(Reading time: 9 - 17 minutes)

தொடர்கதை - நெஞ்சத்தில் பதிந்த காதலின் சுவடுகள் - 12 - கார்த்திகா கார்த்திகேயன்

Nenjathil pathintha kathalin suvadugal

வள் கேட்டதில் அருந்ததிக்கு  கோபம் வந்தாலும் காட்ட முடியாமல் உள்ளே சென்றாள். அவள் உள்ளே சென்றவுடன் கையில் இருந்த கைக்குட்டையை  அவள் நின்ன  இடத்தில் போட்டவள் குனிந்து அதை எடுப்பது போல் அவள் காலடி மண்ணை அள்ளிக்கொண்டாள்.

கிளம்பி விட்டனர். ஆனால் மனம் முழுவதும் மல்லிகாவையும்  மாணிக்கவாசகத்தையும் எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்ற பயம் மட்டுமே இருந்தது.

வீட்டுக்கு வந்தவுடன் முதலில் பட்டது மூலையில் அமர்ந்து பல நாள் பட்டினி  கிடந்தது போல் இருந்த மல்லிகா தான். ஒரு நாளில் இப்படி உருகுலைய  முடியுமா. இது தான் பாசம். என்று நினைத்து கொண்டு அன்னையின் மடி  சாய்ந்தான். இதுவரை இருந்த சோகம் அனைத்தும்  தீர்ந்துவிடும் போல அழுது தீர்த்து விட்டாள்  மல்லிகா.

வந்துட்டியா  பா இனிமே போக மாட்டியா  இல்லை எங்களை விட்டு போய்ருவியா. எங்களை உன்னுடைய அம்மா அப்பாவ ஏத்துகுவியா  எங்களை வெறுத்து ஒதுக்கிற  மாட்டியே என பல கேள்வி கேட்டனர் மல்லிகாஉம்  மாணிக்கவாசகமும் .

இருரையும் கட்டி கொண்டு அழுது தீர்த்தவன் அங்கு நடந்த அனைத்தையும் சொன்னான். எனக்கு பெற்றோர்கள் நீங்கள் மட்டும் தான் இடையில் நடந்த விசயங்கள் அனைத்துமே கனவு என்று நினைத்து மறந்து விடுவோம். ஆனால்  அவர்கள் மகனே என்று என்னை அழைத்து கொண்டு வந்தால் அவர்களை என்னால் ஒதுக்க  முடியாது. இந்த நல்ல  ஒழுக்கத்தை சொல்லி குடுத்தது நீங்கள் தான் அம்மா.

எல்லாரும் சரி என்று சொல்லி புன்னகைத்தனர். கீர்த்தி தான்  கார்த்திக்கை  அந்த மண்ணை  வைத்து சுற்றி போட்டாள். இவளுக்கு மண்ணு எப்படி கிடைத்தது  என் கூட தான இருந்தா  என்று யோசித்தான் ஆனா அவனுக்கு  தெரியலை.

கீர்த்தி வந்துவிட்டாள்  என தெரிந்து வந்தார்கள் பவித்ரனும்  பொன்மணியும். உண்மை தெரிந்து குதி  குதி  என்று குதித்தார் பவித்ரன். எப்படி நீங்க மறைக்கலாம். என் பொன்டாட்டியின்  கூட பிறந்த அண்ணன் மகன் என்று நினைத்து தான்  என் பொண்ணை  கட்டி குடுத்தேன் இங்கே இத்தனை பெரிய விசயம் நடந்திருக்கிறது என்று கத்தினார்.

இருக்கும் மனநிலையில் அவரின் பேச்சு அனைவருக்கும் மன வருத்தத்தை குடுத்தது. அவர் ஒரு வெகுளி. எல்லாரும் அவருக்கு முக்கியத்துவம் குடுக்க வேண்டும் என்று நினைப்பார். இந்த விசயத்தை இவர்களே இவரிடம் சொல்லி இருந்தால் அவரே ஏற்று  கொண்டிருப்பார்.

உண்மையை மறைத்ததினால் கோபம். கீர்த்திக்கு அவர் மன நிலை நன்கு  புரிந்து விட்டது. தன்னுடனே சண்டை பொடுபவர் ஆச்சே புரியாமல் போகுமா.

வா கீர்த்தி இவங்க குடும்ப உறவே நமக்கு வேண்டாம். நம்ம வீட்டுக்கு செல்லலாம். பொன்மணியை பார்த்தவர் உனக்கு உன் அப்பா அண்ணன் வேண்டும் என்றால்  இவர்களுடனே இரு. இல்லாவிட்டால் இப்போதே வந்துவிடு எங்களுடன் என்றார். மறுபடியும் கீர்த்தி என்று அழைத்தார்.

இதோ வரேன்  பா என்று கிளம்பி விட்டாள் .எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர். அவள் எப்படியாவது அவள் அப்பாவிடம் கெஞ்சுவாள் சமாதான படுத்துவாள்  என்று எதிர்பார்க்க  அவள் அவருடன் கிளம்ப தயாராகியது அதிர்ச்சி அளித்தது.

கார்த்திக் இன் முகம் பேய்அறைந்தது  போல ஆகி விட்டது. அவர் தான் புரியாம கூப்பிடுறார்னா  இந்த லூசும் கிளம்புது  பாரு கைல சிக்கு டி உனக்கு இருக்கு என்று மனதினுள் குமைந்தான்

தன்  மகள் தன்னுடன் வருகிறாள் என்ற உடனே பெருமையாக அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். என் பேச்சு தான் கேட்பாள் என்ற மமதை  தெரிந்தது. அனைவரும் தடுக்க கூட தோன்றாத்வர்களாய்  இருந்தனர்.

நாலு அடி எடுத்து வைத்து விட்டு  அப்பா எனக்கு மயக்கமாக வருகிறது என்றாள் கீர்த்தி அவளை பிடித்தவர் அங்கேயே அமர வைத்து தன்  மடிகளில் சாய்த்து கொண்டு பதறினார். எல்லாருமே அருகில் வந்து விட்டனர்.

கீர்த்தி கீர்த்தி குட்டி என்ன டா  செய்யுது வா ஹாஸ்பிடல் போகலாம் என்றார்கள் அனைவரும்.

நானே என் பொண்ணை  கூட்டிட்டு போவேன் யாரும் வர வேண்டாம் கீர்த்தி என்னமா  செய்யுது என்றார் பவித்ரன்

அதுக்கு அவள் சொன்ன பதிலில்  கார்த்திக் நிஜமாகவே பெயறைந்தததை போல் ஆகி  விட்டான்

வைத்துக்குள்ள இருக்கிற உங்க பெயரன் வெளியே வர ஆசை படுறான்  பா அதான்  மயக்கம் என்றாள் கீர்த்தி.

மாணிக்கவாசகம்  மல்லிகா பொன்மணி அனைவரும் ஆனந்ததுடன்  கார்த்திக்கை  பார்த்தனர் ஆனால் அவன் தலை இட வலமாக ஆட்டினான்  அவள் சொன்னது பொய்  என்று சொன்னது. எல்லாரும் குழப்பத்தோடு அவளை பார்த்தனர்.

ராஜூ தாத்தா மட்டும் சிரித்து  கொண்டு இருந்தார். அவரை பார்த்த கார்த்திக்கும் கொஞ்சம் உண்மை விளங்கியது. ப்ராடு ஏமாத்துது

பவித்ரன்  முழுகவனமும் கீர்த்தனா  வின்  மேல் தான் இருந்தது. ஆனந்தத்தில் மூச்சு விட மறந்து போனார். குட்டி பாப்பா வயிற்றில் குட்டி பாப்பா  என்றால்  அவருக்கு எப்படி இருக்கும் எல்லா அப்பாவுக்கும் தன்  மகள் குழந்தை தானே

ஒரு வாராக அவருடைய கண்களை நேருக்கு நேராக பார்த்தாள். அதில் இப்போது நான் என்ன செய்ய  வேண்டும் என்ற கேள்வி இருந்தது. அவருக்கு தான் செய்ய  நேர்த்த காரியத்தின் வீரியமும் புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.