(Reading time: 11 - 21 minutes)

இல்லைன்னா உயிருக்குப் போராடிக்கொண்டு இருக்கும்போது கையிலிருக்கிறதை சுருட்டிக்கொண்டு போறவங்க இருக்கிற உலகத்திலே, பழைசா இருந்தாலும் கொண்டுவந்து கொடுத்திருக்காங்களே நல்லவிஷயம்தான் என்றார் நர்ஸ். 

அதன்பிறகு என்ன பண்றதுன்னு தெரியலை டாக்டர்கிட்டே சொல்லிட்டு இங்கேயே தங்கிட்டேன், உங்களை வரவைக்கிறது தான் நல்லதுன்னு தோணுச்சு, 

நடக்கிறது எதையும் நம்ப முடியலை ரொம்ப வியப்பா இருக்கு, மாயாவை இழந்து மனரீதியா துன்பப்பட்டு இருந்த கமலுக்கு இது நிச்சயம் ஆறுதல்தான், அவன் அது மாயாதான்னு அவன் உறுதியா நம்புறான். மாயா மேல வச்சிருந்த காதல்தான் அவளை எனக்கு திருப்பித் தந்திருக்குன்னு பினாத்தறான். 

அப்படியே விட்டுட்டு அசோக், மனுஷனோட மனசு விசித்திரமானது, கமல் அண்ணா இப்போ இருக்கிற மனநிலை அவருக்கு நல்லதுன்னா அப்படியே இருக்கட்டும், ஒரு கட்டத்திலே உண்மையை ஏத்துக்கும் மனப்பக்குவம் அவரோட மனசுக்கும் மூளைக்கும் கிடைக்கும் அப்போ பார்த்துக்கலாம்.

ம்...நான் நடந்ததை வீராகிட்டே போன்ல பேசிடறேன். இந்த பொண்ணுக்கு ஏற்பட்ட விபத்து எப்படிப்பட்டது ? இவங்க யார் ? கூட வந்தது யார் ? இப்படி எல்லா விவரமும் நமக்கு கிடைக்கணுமின்னா லோக்கல் ஸ்டேஷனில் ஏதாவது உதவி கிடைக்கிதான்னு பார்க்கலாம். சரி இவங்க எப்போ சுயநினைவுக்கு வருவாங்க, 

அடிபட்டதுலே அவங்களோட நிலைமை கொஞ்சம் சீரியஸ்தான், இன்னும் கொஞ்சநாள் கவனிப்பிற்குப் பிறகுதான் எதையும் சொல்லமுடியுமின்னு டாக்டர் சொல்றார். அப்பறம்,,,, இது அந்த பொண்ணோட டைரி, நிறைய எழுதியிருக்காங்க அவங்க பேரு சுப்ரியா அவங்க ஒரு 

என்ன ? எதுக்கு தயங்கறே ?

இந்த சுப்ரியா... ஒரு ......... விலைமாது.......! 

வீரா தன் முன்னால் அமர்ந்திருந்த மாயாவின் காரியதரிசி வினிதாவை ஆழமாக பார்த்தார். அவளிடம் எந்த அளவிற்கு உண்மைத்தன்மை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே அந்தப் பார்வை. கமல் கொடுத்த புகாரின் பேரில் தன் விசாரணையை வேறு விதமாய் முடுக்கிவிட்டுக் கொண்டு இருந்தார். முதலில் பேசியது காரியதரிசி வினிதாவிடம்தான் !

நீங்க எவ்வளவு நாளா மாயா கூட இருக்கீங்க ? அவங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததை சொல்லுங்க, 

ஏற்கனவே நான் விசாரணையில் எல்லாம் சொல்லியிருக்கேனே ஸார். 

மிஸ் வினிதா அது ஒரு ஜெனரல் என்கொயரி இப்போ மிஸ்டர். கமல் மாயாவின் கேஸை ரீஓப்பன் பண்ணியிருக்காரு, அதனாலதான் மறுபடியும் ? 

இப்படி ஒரு விசாரணையை நானே தொடங்கணுமின்னு எதிர்பார்த்தேன் ஸார் கமல் முந்திவிட்டார். எனக்கு பூர்வீகம் சேலம் பக்கம் அப்பா ரிட்டையர்டு ஸ்கூல் டீச்சர், குடும்ப கஷ்டம் காரணமா நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் முடிச்சிட்ட பிறகே வேலைக்கு வந்துட்டேன். என்னுடைய ஓய்வு நேரங்களில் வளசரவாக்கத்தில் உள்ள குழந்தைகள் விடுதிக்கு செல்வது வழக்கம், அந்த விடுதிக்கு மாயா தன்னோட பிறந்தநாளை கொண்டாட வந்தப்போ விடுதி உரிமையாளர் மூலமா எனக்கு மாயாமேடமின் அறிமுகத்தோடு வேலைையும் கிடைச்சது. மாயா ஒரு தனிமை விரும்பி, வீட்டுலே உள்ளவங்ககிட்டே கலகலப்பா பேசி நான் பார்த்ததே இல்லை, அவங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உண்மையைச் சொல்லணுமின்னா அவங்க எனக்கு ஒரு ரோல் மாடலும் கூட, என் முகத்தைப் பார்த்தே எத்தனையோ முறை உதவியிருக்காங்க, கடைசியா என்னோட வாழ்க்கையையே எனக்கு திருப்பித் தந்துட்டாங்க

புரியலை...

ஸார் சில விஷயங்களை நான் என்கொயரியில் சொல்லலை காரணம் மாயா மேடமின் காதல் யாருக்கும் தெரியாது, இப்போ கமல் ஸாரே விசாரணைக்கு ஒத்துக்கிறாருன்னு வரும்போது எனக்குத் தெரிந்த விஷயத்தை நானும் சொல்றேன். பெங்களூர் கிளம்பும்போதே சந்துருவைக் கல்யாணம் செய்துக்க சொல்லி ஒரே சண்டை. பாவம் ஸார் மாயா மேடம் சாதராண கிளார்க் வேலைக்கு போறவன் கூட மைண்ட் ப்ளஸன்டா இருந்தாத்தான் வேலை பார்க்க முடியும், அதிலும் மாயா மேடம் கலைக்குன்னு வாழறவங்க, அவங்களால எப்படி நிம்மதியா ஆட முடியும், அன்றைய பிரச்சனை முடிந்து மாயா மேடம் கிளம்பிய பிறகு சந்துரு என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னார். சந்துரு மேல எனக்கும் ஒரு பிடிப்பு இருந்ததால் நானும் அதற்கு சம்மதிச்சேன். அம்மாவை சமாதானப்படுத்திய பிறகு கல்யாணம் செய்து கொள்ளறதாகவும் மாயாமேல் எனக்கு காதல் இல்லைன்னும் சத்தியம் செய்தார். இந்த விஷயத்தை சொன்னா அவங்க மனசு கொஞ்சம் சந்தோஷப்படுமேன்னு நைட் அவங்களுக்கு போன் செய்தேன். 

மேடம் இனிமே நீங்க எதற்கும் கவலைப் படவேண்டாம். கமல் சாருடன் உங்கள் வாழ்க்கை அமைய எந்த பிரச்சனையும் இல்லை, 

என்ன சொல்றே வினிதா அத்தை மனசு மாறிட்டாங்களா ?

இல்லை மேடம் மாற வேண்டியவங்க மனசை திருந்துட்டாங்க ?

யாரை சொல்றே ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.