண்டு பேர் பக்கமும் யோசிக்காமல். இப்போது அப்படி இல்லை. சரி வா கிளம்பலாம். அம்மா அழுதுட்டே  இருப்பாங்க

நிஜமாவா  மாமா.ஆனா இவங்க அனுப்புனா  தானே  போக முடியும் அனுப்புவாங்களா

அனுப்ப வைக்கணும் ஆனா போயே ஆகணும் வா

இருவரும்  கிளம்பி கீழே  வந்தார்கள். போய் விடுவார்களோ என்று கலக்ககத்தோடு அனைவரும் அவர்களை பார்த்தார்கள். கார்த்திக் தெளிவாக பேச ஆரம்பித்தான்.

இங்க பாருங்க அம்மா. அவன் அம்மா என்று அழைத்தத்தில் விமலா  பரவசப்பட்டு  கண்ணீர் சிந்தினாள் அப்போது தான் புரிந்தது எத்தனை பெரிய சந்தோசத்தை  தொலைத்திருக்கிறேன்  என்று. அப்படியே கூப்பிடு கார்த்திக் என்று விம்மினாள். அவன் அப்பாவுக்குமே கண்ணீர் வந்து விட்டது.

நான் இப்போது அழைத்தது என்னை பெற்றததால் தான் ஆனால் மனசார என்னால் உங்களை அம்மாவாக ஏற்று கொள்ள முடியாது. அது உங்களுக்கும் தெரியும். உங்களை பற்றிய எல்லா உண்மைகளும் தெரிந்த பின்னால் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்ட போது சேதுராம்  மற்றும் விமலா  தலை குனிந்தனர்.

தன்  மாமாவை பார்த்து பேசினான். எப்படி உங்களுக்கு ஒரு தங்கை தான் உயர்த்தி மற்றொரு தங்கை முக்கியம் இல்லாமல்  தெரிந்தாள்  என தெரிய வில்லை. நீங்கள் செய்தது துரோகம் உங்களை என்னால் மன்னிக்கவே முடியாது உங்கள் முகத்தை கூட இனிஒரு  தரம் பார்க்க விரும்ப வில்லை.எனக்கு மாமா என்றால்  அது கீர்த்தியின் அப்பா மட்டுமே நீங்கள் அல்ல

அம்மா அப்பா என்னை போக விடுங்கள். ஒரு மகனா  என்னுடைய கடமைகளை உங்களுக்கு நான் எப்பவும் செய்வேன். அவர்கள் மாளிகையை ஒரு முறை பார்த்தவன் உங்கள் வசதியை  பார்த்தால் என் உதவி கூட உங்களுக்கு தேவை படாது.என்னை  என் வீட்டுக்கு அனுப்பி விடுங்கள்.  என்னால் இங்கே வாழ முடியாது மூச்சு முட்டியே  செத்து விடுவேன்

நீங்கள் என்னை தேடியது உங்களுக்கு வேறு குழந்தை இல்லாததால் தான் ஆனால் என் அம்மா அப்பா எனக்காக வேறு குழந்தையே பெற்று கொள்ள வில்லை. என்னால் எப்படி அவர்களை விட்டு வர முடியும். அதுமட்டும் இல்லாமல் சொத்து எனக்கு  அவசியம் இல்லை. இப்போது உங்களை என்னோடு அழைத்து ஒரு சாதாரண வாழ்வை கொடுத்தால்  அதை ஏற்க  உங்களால் முடியாது. இந்த வசதி இல்லாமல் தவிப்பீர்கள் அது போல தான் எனக்கும். இதுவரை எனக்கு என்று நீங்க ஏதும் செய்யலை இப்போது மட்டும் செய்யுங்க என்னை போக விடுங்கள்.  என்னை எப்பவாது  பாக்கணும்னு  தோன்றினால்  பார்க்க வாங்க இல்லை என்னை கூப்பிடுங்க

நான் வந்து பார்த்துட்டு போறேன். இந்த சொத்துக்களை எல்லாம் சொததுக்காக கூட பிறந்த தங்கைக்கே துரோகம் செய்த உங்கள் அண்ணன்  பிள்ளைகளுக்கே  கொடுத்து விடுங்கள். எப்போது வேண்டுமானாலும் கூப்பிடுங்கள் கை எழுத்து போட நான் தயார்.

என்னங்க  பாருங்க எவ்வளவு பெரிய மாணிக்கத்தை  நாம தொலைசிருக்கோம். என் தங்கச்சிக்கு பெரிய பாவம் செஞ்சத்துக்கு தண்டனை தான்  நம்ம பிள்ளை நமக்கு இல்லைனு ஆகிவிட்டது  போல.

ஆமா மா அப்போது எதுவும் பெருசா தெரியலை. இப்போது பண்ண  தப்பை  நினைத்து வெக்கமா  இருக்கு எங்களை மன்னித்து விடு  கார்த்திக்.

அம்மா அப்பா ரெண்டு பெரும் அழாதீங்க. இது தான் நடக்கணும்னு  இருக்கு. உங்களுக்கு என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தால்   சென்னைக்கு வாருங்கள். நாங்கள் கிளம்பட்டுமா  அம்மா

போய் வாங்க பா. ரெண்டு பெரும் நல்லா  இருங்க மல்லிகாகிட்ட  மன்னிப்பு கேட்டேனு  சொல்லிருங்க  என்றார் விமலா.

அவர்களுடைய பொருள்கள் காரில் அடுக்க பட்டது. எல்லாரும் தோட்டத்தில் காரில் ஏறுவதுக்கு  ஆயத்தமாக இருக்க கீர்த்தி மட்டும் அருந்ததியை பார்த்தாள்.

அருந்ததி கார்த்திகை பார்த்து கொண்டு இருந்தாள்.

கொல்லிகண்ணு  கொல்லி கண்ணு எப்படி பாக்கா  பாரு சட் என்று அவள் பக்கத்தில் போனவள் என்னங்க ஒரு பாட்டிலில்  தண்ணி அடச்சு  தாங்களேன் என்றாள்.

சுவடுகள் பதியும்....

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1130}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.