(Reading time: 12 - 24 minutes)

16. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

ஹாய் ப்ரண்ட்ஸ்.. உங்க எல்லாருடைய அனுமதியோட இந்த அத்தியாயத்தை பதிவு செய்றேன். நான் எப்போ அனுமதி தந்தேன்னு கேட்க கூடாது. புவி உங்க செல்லம்ல? டார்லிங்ல? அதுக்காக.

அதாவது போன வாரம் நான் ஹாஸ்பிட்டலில் இருந்ததால் நான் எதிர்ப்பார்த்த விதத்தில் பதிவு போடல. அதனால அதே பதிவை எதிர்ப்பார்த்த விதத்தில் கொடுக்கனும்னு ஆசைப்படுறேன். சோ ரெடியா? புவிக்காக எல்லாரும் மேல பாருங்க.. நாம ப்ளாஷ்பேக்கு போவோம். கடற்கரையில் புகழிடம் ஆயிஷா என்கிற சஹீபா என்ன பேசினாங்கன்னு பார்ப்போம்

புகழின் கரங்களுக்குள் புகலிடம் தேடிய கரங்கள் மீட்கும் எண்ணம் இன்றி அமர்ந்திருந்தாள் சஹீபா. ஏனோ இருக்கும் கண்ணீர் எல்லாம் வடிந்துவிட்டது போல ஓர் உணர்வு அவளுக்குள். அதீத விரக்தியா? அல்லது நம்பிக்கையா? என்று அறியமுடியவில்லை அவளால்.

அவளே பேசட்டும் என காத்திருந்தான் புகழ். அதை புரிந்துகொண்டு மௌனம் கலைந்தாள் சஹீபா.

“இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல புகழ். உன் கருத்துக்கு நான் பணிஞ்சு போகலன்னதும் என்னை பணிய வைக்க அமைதியா இருக்குறதும், விலகலை காட்டுறதும் சரின்னு எனக்கு தோணல.. யூ ஆர் பனிஷிங் மீ” என்றாள் சஹீபா. அவளைப் பார்த்து மெல்ல புன்னகைத்தான் புகழ்.

“உன்னை நான் ஏன் பனிஷ் பண்ணனனும்? தண்டனை தரனும்னா அதுக்கும் உரிமையுணர்வு வேணும். அந்த உரிமை கைல இருந்தால், நான் உன்னை வலுக்காட்டாயமாவே சென்னைக்கு அழைச்சிட்டு போயிருப்பேன்ல? என் எண்ணங்களை உன் மேல திணிக்க கூடாதுன்னு தான் நான் விலகியே இருக்கேன்!”

“கண்ணுக்கு முன்னாடி இருக்க.. ஆனால் என்கிட்ட பேசாம விலகி இருக்க.. இது எந்த விதத்துல எனக்கு சந்தோஷம் கொடுக்கும்னு நினைக்கிற?”

“அதுக்காக உன்னை விட்டுட்டு போக சொல்லுறியா? எப்படியும் நீ எனக்காக கூட என்னோடு வர மாட்ட.. சோ விருந்தோம்பல் என்கிற பேரில் கூட நான் உன்னோடு ஒரு வாரம் இருக்க கூடாதா?இப்பவே போகனுமா?” அழுத்தமான குரலில் கேட்டான் புகழ்.

அவனது பேச்சு, பார்வை, பற்றுதல் அனைத்துமே அவளைக் கட்டிப்போட்டன.

“என்னத்தான் சொல்ல வர புகழ்?” பெருமூச்சுடன் கேள்வி எழுப்பினாள் சஹீபா.

“ நான் எதுவும் சொல்லல..சொல்ல போறதும் இல்ல.. உனக்கு என்ன தோணுதோ அத மட்டும் செய்..” என்று எழ முயன்றவனின் கையைப் பற்றி அமர வைத்தாள் சஹீபா.

“சென்னைல, என்னை வளர்த்தவங்களின் எதிர்வீட்டு பையனா இருக்குற புகழ் கிட்ட தானே நான் இப்போ பேசிட்டு இருக்கேன்.. பத்து நிமிஷம்.. ஜஸ்ட் பத்தே பத்து நிமிஷம், எத பத்தியும் யோசிக்காமல், நான் கேட்டதுமே என்னை இங்க அக்கறையா கூட்டிட்டு வந்த அந்த புகழ்கிட்ட நான் பேசனும்.ப்ளீஸ்!” என்றாள்.

“பேசியே கவுக்குற நீ!” முகமலர்ந்து கண்ணடித்தவனை வியப்புடன் பார்த்தாள் அவள். “எப்படி உடனே மாறிவிடுகிறான்? எனக்காகவா?” என நினைத்தாள் சஹீபா.

“ஓகேம்மா.. ஐ எம் ரெடி..பேசு”என்றான் புகழ்.

“புகழ்..நான் இங்கயே பொறந்து வளர்ந்த பொண்ணு. ஊரே என் அம்மாவும் அப்பாவும் உயிரோட இல்லைன்னு சொல்லுறதுனால அதை நான் ஏத்துக்கணுமா? ஏதோ ஒரு உள்ளுணர்வு அவசரப்படாதேன்னு என்கிட்ட சொல்லுதே.. என் மனசு சொல்லுறதை நான் கேட்பது தப்பா?”

“தப்பில்ல.. கண்டிப்பா தப்பில்ல. மனுஷங்க பேச்சு மாறும். அது அவங்களுடைய சூழ்நிலைக்கு சாதகமா மாற்றப்படும்.ஆனா மனசு உண்மையத்தான் சொல்லும்.”

“அப்பறம் ஏன் என்னை வற்புறுத்தற?”

“நான் வற்புறுத்தலம்மா.. உனக்கு இப்போதைக்கு கிடைக்காத அன்பை இன்னொருத்தருக்கு கொடுன்னு தான் சொல்லுறேன்.”

“..”

“உன் நம்பிக்கையின்படி எப்போ வேணும்னாலும் உன்னுடைய அப்பா அம்மா வந்திடலாம்..அதுக்கான வாய்ப்பும் இருக்கலாம். ஆனால் அவங்களுக்கு? மறுபடியும் இறந்துபோன பொண்ணு கிடைக்காது இல்லையா? பாவமில்லையா?”

“..”

“மனுஷங்க ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கிறதுக்கு எப்பவுமே ஒரு காரணம் இருக்குனு நான் நம்புவேன்.. அந்த விதத்துல ஒரு அப்பா அம்மாவுக்கு சேர வேண்டிய பாசத்தை அவங்களுக்கு கொடுக்கத்தான் நீ அவங்க வாழ்க்கையில வந்துருக்கனு நான் நம்பறேன்..”

 

“என்னால இத பண்ண முடியுமா புகழ்?”

“முடியும்னு நான் நம்பறேன். பதிலுக்கு உனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுறேன்.. உன் நம்பிக்கைபடி உன் அம்மாவும் அப்பாவும் பொழைச்சு உன்னை தேடி வந்தா, கண்டிப்பா உன்னை அவங்களோட நானே சேர்த்து வைப்பேன்.. ஐ  ப்ராமிஸ் யூ மை ஏஞ்சல்” என்றான் கனிவுடன். பலமுறை கண்மூடித்தனமாக மறுத்தே பேசியவள் கொஞ்சமாய் புகழ் சொன்னதை பரிசீலிக்க முடிவெடுத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.