(Reading time: 11 - 21 minutes)

“ஏன் டி.. போடக் கூடாதா..? எனக்கு டி தானே ரொம்ப பிடிக்கும்..”

“செழியன் சார்.. கிவ் ரெக்ஸ்பெட்.. டேக் ரெஸ்பெக்ட் .. நீங்க டி போட்டா நாங்களும் டா போடுவோம் தெரியுதா..

யார் வேண்டாம்நு சொன்னா..நீ என்ன வேணா போடு .. இல்ல என்னியவே போடு.. மீ ஹாப்பி.. “

“ச்சே.. நீங்க.. இருக்கீங்களே.. “ என்று மலர் சிரிக்க,

அவளை மேலும் சற்று நேரம் சிரிக்க வைத்தவன், அவனும் மெல்ல தன் மன இறுக்கம் தளர்ந்தான்..

அவர்களின் பேச்சு நீண்டு கொண்டே செல்ல, இது முடியாது என்று எண்ணியவளாக

“இளா.. மீதி நாளைக்கு பேசலாம்பா.. அம்மா இப்போ வந்துடுவாங்க.. “ என்று இவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே

“மலர்.. நான் நாளைக்கு ஊர்லே இருக்க மாட்டேன்..” என்று சொல்ல, அவள் பேச வரும் முன், அவள் அம்மா கதவை தட்டினார்..

பழக்க தோஷத்தில் போனை காதில் வைத்துக் கொண்டே கதவை திறக்க,

வள்ளி உள்ளே வந்தபடி “மலர்.. ஏனம்மா .. மதியம் வந்ததுலேர்ந்து ரூமிற்குள் அடைஞ்சு கிடக்க.. சாப்பாடு நேரம் மட்டும் வந்துட்டு உடனே எழுந்து போய்ட்டா. ஆச்சியும், அப்பாவும் நீ சரியா சாப்பிடலையோன்னு யோசனை பண்ணிட்டு இருக்காக.. வந்து என்னனு கேளுதா.. “ என

“இதோ வரேன்ம்மா.. நீங்க போங்க.. “ என்றபடி போனில் ஆரம்பிக்க,

“யாரும்மா போன்லே.. இந்த நேரத்துலே..?”

டக்கென்று பொய் சொல்ல வராமல்,

“செழியன் சார் மா “ என,

“என்னமா இந்த நேரத்திலே போன் பண்ணிருக்கார்..?”

“அது” என்று தயங்கியவள் “அவர் நாளைக்கு ஊருக்கு போரராம்மா.. எங்கிட்ட சொல்லிருந்த சில வேலைகள் முடிக்க சொல்லி அதுக்கு தேவையான குறிப்புகள் எல்லாம் சொல்லிட்டு இருக்கார்..” என்று கோர்வையாக சொல்லி முடிக்க,

“சரிம்மா. சீக்கிரம் பேசிட்டு வா “ என்று சென்று விட்டார்..

அவர் செல்லவும், போனில் மலர் “ஹலோ.” என்று குரல் கொடுக்க,

“சொல்லு விழிம்மா... “

“என்ன திடீர்ன்னு ஊருக்கு போறேன்னு சொல்றீங்க.. ?”

“இல்லைம்மா.. இந்த தீசிஸ் விஷயமா ஒரு சில விவரங்கள் கேட்டு இருந்தேன்.. அவங்க இப்போதான் வர சொல்றாங்க.. நமக்கும் காலேஜ் ஓபன் ஆக இன்னும் நாலு நாள் இருக்கு.. அதுக்குள்ளே இந்த வேலை முடிச்சுட்டு வந்துறலாம்னு யோசிச்சேன்..”

“சரிதான்.. ஆனால் என்னவோ உங்களை ரொம்ப தேடுறேன் போலே தோணுது.. அது சரியா தப்பா தெரியல..

“ஹேய்.. மை விழி.. இதுதான் காதல் அரிச்சுவடியே.. அதுலேயே இவ்ளோ டவுட் இருக்கா.. சந்தேகமே படாதே,. இது காதல் பாடம்தான்.. ஓகயா.. நீ என்னை பத்தி இப்படியே நினைச்சுட்டு இரு.. நான் ஊருக்கு போயிட்டு ஓடி வந்துர்றேன்..”

“ஹ்ம்ம்;” என்று முனக,

“சரி.. நாளைக்கும் இதே நேரத்துக்கு பண்ணவா..?

“இல்லைப்பா வேண்டாம்.. எனக்கு பொய் சொல்ல வராது.. நான் தினம் உங்ககிட்டே பேசிட்டு இருந்தா வீட்டுலே கண்டுபிடிச்சுடுவாங்க.. நீங்க தீசிஸ் வேலை முடிச்சுட்டு வாங்க.. நாம காலேஜ் லே பார்க்கலாம்..”

“ஓகே மா.. குட் நைட்.. ஸ்வீட் ட்ரீம்ஸ்.. & ட்ரீம்ஸ் லே நல்ல லொகேஷன் போயிட்டு... ட்யூன் ஆஸ்கார் நாயகன் கிட்டே வாங்கிக்கோ.. அப்படியே லிரிக்ஸ் உம மதன் கார்கி கிட்டே கொடுக்க சொல்லு.. முக்கியமா என்னையும் சேர்த்து நல்ல காஸ்ட்யும்லே கூட்டிட்டு போ “ என்று சீண்ட,

“ஐயே.. உங்க அழகுக்கு ஆஸ்கார் நாயகன் இல்லை.. நம்ம அடுக்கு மொழி நாயகன் T.R கிட்டே தான் ட்யூன் கேட்கணும்.. அவர்தான் நானே .. அனைத்தும் நானே ன்னு கிழி கிழின்னு கிழிப்பார்,, அதோட.. உங்களுக்கு ராமராஜன் காஸ்ட்யும் தான் போடணும்.. கையோட  ஒரு பசு மாடும் சேர்ந்து வரும்..”

“ஹலோ ..ப்ரோபிச்சர் மேடம்.. எனக்கு அடுக்கு மொழி நாயகன்ன்னா நீங்க உலக அழகி காஸ்ட்யும் போட முடியாது.. நம்ம கிராமத்து பைங்கிளி வேஷம் தான் போட முடியும்.. ரெண்டு பேரும் சேர்ந்து

“சொர்கமே என்றாலும் அது நம்மூரு போலே வருமா?”

அப்படின்னு ரோடு ரோடா பாடிக்கிட்டு போக வேண்டியதுதான்..”

என்று செழியன் முடிக்க, மலர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.. அதிலும் அவர்கள் இருவரையும் ராமராஜன், கவுதமி உடையில் கற்பனை செய்ய அவள் சிரிப்பை நிறுத்த முடியவில்லை..

அவளின் சிரித்த குரலை கேட்டு போன் அணைத்தவன்.. குட் நைட் என்று மெசேஜ் அனுப்பி முடித்தான்..

அவளிடம் பேசும்போது தனக்கும் , தன் தந்தைக்கும் நடுவில் நடந்த சண்டையை சொல்ல எண்ணியவன், பிறகு மனதை மாற்றியவனாக, இப்போதிக்கு தன் பிரச்சினை தன்னோடு இருக்கட்டும் என்று எண்ணி விட்டு விட்டான்..

மலருக்கு பிரச்சினை பற்றி எத்தனை நாள் சொல்லாமல் இருப்பது என்று யோசித்து கொண்டு இருந்தான் செழியன்.

ஹாய் பிரெண்ட்ஸ் .. இந்த அப்டேட்க்கு அந்த ராமராஜன் , கௌதமி இமேஜ் கொடுக்கலாம்ன்னு தான் நினைச்சேன்.. ஆனால் ...நம்ம ஹீரோ இமேஜ் இதுவரைக்கும் வெளிலே விடததாலே.. இந்த இமேஜ் பார்த்து நம்ம செழியன் விசிறிகள் எனக்கு சாபம் விட்டுட கூடாதே என்று விட்டுட்டேன்.. ஹி ஹி .. வழக்கம் போலே உங்க கமெண்ட்ஸ் க்கு வைடிங்

தொடரும்!

Episode # 16

Episode # 18

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.