(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 07 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

தோவொரு மயக்கம் எனை ஆட்கொண்டுவிட்டது. மறந்தேன் நான் சகலமும், இந்த அணைப்பிற்காகவே ஏங்கியதோ என் மனம். அகப்பட்டுவிட்டேன் அதில் ! உன் இனிய முத்தம் வேகமாய் வந்தடைந்த இதழ்களால், என் இதழ்களை நனைத்துவிட்டுப் பிரிந்தது. அப்பிரிவு தாளாமல் மீண்டும் இணைந்தாய் ! மனதினுள் மீண்டும் மகிழ்ச்சிப்பூக்கள். வெட்கம் தாளாமல் உனைத் தள்ளிவிட்டு விலகினேன். நான் நேசித்த விழிகள் கொஞ்சின வா... என்னும் ஒற்றைச் சொல் காற்றாய் மிதந்து போதையோடு வர, மறுப்பெனத் தலையசைத்தாலும் என் கால்கள் தன்னிச்சையாய் நகர்ந்தன உன்னிடம். உன் அணைப்பில் கட்டுண்டேன் இதழ்களால் இதயத்தைக் குடித்தாய். 

சுப்ரியா நசநசத்த உடைகளைக் கழற்றிவிட்டு அலுப்புத் தீரக் குளித்து இரவு உடைக்கு மாறினாள் பசி வயிற்றைக் கிள்ளியது, டைனிங் டேபிளில் மதியம் வாங்கிய பிட்சாவும், காய்ந்துபோய் கிடந்த நான் ரொட்டியும் விரக்தியாய் சிரித்தது. பிரிட்ஜில் இருந்த பாலையும் இரண்டு சிலேஸ் பிரட்டையும் உண்டுவிட்டு கையில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்தவள் நான்கு பக்கங்கள் படிக்கும் போதே தலைவலி மண்டையைப் பிளந்தது. குரோசின் மாத்திரைப் பட்டையை உரித்து விழுங்கினாள் கிழிபட்ட மாத்திரைப் பட்டைத் தரைக்குச் சென்றது இதைப்போலத்தான் பல பெண்களின் நிலையும் உள்ளேயிருக்கும் ஆசையை மட்டும் உரிந்து கொண்டு பெண்மையை இப்படித்தானே வீசுகிறார்கள் என்ற யோசனை வந்தபோதே காலிங்பெல் சப்தத்தில் யாராக இருக்கும் என்று நினைப்பில் யாராக இருந்தாலும் இப்போது முடியாது என்று கறாராய் சொல்லிட வேண்டும் என்ற எண்ணத்தோடு கதவைத் திறந்தவள் ஆனந்த அதிர்விற்கு உள்ளானாள் சுப்ரியா ஏய் ?! ரவி நீங்களா ? ஆச்சரியமாய் இருக்கு உங்களை நான் இங்கே எதிர்பார்க்கவே இல்லை ப்ளீஸ் கம்...?!

ரவி முகத்தில் சுரத்தில்லாமல் வந்து அமைதியாய் அமர்ந்தான். நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கல்லூரி மாணவனாய் ஒரு கும்பலோடு வந்து சந்தித்தது, அதன் பிறகு, ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை போல என்போன்றவர்களுக்கு காதல் உணர்வெல்லாம் ஒத்துவராது அவனை விலக்கியும் விடாமல் வற்புறுத்தி வந்தவன் நடுவில் காணாமல் போனான். பிறகு ஒருநாள் அவனுடைய கல்யாணப்பத்திரிக்கை தபாலில் வந்தடைந்தது. இதைப்போல எத்தனையோ முறை பார்த்தாகிவிட்டது. சிரிப்புடன் அதைக் கடந்து போனாலும், அவ்வப்போது ரவியின் நினைப்பு அவளுள் தலைதூக்கும். சுப்ரியா காபியோடு வந்தமர்ந்தாள் முன்பைக் காட்டிலும் அழகாகவே இருந்தாள். எப்படியிருக்கே?

எனக்கென்ன நித்தம் கல்யாண தேவதை நல்லாத்தான் இருக்கேன். நீயெப்படியிருக்கே உன் பொண்டாட்டி, பிள்ளை எல்லாம் ? 

ம்... கல்பனா ரொம்ப நல்லவ என்னை நல்லா கவனிச்சிகிறா, கல்யாணம் குடும்பம் தொழில்ன்னு எந்த பிரச்சனையும் இல்லை குழந்தையைத் தவிர...?! 

ஏய் இது ஒரு பிரச்சனையா நீ எந்த உலகத்திலே இருக்கே ? இரண்டு பேரும் சின்னவயசு கொஞ்சநாள் ஜாலியா இருந்துட்டு அப்புறம் குழந்தை பெத்துக்க வேண்டியதுதானே, அதுக்கும் மேல தாமதம் ஆனாலும் இப்போ மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கே, 

உன்கிட்டே நான் மறைக்க விரும்பலை சுப்ரியா நானும் கல்பனாவும் வெளியூர் போயிருந்தப்போ ஏற்பட்ட விபத்திலே அவளோட கர்ப்பபையை எடுக்க வேண்டியதாகிப் போயிட்டது. வீட்டுக்கு ஒரே பையன் வாரிசை எதிர்பார்க்கிறாங்க அவங்ககிட்டே வேற எதையும் சொல்லமுடியலை, விஷயம் தெரிந்தா இரண்டாவது கல்யாணம் செய்துக்க சொல்லி வற்புறுத்துவாங்கன்னு பயமா இருக்கு, கல்பனா குழந்தை மாதிரி, சரி வேற குழந்தையை தத்து எடுத்துக்கலான்னா அதுக்கும் மாட்டேங்கிறா ?! பிறக்கும் குழந்தை என் ரத்தமா இருக்கணுமாம். ஏற்கனவே குழந்தை விஷயத்திலே மனசொடிஞ்சி போயிருக்கிற அவளை மேலும் வற்புறுத்தத் தோணலை அப்போத்தான் வாடகை தாய் மூலமா குழந்தையை பெற்றுக்கொள்ளும் வழிமுறையைப் பற்றி சொன்னா ?! எனக்கு உன் ஞாயபகம் தான் வந்தது சுப்ரியா, யாரோ முன்னப்பின்ன தெரியாத ஒருத்தர் மூலமா எனக்கு குழந்தை பிறக்கறதை விட அந்த குழந்தையை நீ ஏன் பெற்றுத் தரக்கூடாது எனக்காக இதை செய்வியா என்று ரவி கேட்டபோது சுப்ரியா சிலையாய் அமர்ந்திருந்தாள். 

லட்சணா சுப்ரியாவின் டைரியின் முதல் மூன்றுப் பக்கங்களை அப்போதுதான் படித்துக்கொண்டு இருந்தாள் அசோக்கின் வரவில் கலைந்து நிமிர்ந்தவள் ? உன் பார்வைக்கான அர்த்தம் புரியது அசோக் இதென்ன புது பிரச்சனைன்னு தானே ?

ம்...அங்கே வழக்கு தொடர்பான வேலைகள் நடந்திட்டு இருக்கு இதுக்கு நடுவிலே இப்படியொரு சிக்கல் இது.....

கண்டிப்பா மாயா இல்லை ? இவங்க பேரு சுப்ரியா ?! 

அதை நான் வேணுன்னா நம்பலாம் ஆனா கமல் நம்பத் தயாரா இல்லை, இவங்களை நீ எப்படி பார்த்தே ? 

ஒரு கருத்தரங்கிற்காக பெங்களூரு வந்திருந்த போதுதான் லட்சணா அவளைக் கண்டாள். விபத்தில் சிக்கிக்கொண்ட அவளை மருத்துவமனையில் யாரோ சேர்த்திருந்தாக சேர்த்திருந்ததாகவும், கூட இருந்த நபரும் டிரைவரும் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து விட்டதாக சொல்லினர் மேலும் அவளிற்கு சொந்தமான ஒரு பழைய பெட்டியும் அங்கே இருந்தது. கொண்டு வந்து சேர்த்தவர் மனிதாபிமானமிக்கவராக இருக்கக்கூடும் சிஸ்டர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.