(Reading time: 12 - 24 minutes)

ஹேய் பேபி.. என்ன இது மாமாவை வீடு வரைக்கும் வர சொல்லிட்டு ஒரு கப் காஃபி கூட தரலன்னா எப்படி?” மந்தகாச புன்னகையுடன் தமிழ் கேட்க, அடிவயிற்றில் கிளம்பிய பயத்துடன் தன் தந்தை பக்கமாக பார்வையை திருப்பினாள் யாழினி.

“ஆஹா..ஐ லவ் யூ சொன்னதுக்கே இந்த சிடுமூஞ்சி இவ்வளவு வில்லங்கமா யோசிக்கிறானே.. யாழினி..நீ பாவம்மா” என்று தன்னையே மிரட்டினாள்.

“யாழினி..”

“ஆங்…அப்பா..??”

“தம்பி யாரு?”என்று மோகன் கேட்கும்போதே,

“நான்தான் தமிழ் மாமா” என்றான் தமிழ்.

“மாமாவா?என்னை கோமா ஸ்டேஜ்கு அனுப்பிடாதேப்பா சிடுமூஞ்சி”என்று மைண்ட் வாய்சில் மன்றாடியவள்,

“அப்பா இவர்தான் அந்த டாக்டர்.இன்னைக்கு  பிருந்தாவனம்ல அவரும்தான் இருந்தார்.. லேட்டாச்சுன்னு ட்ராப் பண்ணாரு”என்றாள் யாழினி விளக்கம் அளிக்கும் தொனியில். மோகனோ தமிழின் மீது பதித்த பார்வையை இம்மியளவும் நகர்த்தாமல் இருந்தார்.

“உள்ளே வாங்க” என்று அவனை அழைத்துக் கொண்டு போனவர் யாழினியை காஃபி எடுத்துக்கொண்டு வரும்படி பணித்தார்.

“சிடுமூஞ்சி.. சிடுமூஞ்சி.. ஒரு ஐ லவ் யூ சொன்னதுக்கே பெக்கபெக்கனு முழிச்சுட்டு இப்போ மட்டும் டைலாக் அடிக்கிறான்.. மாமாவுக்கு காஃபி கொடுங்குறான்.. அப்பாக்கிட்ட போட்டு கொடுக்கனும்னு நினைச்சு பண்ணி இருப்பான். என்ன ஒரு வில்லத்தனம்.. ஹீரோ மாதிரி இருக்கானேனு நினைச்சு வில்லன்கிட்ட மாட்டிக்கிட்டியே யாழினி.. ஹும்கும் என்ன பண்ணுறது இந்த காலத்துல எல்லாம், ஹீரோக்களை விட வில்லன்கள் தான் வசீகரமா இருக்காங்க!:” சமையலறையில் நின்று கொண்டு வில்லன்களைப் பற்றி புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தாள் யாழினி.

“யாழினி..தமிழுக்கு நேரமாகுது பாரு!” .மோகனின் குரலுக்கு எதிரொலியாய் அவள் முகத்தில் பதட்டம் பரவியது.

“அறிவு கெட்டவளே.. இப்போ இங்க ஆராய்ச்சி அவசியமா? காஃபி தமிழுக்கு தானே? எதையாச்சும் பேருக்கு கலந்து வெச்சுட்டு இந்நேரம் அங்க போயிருக்க வேணாமா?கிடைச்ச கேப்ல அவன் எத்தனை சிக்சர் அடிச்சானோ?” என்று தன்னையே நொந்துகொண்டு வரவேற்பறைக்கு விரைந்தாள்.

ஒரு கணம் அங்கிருந்த தன் தந்தையையும் தமிழையும் பார்த்து ஸ்தம்பித்து நின்றாள் அவள். இருவருமே ஒரே போல கால்களை மடக்கி இயல்பாய் அமர்ந்திருந்தனர்.  இருவருமே ஒரே நேரத்தில் மீசையை ஸ்டைலாய் முறுக்கி கொள்ள யாழினியின் கண்களில் ஆச்சர்யம் அப்பட்டமாய் தெரிந்தது.

“என்ன மாமா.. உங்க பொண்ணு காஃபியே தராமல் சைட் அடிக்கலாம்னு நினைக்கிறாங்களோ?” மோகனை பார்த்து கொண்டே தமிழ் கேட்டு வைக்க,

“மாமாவா?” என்று முணுமுணுத்தாள் யாழினி. உதடுகள் தந்தியடித்தாலும், கைகள் காஃபியை இருவருக்கும் பரிமாறிட எதிர்ச்சையாய் அவள் தமிழ் பக்கம் குனிய,

“ நீதானே லவ் யூன்னு சொன்ன? அப்போ உன் அப்பா.. எனக்கு மாமனார் இல்லையா?” என்றான் தமிழ்..

“அடேயப்பா சாமி.. தப்பி தவறி சொல்லி தொலைச்சிட்டேன்” என்று மைண்ட் வாய்சில் பதிலளித்து விட்டு மோகனின் அருகில் அவள் அமர தமிழ் எழுந்து கொண்டான்.

“சரிமாமா..ரொம்பலேட்டாச்சு ..நான் கெளம்புறேன்!”

“காஃபி?”

“குடிச்சிட்டேன்..இல்லன்னா யாழினி ஃபீல் பண்ணுவாங்களே.. இன்னொரு நாள் வரேன்” என்றவன் யாழினியிடம் பார்வையாலேயே விடைபெற்றுக்கொண்டு சென்றான்.

“அப்பா.. பிருந்தாவனத்துக்கு இவரும் வந்திருந்தார்.. லேட்டாச்சுன்னு அவரே வந்து விட்டாரு” என்று யாழினி விளக்கம் அளிக்கமோகன் முகத்தில் நிம்மதி கலந்த புன்னகை.

“தமிழ் எனக்கு தெரிஞ்ச பையன் தான்மா.. எவ்வளவு வளர்ந்துட்டான்..” என்று சிலாகித்து கொண்டார் அவர். “ஆஹா..இதென்ன புது கதை?” என்ற மைன்ட் வாய்சை அடக்கிவிட்டு பேசினாள் யாழினி.

“எப்படிப்பா அவரை தெரியும்? எனக்கு அவரை பார்த்த்தாக ஞாபகமே இல்லையே!”

“எனக்கே சரியா ஞாபகம் இல்லம்மா..அப்போநீ ரொம்ப சின்ன பொண்ணு… தமிழுக்கு மேத்ஸ் சொல்லி கொடுக்க நான் அவங்க வீட்டுக்கு போவேன்.. ரொம்ப அழகான குடும்பம்.. தமிழும் ரொம்ப புத்திசாலி.”

“உங்களை அவங்க மாமான்னு சொன்னது?”

“சின்ன வயசுல,அங்கிளை தமிழில் சொல்றேன்னு அப்படி கூப்பிடுவான்..” என்றவர், தமிழ் ஆரம்பத்தில் யாழினிடம் தன்னை மாமா என்று சொல்லி கொண்ட்தை மறந்தே போனார்.

“வேறென்னப்பா பேசுனீங்க ரெண்டு பேரும்?” சுவாரஸ்யமாய் கதை கேட்டவளை முறைத்தார் மோகன்..

“மணி என்ன ஆச்சு?குளிச்சிட்டு தூங்கு… நாளை காலெஜ் இல்லையா உனக்கு?”என்றார். “இருக்குப்பா..” என்று முணுமுணுத்தவள், அவள் அறைக்கு ஓடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.