(Reading time: 11 - 21 minutes)

அங்கேயே நின்றால் வாய் விட்டுடுவோம் என்று பயந்து , தன் அறைக்குள் சென்று கதவை அடித்து சாத்தினான்.. இப்போ கோபமாக இருப்பதாக காட்டினால் தான் யாரும் அருகில் வர மாட்டார்கள்.. கொஞ்சம் இளக்கம் காண்பித்தோம் என்றால், அவன் அம்மா வந்து அப்பாவிற்கு சாதகமாக பேசி, கெஞ்சி, மிஞ்சி தலை ஆட்ட வைத்து விடுவார்கள் என்று பயந்தான்.. 

தன் அப்பாவை கூட அவர் கத்தும்போது நாம் அவருக்கு மேல் கத்தி அடக்கி விடலாம்.. இந்த அம்மா தான் அப்பாவிற்கு கோபம் வந்து விடுமோ என்று பயந்தே நம்மை ஒரு வழி ஆக்கி விடுவார்கள்.. என்று எண்ணியபடி தன் படுக்கையில் தொப் என்று விழுந்தான்..

அவனுக்கு மனமெல்லாம் அப்பாவின் பேச்சே சுற்றி வந்தது. இத்தனை நாள் இல்லாமல் அவர் ஏன் பொண்ணு வீடு என்று எல்லாம் பேசுகிறார். அம்மாவிற்கு கூட தெரியவில்லையே .. தெரிந்து இருந்தால் சொல்லி இருப்பார் என்பது ஒருபுறம் என்றால், அவரின் செய்தியில் அம்மாவிற்கும் அதிர்ச்சி என்பது புரிந்தது.

சமீபத்தில் நண்பர்கள், உறவினார்கள் யாரையும் சந்தித்ததாகவும் தெரியவில்லை. அவர்கள் மூலம் ஏதும் விசாரணைக்கு வந்தததோ என்பதற்கும் வழி இல்லை.

என்னவென்று புரியாமல் குழம்பினான். சற்று நேரம் அதே சிந்தனையாக இருந்தவன்,

“டேய் செழியா.. அவன் அவனுக்கு காதல் கல்யாணம் என்று வரும்போது தான் பிரச்சினை வரும்.. உனக்கு மட்டும் ஏண்டா ஆரம்பத்திலேயே பிரச்சினை.. ? அது வேற ஒன்னும் இல்லை.. உன் டிசைன் அப்படி ..” என்று கண்ணாடி முன் நின்று தன்னை தானே கேட்டுக் கொண்டான்..

அப்படியே யோசனையில் இருந்தவன், இரவு உணவிற்கு கூட கீழே செல்லவில்லை.

அவன் அம்மா வந்து கூப்பிட,

“எனக்கு பசிக்கலை.. காலையில் பார்துக்கலாம்.. “ என்று அவரை அனுப்பி விட எண்ணினான்..

“சரி. கொஞ்சம் பால் கொண்டு வரேன் .. குடிச்சுக்கோ..” என்று அவன் அம்மா கேட்க,

“உங்க ஐடியா எல்லாம் தெரியும்.. அப்படியே அந்த சாக்குலே.. உங்க அருமை புருஷன் சொன்ன கதை எல்லாம் எங்கிட்ட சொல்லி, எங்கிட்ட பேசி சமாதான படுத்த பார்பீங்க.. இந்த விஷயத்துலே இனிமேல் என்கிட்ட எதுவும் பேசாதீங்க.. அப்பா கேட்டா என்கிட்டே நேரா பேசிக்க சொல்லுங்க.. இப்போ எனக்கு எதுவும் வேண்டாம்.. நீங்க கிளம்புங்க.. “

என்று அவரை பற்றி அறிந்தவனாக தடுத்து விட்டான்..

மலரை பார்க்கும் முன் வரை அவன் மனதில் காதல், கல்யாணம் பற்றிய எந்த எண்ணமும் கிடையாது .. அவளை சந்தித்தது முதல் அவன் எண்ணம் யாவும் மலரே..

அப்போது அவனின் தற்போதைய ஆராய்ச்சி சமந்தப்பட்ட இடத்தில இருந்து போன் வர, எடுத்து பேசியவன் , வந்த தகவல் கேட்டவன் கொஞ்சம் சந்தோஷ பட்டான்..

மணியை பார்த்தவன் .. ஒன்பதுக்கு மேல் ஆகி இருக்க, இப்போது அவளிடம் பேசினால் தன்னுடைய இறுக்கம் கொஞ்சம் குறைய கூடுமோ என்று எண்ணியவனாக அவளுக்கு அழைத்தான்..

மலரும் அன்றைக்கு சீக்கிரமாக சாப்பிட்டு விட்டு தன் அறைக்கு வந்துவிட்டவள், செழியன் கொடுத்த ஓவியத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

பயமில்லா கல்லூரி பருவம் முழுதும் புத்தகம், கையுமாக இருந்தவள் . இப்போது தான் செய்வது சரியா .. ? அந்த உணர்வுகள் ஏற்படுத்தும் தாக்கம் இவை எல்லாம் அவளால் வரையறுக்க முடியவில்லை..

சற்று நேரம் அலசி ஆராய்ந்து கொண்டு இருந்தவள், முடியாமல் மனசை அதன் போக்கில் செயல்பட விட்டாள். அது செழியனிடம் வந்து நின்ற பின் தான் அடங்கியது.

அந்த தாக்கத்தில் இருக்கும்போது செழியன் போனில் அழைக்க, நம்பரை பார்த்தவள்... சற்று நேரம் அந்த மொபைல் டிஸ்ப்ளேவில் ஒளிர்ந்த போட்டோ, செழியன் பேப்பர் கரெக்ஷன் வந்தபோது அவனறியாமல் தன் போனில் எடுத்து இருந்தாள். அதையே சற்று நேரம் ரசித்தவள், பின் அது கட் ஆக இருக்கும் நொடி எடுத்து பேசினாள்.

“ஹலோ.. “ என மலர் சொல்ல,

“ஹேய்.. மை லவ் .. “ என்று குழைவான குரலில் அழைத்தான் செழியன்..

“சொல்லுங்க இளா..”

“ஹ்ம்ம்.  நீ இளா சொல்லும்போது எனக்கு செம ஹாப்பி ஆ இருக்கு .. விழி..”

“ஹ்ம்ம்” என்று மட்டுமே சொல்ல,

“விழி.. எனக்கு உன் நினைப்பாவே இருக்குது.. எப்போ உன்னை நேர்லே பார்ப்போம்ன்னு இருக்கு .. உனக்கு அப்படி ஒன்னும் தோணலையா ?”

“ஹ்ம்ம்” என்ற சத்தமே வர,

“இதற்கும் இதுதான் பதிலா.. ?”

நாம ரெண்டு பேரும் பேசுறதுக்கு பேர் தான் ஸ்வீட் நதிங்க்ஸ்.. .நான் மட்டுமே பேசுறதுக்கு பேரு மொக்கை .. பேசுடா..

“என்ன பேச தெரியல”

“அடிபாவி.. தொண்டை வத்த என் ஜியோலோஜி கிளாஸ் கூட இப்படி நான் எடுத்தது இல்லை.. உன்கிட்ட பேசிட்டு இருக்கலாம்னா.. இப்படி அடிமடியிலேயே ஆப்பு வைக்கிறே. உனக்கே நல்லா இருக்கா ?”

“ஹலோ.. என்ன டி எல்லாம் போட்டு பேசறீங்க..?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.