(Reading time: 6 - 11 minutes)

“தமிழ் எனக்கு தெரிஞ்ச பையன் தான்மா.. எவ்வளவு வளர்ந்துட்டான்..” என்று சிலாகித்து கொண்டார் அவர். “ஆஹா..இதென்ன புது கதை?” என்ற மைன்ட் வாய்சை அடக்கிவிட்டு பேசினாள் யாழினி.

“எப்படிப்பா அவரை தெரியும்? எனக்கு அவரை பார்த்த்தாக ஞாபகமே இல்லையே!”

“எனக்கே சரியா ஞாபகம் இல்லம்மா..அப்போநீ ரொம்ப சின்ன பொண்ணு… தமிழுக்கு மேத்ஸ் சொல்லி கொடுக்க நான் அவங்க வீட்டுக்கு போவேன்.. ரொம்ப அழகான குடும்பம்.. தமிழும் ரொம்ப புத்திசாலி.”

“உங்களை அவங்க மாமான்னு சொன்னது?”

“சின்ன வயசுல,அங்கிளை தமிழில் சொல்றேன்னு அப்படி கூப்பிடுவான்..” என்றவர், தமிழ் ஆரம்பத்தில் யாழினிடம் தன்னை மாமா என்று சொல்லி கொண்ட்தை மறந்தே போனார்.

“வேறென்னப்பா பேசுனீங்க ரெண்டு பேரும்?” சுவாரஸ்யமாய் கதை கேட்டவளை முறைத்தார் மோகன்..

“மணி என்ன ஆச்சு?குளிச்சிட்டு தூங்கு… நாளை காலெஜ் இல்லையா உனக்கு?”என்றார். “இருக்குப்பா..” என்று முணுமுணுத்தவள், அவள் அறைக்கு ஓடினாள். 

“என் வானம் விடிவது உன்னாலே!” ஹரிஹரனின் குரலில் செல்ஃபோன் அலறிட அந்த நாட்களின் நினைவில் இருந்து வெளிவந்தாள் யாழினி! இதுவரை நடந்த்தை எல்லாம் அசைப்போட்டவள் அலைப்பேசியின் சத்தம் கேட்ட்தும் திடுக்கிட்டு கண்விழித்தாள்.

“ஹேய் குரங்கு..என்ன ஆச்சு .. ஸ்கூலில் இருந்து வந்துட்டியாமே?” பதட்ட்த்தை மறைத்து இலகுவாய் கேட்டான் தமிழ்.

“எல்லாம் உன்னாலத்தான் ..போயா”

“ஹா ஹா புருஷனை நல்லா கொஞ்சுற டார்லிங்க்..”

“அய்யோ ரொம்ப வழியாதீங்க டாக்டர் தமிழ்..”

“ஆர் யூ ஒகே பேபி? நான் வீட்டுக்கு வரவா?”

“அதெல்லாம்வேணாம்..நான் நல்லாத்தான் இருக்கேன்!” என்றாள் யாழினி.

“வீட்டுக்கு வந்த ஒரு ரொமான்ஸ் சீன் நடக்குமேனு நினைச்சேன்.. பாவம்டாதமிழ்..!”என அவனுக்காக அவனே பரிந்து பேசிவிட்டு,

“சரி புகழ் சாப்பிட்டானா?”என்றான்.

“புகழ்..வந்து!!” என்றவள் அப்போதுதான் அவனை தேட ஆரம்பித்தாள்.

தொடரும்

Episode # 14

Episode # 16

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.