(Reading time: 11 - 21 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 17 - தேவி

vizhikalile kadhal vizha

செழியன் வீட்டிற்குள் வரும்போது இருந்த மனநிலை தற்போது எங்கோ ஓடி விட்டது.

வீட்டிற்கு வந்தவன் தன் தந்தையை கவனிக்காமல் சென்று விட, அவர் கூப்பிட்டபோது வழக்கம் போல் அவர் சூப்பர் மார்க்கெட் கவனித்து கொள்வதை பற்றி கேட்பார் என்று எண்ணி அவர் அருகில் வந்தான்.

“சொல்லுங்க பா..”

“நான் உக்காந்து இருக்கறது தெரியலையா டே.. உன்பாட்டுக்கு போயிட்டு இருக்க”

“காலேஜ் வேலை ஒன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.. அதான் உங்கள கவனிக்கல..”

“அப்போ சரி.. இந்த வருஷம் பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு போகணும் லே.. உன் லீவ் எல்லாம் சரி பார்த்துக்கோ..”

“அப்பா .. இப்போ ஒரு ஆராய்ச்சி சம்பந்தமா வேலையா இருக்கேன்.. கொஞ்சம் ஊர் ஊரா போற வேலை எல்லாம் இருக்கு. காலேஜ் விஷயமா இருந்தாலும் எல்லாத்துக்கும் வேலைன்னு சொல்லிட்டு போக முடியாது. அப்போ அப்போ லீவ் தான் போட்டு போகணும்.. அதனாலே பொங்கல் சமயத்துலே இந்த வருஷம் முடியுதா தெரியலே... “

“நீ கண்டிப்பா வந்து தான் ஆகணும். அடுத்த வருஷம் உனக்கு கல்யாணம் முடிச்சுடணும்னு இருக்கேன்.. அது சம்பந்தமா நம்ம சொந்தகாரக கிட்டே பேச போறேன். நீயும் வந்துதான் ஆகணும்.”

அதுக்கு இப்போ என்ன அவசரம்...?

அப்படி எல்லாம் உன்ன விட முடியாது.. இதுவே கொஞ்சம் தாமசம் தான்.. என் சொல்படி கடைக்கு வந்து வியாபாரம் பார்த்து இருந்தா இதுக்குள்ளே முடிச்சுருப்பேன்.. உனக்கு பிடிக்கலையேன்னு விட்டுட்டேன்.. இப்போ நீயும் உன் இஷ்டப்படி வேலைக்கும் போக ஆரம்பிச்சு, அங்கன நல்ல பேரும் எடுத்துட்ட.. இனியும் சும்மா பராக்கு பார்த்துட்டு இருக்க முடியாது.”

“நான் என் இஷ்டப்படி வேலை பார்த்தாலும், உங்க கடைக்கும் வந்து அப்போ அப்போ தேவையானதை செஞ்சு கொடுக்கேன்லே.. அதோட கணக்கு வழக்கு எல்லாம் கம்ப்யூட்டர்லே போட்டு மாச மாசம்  உங்களுக்கு அத சரி பண்ணி கொடுக்கேன்.. பொறவு என்ன உங்களுக்கு வருத்தம்..?

“வருத்தம்னு எவம்லே சொன்னான்..? உங் கல்யாணமும் என் பொறுப்பு தாம்லே..

“அது உங்க பொறுப்புதான்.. ஆனா இப்போ அவசரம் இல்லே.. நான் சொல்லும்போது பார்த்த போதும்..

நீ கிழவன் ஆகுற வரைக்கும் சொல்லாம இருந்தா , பொண்ணும் அப்படி காத்து இருக்குமா லே .. ?”

எனக்குன்னு இருக்கிரவ எங்கே போய்ட போறா?

இவர்களின் வாக்கு வாதத்தை கவனித்துக் கொண்டு இருந்த, செழியன் அம்மா இடையில் புகுந்து

“தம்பி.. அப்பா சொல்லுறதும் ஒரு விதத்தில் சரிதானே.. அவங்க பொங்கலுக்கு போகும்போது நம்ம உறவு சனம் கிட்டே சொல்லி வச்சா , பொண்ணு அமையும் போது பார்த்துட்டு , கல்யாணத்தை உன் புது வேலை முடிஞ்சு வச்சுக்கிடலாம்.

செழியன் அப்பா “பொண்ணு எல்லாம் முடிவு பண்ணியாச்சு.. அவுக எங்கே இருக்காக ன்னு தான் தேடனும் “

தன் அம்மா பேசியதை கேட்டவன் “இந்த அம்மா வேற, நேரங்காலம் தெரியாம என்ட்ரி கொடுக்குதே.. இந்த பொண்ணு பாக்குற பிசினஸ் எல்லாம் வச்சுக்கிட்டா தெனம் ஒரு போட்டோ காட்டி ரெண்டு பேரும் என்னை படுத்தி எடுப்பாங்க.. அதிலும் அப்பா ஒரு படி மேலே போய் வாரவாரம் ஒரு பொண்ணு பார்க்கிற வீடு ரெடி பண்ணுவாரு.. இது எல்லாம் நம்ம உடம்பு தாங்குமா?” என்று தன் அம்மாவை திட்டிக் கொண்டு இருந்தான்.

அவன் அப்பாவின் பதிலை கேட்டவன் , அதிர்ச்சியில்

“என்னது...?” என்று அலறி விட்டான்..

அவன் அம்மாவிற்கும் அதிர்ச்சியே ..

“என்னங்க சொல்லுதீங்க..? இந்த விஷயம் இது வரைக்கும் எங்கிட்ட சொல்லலியே”

அவரோ அவன் அம்மாவிற்கு பதில் சொல்லாமல்,

“எம்லே.. அலறுரே ? யாரவது கேட்ட வீட்டுக்குள்ளே மிருககாட்சி சாலை இருக்கோன்னு பயந்துருவாக”

“இப்போ ரொம்ப முக்கியம்..? பொண்ணு என்னவோ வீட்டு வாசலில் நிக்கிற மாதிரி சொல்றீக.. ? அப்படி எல்லாம் நான் கட்டிகிட முடியாது..”

“அந்த பசப்புற வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம்.. நான் எல்லாம் முடிவு பண்ணிட்டேன்.. நான் முடிவு செஞ்ச பொண்ணு வீட்டாளுங்க கிட்ட பேசி கூடிய சீக்கிரம் என்ன செய்யணுமோ செய்யறேன்..”

“அப்பா.. நானும் சொல்லிட்டேன் .. இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம்.. மீறி எதாவது ஏற்பாடு பண்ணினீங்க என்றால் நான் வேற முடிவு எடுக்க வேண்டி இருக்கும்.. பார்த்துக்கோங்க..” என்று கத்தியவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.