(Reading time: 6 - 11 minutes)

15. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

புகழிடன் அன்பொழுகும் குரலில் தன்னிலை மறந்திருந்தாள் ஆயிஷா. இரண்டு நாட்கள்கூட அவனது பாராமுகத்தை அவளால் சகித்து கொள்ள முடியவில்லை..

“ என் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எதுவும் ஆகி இருக்காது புகழ். என்னால இன்னொருத்தவங்களை எப்படி அவங்க ஸ்தானத்தில் வெச்சு பார்க்க முடியும்?"

”ஒரு விஷயம் யோசிச்சு பார்த்தியா? நீ நினைக்கிறது உண்மைன்னா என்னைக்காவது உன் அம்மாவும் அப்பாவும் வந்துடுவாங்க.. ஆனா அவங்க பொண்ணு திரும்ப கிடைக்குமா?”

“..”

“ஒரு சந்தோஷம் நம்ம லைஃப்ல இல்லன்னாலும் அதை மத்தவங்களுக்கு கொடுத்து ரசிக்கனும்..அதுதான் வாழ்க்கை!” என்றான் புகழ். அவனது வார்த்தைகள் ஆயிஷாவின் மனதில் மாற்றத்தை கொண்டு வருமா?

 “ஹேய் பேபி.. என்ன என்னை வான்னு கூட கூப்பிடாமல் நீ கிளம்புற? மாமாவுக்கு ஒரு கப் காஃபி கூட  கிடையாதா?” என்று தமிழ் துள்ளலுடன் கேட்க, அவன் பேபி என்றஅழைத்த  நொடியில் சர்வமும் அடங்கியது போல திகிலுடன் திரும்பினாள் யாழினி. அவள் முதலில் கவனித்தது  மோகனின் முகத்தை தான்!

அவரோ தமிழையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்தபடி யாழினியிடம்  பேசினார்.

“தம்பி யாரு யாழினி?”

“அவர்தான்..அந்த டாக்டர் ..தமிழ்ப்பா” என்றவள் ஒளிவதற்கு இடம் கிடைத்தால் நன்றாக இருக்குமே!என நினைத்தாள். தமிழின் பெயரை கேட்ட்துமே தன் மகள் இதுவரை அவனைப் பற்றி சொல்லியதை எல்லாம் நினைவு கூர்ந்தார் மோகன்.  அவனை ஆராய்வதை போல ஒருமுறை பார்த்து வைத்தான்.

“பேரு என்னனு சொன்ன?”

“தமிழ்” என்று அவள் சொல்லும்போதே அருகில் வந்திருந்தான் அவன்.

“தமிழ் காஃபி கேட்டார்ல ? போய் கொண்டு வா!” என்றார் மோகன். இப்போது அவரது தீர்க்கமான பார்வை தமிழின் மீது இருந்தது. தந்தையின் கட்டளையை கேட்டும் அங்கு தயங்கி நின்றாள் யாழினி.

“அப்பா என்ன ஆச்சுன்னா?”என்று அவள் கூற வரும்போதே இடைபுகுந்தார் மோகன்.

“நான் சொன்னது உன் காதுல விழலையா யாழினி?” கண்டிப்புடன் அவர் கேட்கவும், அதற்கு பின்னும் அவள் அங்கு நிற்பாளா என்ன?

“சிடுமூஞ்சி.. சிடுமூஞ்சி.. ஒரு ஐ லவ் யூ சொன்னதுக்கே பெக்கபெக்கனு முழிச்சுட்டு இப்போ மட்டும் டைலாக் அடிக்கிறான்.. மாமாவுக்கு காஃபி கொடுங்குறான்.. அப்பாக்கிட்ட போட்டு கொடுக்கனும்னு நினைச்சு பண்ணி இருப்பான். என்ன ஒரு வில்லத்தனம்.. ஹீரோ மாதிரி இருக்கானேனு நினைச்சு வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டியே யாழினி.. ஹும்கும் என்ன பண்ணுறது இந்த காலத்துல எல்லாம், ஹீரோக்களை விட வில்லன்கள் தான் வசீகரமா இருக்காங்க!:” சமையலறையில் நின்று கொண்டு வில்லன்களைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள் யாழினி.

“யாழினி..தமிழுக்கு நேரமாகுது பாரு!” .மோகனின் குரலுக்கு எதிரொலியாய் அவள் முகத்தில் பதட்டம் பரவியது.

“அறிவு கெட்டவளே.. இப்போ இங்க ஆராய்ச்சி அவசியமா? காஃபி தமிழுக்கு தானே? எதையாச்சும் பேருக்கு கலந்து வெச்சுட்டு இந்நேரம் அங்க போயிருக்க வேணாமா?கிடைச்ச கேப்ல அவன் எத்தனை சிக்சர் அடிச்சானோ?” என்று தன்னையே நொந்துகொண்டு வரவேற்பறைக்கு விரைந்தாள்.

ஒரு கணம் அங்கிருந்த தன் தந்தையையும் தமிழையும் பார்த்து ஸ்தம்பித்து நின்றாள் அவள். இருவருமே ஒரே போல கால்களை மடக்கி இயல்பாய் அமர்ந்திருந்தனர்.  இருவருமே ஒரே நேரத்தில் மீசையை ஸ்டைலாய் முறுக்கி கொள்ள யாழினியின் கண்களில் ஆச்சர்யம் அப்பட்டமாய் தெரிந்தது.

“என்ன மாமா.. உங்க பொண்ணு காஃபியே தராமல் சைட் அடிக்கலாம்னு நினைக்கிறாங்களோ?” மோகனை பார்த்து கொண்டே தமிழ் கேட்டு வைக்க,

“மாமாவா?” என்று முணுமுணுத்தாள் யாழினி. உதடுகள் தந்தியடித்தாலும், கைகள் காஃபியை இருவருக்கும் பரிமாறிட எதிர்ச்சையாய் அவள் தமிழ் பக்கம் குனிய,

“ நீதானே லவ் யூன்னு சொன்ன? அப்போ உன் அப்பா.. எனக்கு மாமனார் இல்லையா?” என்றான் தமிழ்..

“அடேயப்பா சாமி.. தப்பி தவறி சொல்லி தொலைச்சிட்டேன்” என்று மைண்ட் வாய்சில் பதிலளித்து விட்டு மோகனின் அருகில் அவள் அமர தமிழ் எழுந்து கொண்டான்.

“சரிமாமா..ரொம்பலேட்டாச்சு ..நான் கெளம்புறேன்!”

“காஃபி?”

“குடிச்சிட்டேன்..இல்லன்னா யாழினி ஃபீல் பண்ணுவாங்களே.. இன்னொரு நாள் வரேன்” என்றவன் யாழினியிடம் பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு சென்றான்.

“அப்பா.. பிருந்தாவனத்துக்கு இவரும் வந்திருந்தார்.. லேட்டாச்சுன்னு அவரே வந்து விட்டாரு” என்று யாழினி விளக்கம் அளிக்கமோகன் முகத்தில் நிம்மதி கலந்த புன்னகை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.