(Reading time: 12 - 24 minutes)

ஒரு வேகத்தில் அவனை இழுத்துக் கொண்டு வந்த ஆயிஷாவும், அவனைப் பார்த்ததுமே கை நீட்டிய குமரனும் கூட வந்ததில்இருந்தே வாயைத் திறக்காமல் கண்களைமூடிக்கொண்டு படுத்திருந்தவனை கவலையுடன் பார்த்தனர். யாரின் கோபத்திற்கும் ஆளாக முடியாத தோற்றம் புகழின் சிறப்பம்சம். யாழினியே அடிக்கடி , “இந்த பழைய அஞ்சு காசு மூஞ்சியை எங்கடா வாங்கின?”என்று கேட்டு வைப்பாள். அப்படியொரு அப்பாவித்தனமான வதனம். அதை இன்னும் வசீகரமாக காட்டும் அவனது கலகலப்பான சுபாவம்.

அந்த கலகலப்பு துளியளவும் அவனிடம் காணப்படவில்லை..என்ன நினைக்கிறான்? எதை மறைக்கிறான்? இப்போது எந்த உணர்வில் இருக்கிறான்? எதையும் உணர முடியவில்லை.

“புகழ்.. முதல்ல சாப்பிடு”என்று அவனை தொட்டு உலுக்கினாள் ஆயிஷா. ஷாக் அடித்ததுபோல  எழுந்து அமர்ந்தான் அவன்.

“ஹேய் என்னாச்சு புகழ்..?”

“ஒ..ஒன்னுமில்ல.. உன்கிட்டநான் நிறைய பேசனும்..”

“முதல்ல சாப்பிடு!”என்றவள் அவனுக்கு ஊட்டி விட எத்தனிக்க அவளது கையை பிடித்து தடுத்தான் புகழ்.

“எத்தனை நாள் என்னை நினைச்சு நீ சாப்பிடாம இருந்துருப்ப?” குற்ற உணர்வில் அவன் கேட்க, அவன் உண்மையாய் வருந்துகிறான் என்பதை ஆயிஷாவால் உணர முடிந்தது.

“அய்யே.. உனக்கு அவ்வளவு சீன் எல்லாம் இல்லை.. என்னை நல்லா பாரு? பசலை நோய் அது இதுன்னு இளைச்சா போயிட்டேன்?”என்று கேட்க, அவன் பார்வை அப்போதுதான் அவளை ஆராய்ந்தது.

“அழகா இருக்க” என்றான்.

“டேய்.. இங்க ஒருத்தன் இருக்கேன்னு தெரியாம அலைபாயுதே பார்ட்2 எடுக்குறீங்களா? மூடிட்டு சாப்பிடுடா” என்றான் குமரன்.அவனிடமும் புகழால் சில மாற்றங்களை கவனிக்க முடிந்தது. முக்கியமான மாறுதல் குமரனின் நிமிர்வுதான்.

பொதுவாக பரமசாதுவாய் இருப்பவன் இப்போது தன்னையே மிரட்டுகிறான்.

காலம் எல்லாரையும் மாற்றியுள்ளது.

தமிழை புகழ் போல கலகலப்பானவனாக!

புழகை தமிழ் போல இறுக்கமாக!

மோகனை விரக்தியான தந்தையாக!

யாழினியை  வளர்ந்த பெண்ணாக!

குமரனை நிமிர்வானவனாக !

ஆயிஷாவை சுயமாக வாழும் பெண்ணாக!

இதேபோல மற்றவர்களும் மாறி இருப்பார்களா? புகழின் மனம் கேட்டது! அவன் நினைக்கும் அந்த சிலர் யார்?

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.