(Reading time: 10 - 19 minutes)

15. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

ன்ன செய்வது என்று தெரியாமல் அஸ்வின் அறையின் முன்னே நின்றிருந்தாள் கவி.அவள் நின்றுக் கொண்டிருக்கும் பொழுதே அறையின் கதவு டக்கென்று திறக்க அதை எதிர்பாராத கவிக்கு பயம் சொல்லாமல் கொள்ளாமல் ஒட்டிக்கொள்ள அவளது உடம்பு நடுங்க தொடங்கியது.

அவளது வருகையை அவள் வந்த பொழுதே உணர்ந்த அஸ்வின் அவள் வருவாள் என்று காத்திருக்க அவள் வராமல் இருக்கவும் அவனது உடலின் சோர்வும் சேர்ந்து கோபத்தை வரவைத்திருந்தது.அவளை திட்டும் எண்ணத்துடன் வெளியில் வந்தவன் அவளது அரண்ட முகத்தை பார்த்து தனது கோபத்தை கட்டுப் படுத்திக்கொண்டான்.

வெளியில் வந்து நின்ற அஸ்வினையே பேந்த பேந்த கவி பார்த்துக் கொண்டிருக்க அதைப் பார்த்த அஸ்வினிற்கு சிரிப்புதான் வந்தது கோபம் மறைந்து.

“உள்ள வா..,இப்படியே எவ்வளவு நேரம் இப்படியே  நிக்கப் போற..”என்று கூறிவிட்டு அவள் உள்ளேபோக வழி விட்டு நின்றான் அஸ்வின்.

அவனைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் கவி.அவள் உள்ளே சென்ற உடன் கதவை மூடிவிட்டு வந்தான் அஸ்வின்.

கவியை பொறுத்த வரை ஏதோ ஒரு தனிதீவில் தவிக்க விட்ட நிலையில் இருந்தது, இப்பொழுது கவியை பொறுத்த வரை அஸ்வினது அறை ஒரு ஜுராசிக்பார்க், மாதிரி பயத்துடனே அங்கு நின்றிருந்தாள்.

கதவை மூடி விட்டு வந்த அஸ்வின் அவளது பயத்தை புரிந்துக் கொண்டு அவளை காய படுத்தாமால் பேச வேண்டும் என்று நினைத்தான்.

அவளுக்கு அருகில் அவன் செல்ல,அவனது ஒவ்வொரு காலடிக்கும் அவளது இதயம் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்துக் கொண்டிருந்தது.

அவனது அருகாமையை தனக்கு மிக அருகில் உணர்ந்தவளுக்கு,நிற்க முடியாமல் அவளது கால்கள் துவண்டன.அவளுக்கு இது புது அனுபவமாக இருந்தது.அவனது அருகாமை எதற்காக தன்னை இவ்வளவு பாதிக்கிறது என்று அவளுக்கு புரியவில்லை.அவன் தன்னிடம் கடுமையாக நடந்துக் கொள்வதனால் தான் தனக்கு அப்படி தோன்றுவதாக நினைத்தாள் கவி.

அவளது நிலையை உணர்ந்தவன் இப்பொழுது பேசினால் அது எதுவும் அவளது கருத்தில் பதியாது என்று நினைத்தவன் எதுவும் பேசாமல் கவியை தூங்க சொல்லிவிட்டு பால்கனி நோக்கி சென்றான்.அவனுக்கு தனது மனதை நிலைப்படுத்த அவகாசம் தேவைப்பட்டது.அவளது அந்த தவிப்பு தன்னை ஏன் இவ்வளவு பாதிக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.தனது மனைவி என்ற எண்ணமா..,இல்லை தாத்தா பேசியதால் வந்த மன மாறுதல என்று அவனுக்கு தெரியவில்லை. 

அவன் போன உடன் எங்கே தூங்குவது என்று தெரியாமல் முழித்தவள் கீழே படுப்பதற்காக தயார்ப்படுத்திக் கொண்டிருந்தாள் கவி.

உள்ளே வந்த அஸ்வின் அவள் கீழேப் படுப்பதற்கு தயார்ப் படுத்திக் கொண்டிருப்பதை பார்த்த உடன் அவனுக்கு கோபம் வந்தது.தாத்தா கூறியதால் மட்டுமே தனது அறையில் தாங்க ஒத்துக் கொண்டான்.தாத்தா என்னவோ பழையப் பட ரேஞ்சுக்கு,”அவளுக்கு இனிமே நீ தான் எல்லாம்,அவளை நீ தான் பாத்துக்கணும்..,அப்படி இப்படி பேசி அனுப்புராறு..,இவ தான் இனிமே உனக்கு வாழ்க்கை முழுக்க,அவ எங்க இருந்து வந்தானு பார்க்காத இனிமே அவளோட வாழ்கையிலும் சரி உன்னோட வாழ்கையிலும் சரி..,அவ இனிமே உன்னோட ரூம்ல தான் தங்குவா..,தனியா இருந்தா நீங்க ரெண்டு பேரும் தனியா தான் இருப்பீங்க” என்று டயலாக் பேசி என்ன அனுப்புறாரு ஆனா இவளுக்கு என் கூட இருக்கவே புடிக்கவில்லை போல,ஒரு வேலை அந்த ஆகாஷ கல்யாணம் பண்ணிகலானு நினைச்சி இருப்பாலோ என்று  யோசித்துக் கொண்டே உள்ளே வந்த அஸ்வினுக்கு அவளது செயலைப் பார்த்து கோபம் தான் வந்தது.தனது படுக்கையை சரி செய்து கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன்..,"மேடம் என்ன டிவோர்ஸ் பண்ற எண்ணத்துல இருக்கிங்க போல...." என்று அவன் கூற எதுக்கு இவன் இப்படி உளறுறான் நல்லா தானா வெளிய போனான் அப்புறம் எதுக்கு இப்ப வந்து இப்படி உளறுறான் என்று நினைத்தாள் கவி.

அவள் ஒன்றும் புரியாமல் அவனையேப் பார்க்க "சரி டிவோர்ஸ் பண்ணிட்டு அடுத்து யாரை கல்யாணம் பண்ணிக்க போற... உன்னோட அத்தை பசங்கலையா...ஆகாஷையா.."என்று அவன் கேட்க தான் அவன் எதுக்கு இப்பொழுது டிவோர்ஸ் பத்தி பேசுறானு அவளுக்கு புரிந்தது.

இதுவரை பொறுமையாக இருந்தவள் இப்பொழுது  தனது இயல்பான குணம் தலைத் தூக்க அதுவும் இல்லாமல் "அப்படி நினைச்சிருந்தா இந்த ரூமுக்கு வந்திருக்க மாட்டேன்..ஏன் இந்த வீட்டிற்க்கு கூட வந்திருக்க மாட்டேன்..."என்று கூற

"அப்ப மேல வந்து படு..,ஆயுசு முழுக்க இப்படியே இருக்க முடியாது.." என்றுக் கூற ,

அவனை புரிந்துக்கொள்ள முடியாமல் தவித்தாள் அந்த பாவை.கட்டிலில் ஒரு புறம் இவள் படுக்க மறுபுறம் அவன் படுத்துக்கொண்டான்.ஆனால் நன்கு விழிகளும் தூக்கத்தை தொலைத்திருந்தன.

அவள் ஒரு யோசனையிலும் அவன் ஒரு யோசனையிலும் இருந்தனர்.

இவனை புரிஞ்சிக்கவே முடியல ஒரு நிமிஷம் ஒரு மாதிரி இருக்கான் மறு நிமிஷம் ஒரு மாதிரி இருக்கான் இவன் அந்நியன் மாதிரி நடந்துக் கிட்ட இவன் கூட எப்படி வாழறது ..என்று அவள் யோசிக்க,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.