(Reading time: 10 - 19 minutes)

தாத்தா இவ காலேஜ் படிக்குறானு சொன்னாரு..எந்த காலேஜ் படிக்குறானு கேக்கணும்னு நினைச்சேன் இவ பண்ண வேலைய பாத்ததும் மறந்துட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்க ஒரு வழியாக இருவரும் இரவின் முடிவில் உறங்க ஆரம்பித்தனர்.

காலை மணி 8.00யை தொட அதுவரை துயிலில் இருந்து எழாமல் உறங்கிக் கொண்டிருந்தாள் கவிமலர்.

அதைப் பார்க்க பார்க்க அஸ்வினுக்கு கோபம் தான் வந்தது.அவன் தனது அலுவலத் துக்கு போக தயாராகி முடித்திருந்தான்.காலை உணவை முடித்து விட்டு  செல்வது தான் அவனுக்கு இப்பொழுது இருக்கும் வேலை.அங்கே சென்றால் கண்டிப்பாக ஜானகி அத்தை இவளைப் பற்றி கேட்பார்கள்.இவ இன்னும் தூங்கிட்டு இருக்கா அம்மா ஏற்கனவே இவ மேல கோபமா இருக்கா இந்த சதீஷும் நித்தியும் ஏதாவது கிண்டல் பண்ணியே கொன்னுடு வாங்க ..இத விட பெரிய வேலை பாட்டி ய சமாளிக்கறது இவளவு பிராப்ள ம் இருக்கு இவ நல்லா தூங்கிட்டு இருக்கா..என்று தனக்குள்ளேயே புலம்பியவன் அவளது அருகில் சென்றான்.அவளை எவ்வாறு எழுப்புவது என்று யோசித்துக் கொண்டிருந்தவன் வேறு வழி இல்லாமல் அவள் தோள் தொட "மஞ்சு அத்தை இன்னும் கொஞ்ச நேரம் நான் தூங்கிக்குரேன் பிலீஸ் அப்பறம் நான் காலேஜ் போனா இவ்வளவு நேரம் தூங்க முடியாது என்று அவள் கூற அவனுக்கு தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது இவள் தனது வீட்டில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை நினைத்தவன்,"கவி எழுந்திரு..." என்று அவன் எழுப்ப,கவியா "டேய் விஷ்வா அறிவு இருக்காடா ..,ஒரு பொண்ணு பெட் ரூம்குள்ள அவ அனுமதி இல்லாமல் வர ..."என்று கூற நம்ம அஸ்வினுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது அது அவனுக்கே புரியவில்லை.

"மலர் எழுந்திரு ." என்று அவன் கத்த இந்த புது வித அழைப்பு மற்றும் குரல் அவளது அரை தூக்கத்தை கலைத்தது.

அந்த புதுக் குரலில் தூக்கம் களைந்து எழுந்தவள் பார்த்தது அங்கு கோபமாக நின்ற அஸ்வினை தான்.ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் பேந்த பேந்தவென விழித்தவள் அடுத்த நிமிடம் தான் எங்கு இருக்கிறோம் என்று புரிந்துக் கொண்டாள்.

"மணி எத்தனை தெரியுமா...,இப்படி தூங்கர, உங்க வீட்டுல எப்படி வேணாலும் இருந்துருப்ப இங்க சீக்கிரம் எழுந்தாகனும்..,தாத்தா சப்போர்ட் பண்றாருன்னு ரொம்ப துள்ளாத புரிதா.., சீக்கிரம் கிளம்பு  போ..."என்றுக் கூறிவிட்டு தனது அலுவலக அறைக்கு சென்றுவிட்டான்.

அவன் உள்ளே செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த கவி ஒரு பெருமூச்சு விட்டு விட்டு தனது காலை வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் கவி.

9.00 மணி அளவில் தயாரானவள் கீழ செல்ல தயாரானாள்.முன் தினம் அவன் அவளுக்கு புடவை வாங்கியபோதே மூன்று சேர்த்துதான் வாங்கி வந்திருந்தான்.

அதனை அணிந்திருந்தாள் கவி.

அவள் மாடி படியின் கடைசி படியில் இறங்கும் போதே அவளைப் பார்த்த பர்வதம்மாள் ஒரு திருப்பு திருப்பிக் கொள்ள..,அவள் வரவை பார்த்து ஜானகியே அவளிடம் வந்தார்.

"இப்பதான் எழுந்தியாம்மா...,புது இடமுன்னு தூக்கம் வரலையா.."என்று அவர் விசாரிக்க..

பின்னால் வந்த அஸ்வினோ "அப்படியெல்லாம் இருக்காது அத்தை. அவங்க எழுந்திருக்குறதே இந்த டைமா இருக்கும் போல.."என்று அவன் கூற அதுக்கு காத்திருந்தது போல பர்வதம்மாள் தனது புலம்பலை ஆரம்பித்தார்.

"அவ பின்ன எப்படி இருப்பா,அவ குடும்பமே அப்படி தானே இன்னைக்கி என்னோட பையன் இருக்கானா இல்லையானே தெரியல...அதுக்கு காரணமா இருந்தவ பொறந்த வீட்டுலேருந்து வந்த இவ மட்டும் எப்படி இருப்பா..."என்று பேசிக்கொண்டிருந்தவர் தனது கணவரைப் பார்த்ததும் வாயை மூடிக்கொண்டார்.

அவர் தனது குடும்பத்தை பேச ஆரம்பித்ததுமே  அவளுக்கு அழுகை கோபம் எல்லாமே வந்தது.

அவளுக்கு யார் மீது தவறு என்ன பிரச்சனை என்று எதுவுமே தெரியாது ஆனால் தன்னை சேர்ந்தவர்களை பேசுகிறார்கள் என்ற ஒரு நினைவே அவளது முகத்தில் அதுவரை இருந்த அமைதியை அழித்தது.

விழுந்து விட்ட அவள் முகத்தை பார்த்த அஸ்வினுக்கு எதற்காக இந்தப் பேச்சை ஆரம்பித்தோம் என்று ஆகிவிட்டது.

அவனுக்கே தெரியாமல் அவனது மனதில் தனக்கான உறவு அவள் என்ற எண்ணம் பதிய ஆரம்பித்திருந்தது .

அவளது முகவாட்டத்தைப் பார்த்த ஜானகி தனது மகள் நித்திக்கு கண் காட்ட தனது தாயின் கட்டளையை கண்களால் புரிந்துக் கொண்டவள் கவியிடம் சென்றாள்.

"மலர் வா , என் கையால காபி போட்டு தரேன் எப்படி சமைக்குரேனு டேஸ்ட் பண்ணி பாத்துட்டு சொல்லு..(???? பாவம் கவி)" என்று கவியை சமயலறைக்கு அழைத்து சென்றவள்.அவளுக்கும் தனக்கும் காபி எடுத்துக் கொண்டு வீட்டின் முன்னால் உள்ள மரங்களின் நிழலில் போட பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த சதீஷிடம் சென்றாள் கவியையும் அழைத்துக் கொண்டு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.