(Reading time: 5 - 9 minutes)

17. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

ன்ன புகழ், எதையோ யோசிச்சிட்டே இருக்க?” தாங்க முடியாமல் கேட்டே விட்டிருந்தாள் ஆயிஷா.

“அது வந்து..”

“எதுவாக வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும்.. சாப்பிடும்போதாச்சும் கொஞ்சம் ரிலாக்ஸ்ட்டா இரு.. எப்போ நான் அழுதாலும் என்னை சிரிக்க வெச்சு நிம்மதி கொடுக்கும் புகழா நீ? யாரோ சூனியம் வெச்சுட்டாங்களா உனக்கு?” ஆற்றாமையுடன் ஆரம்பித்துகொஞ்சம் நக்கல் நிறைந்த குரலில் கேட்டாள் ஆயிஷா.

“இவனுக்கு சூனியமா? அவ்வளோ பெரிய அப்பாடக்காரா இவன்?” ஆயிஷாவுக்கு பதிலடி தந்தான் குமரன்.

“எல்லாம் என் நேரம்டா.. நீயெல்லாம் நக்கல் பண்ணுற நிலைமையில நான் இருக்கேன்” எரிச்சல் கொண்டவன் போல முகத்தை வைத்துக் கொண்டு சிரிப்பு நிறைந்த குரலில் பேசினான் புகழ். அவன் பேச்சில் இன்னமும் கொஞ்சமாய் ஒட்டியிருந்த துடுக்குத்தனம் வெளிவந்தது. அதை ஒரே நேரத்தில் குமரனும் ஆயிஷாவும் கண்டுகொண்டனர். அதை வாய்விட்டு சொல்லி அவனை பாராட்டி, அதற்கு மாறாக அவன் மீண்டும் கூண்டுக்குள் அடைந்து விட்டால் என்னாவது? என்ற அச்சத்தில் இருவரும் அதை சொல்லாமல் அவனை வம்பளந்து இயல்பாக்கிட முற்பட்டு கொண்டிருந்தனர்.

“கல்யாணம் ஆச்சா குமரா உனக்கு?” மெல்ல இயல்புநிலைக்கு வந்த புகழ் கேட்டான்.

“ஹும்கும்.. டேய்.. நீ ஒருத்தன் காணாம போனதும் யாழினி கல்யாணம் நின்னுச்சு, ஆயிஷா ஆளே மாறிபோயிட்டா.. இதுல எனக்கு கல்யாணம் தான் குறைச்சலா?” என்றுகேட்க வந்தவன் வார்த்தைகளை விழுங்கி கொண்டு,

“நீதான் வந்துட்டியே இனி பண்ணிடலாம்” என்றான்.

“நல்லா இருக்கே.. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டு போன மாதிரி , மூனு வர்ஷமா ஒருத்தி வெயிட் பண்ணுறேன்..நீங்க நூல்  விடுறீங்களா? அண்ணா கொன்னுடுவேன்” என்று மிரட்டியவளின் தலையை தட்டி சிரித்தான் புகழ்.

“லூசு…எப்போ இருந்து இப்படியெல்லாம் பேசக் கத்துக்கிட்ட நீ?”

“ஹ்ம்ம் உன்னை லவ் பண்ணதிலிருந்து தான்டா..”

“அடிப்பாவி என்கிட்ட கத்துக்க உனக்கு நல்ல விஷயமே கிடைக்கலயா டீ?”

“நிறைய இருக்கு..அதுக்கு நீ ஃபர்ஸ்ட் நல்லவனா மாறனும்” என்று கண்ணடித்தாள் ஆயிஷா.

“டேய் மறுபடியும் சொல்லுறேன்..நான் இங்கத்தான் இருக்கேன்..”என்றான் குமரன்.

“அய்யோ லூசு அண்ணா.. ரெண்டு பேரும் பல மாசத்துக்கு அப்பறம் மீட் பண்ணுறோம்.. இதைகூட பேசலன்னா என்ன? நீங்கத்தான் வயசுல பெரியவரா கண்டுக்காம இருக்கனும்”என்றாள் ஆயிஷா.

“மேடம், எனக்கு உன் ஆளுக்கும் ஒரே வயசுதான்.. ! நீதானேம்மா அவனை கூட்டிட்டு வரேண்ணா..இன்னைக்கு அடி பின்னிருங்கன்னு டைலாக் விட்ட” என்று பாவமாக குமரன் கேட்கவும் மலர்ந்து வாய்விட்டு சிரித்தான் புகழ்.

“டேய் குமரா.. நான் கூட நீ வளர்ந்துட்டன்னு நினைச்சேன்..ஆனா இப்பவும் பல்புதான் வாங்கிட்டு இருக்கியா நீ?”என்று கண்ணில் நீர் வரும் அளவிற்கு சிரித்தான். அவன் முகத்தில் இருந்த மலர்ச்சி மற்ற இருவருக்குமே இரட்டிப்பாய் மலர்ந்தது.

புகழுக்கு எதிர்மாறாக கன்னத்தில் கைவைத்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள் யாழினி. அவள் வீட்டின் வாசலில் அமர்ந்திருப்பதை காரில் இருந்தபடியே பார்த்த தமிழ், காரை வேகமாய் பார்க் செய்துவிட்டு அவளிடம் ஓடி வந்தான்.

“ஹேய் என்னடாம்மா? தலை வலிக்கிதா? உன் மருந்து சாப்பிட்டியா? என்னாச்சு?” அவளின் தலையை வருடியபடி கேட்டான் தமிழ். அவனுக்கு மட்டுமே தெரியும் எவ்வளவு கஷ்டப்பட்டு அவளை மீட்டுக் கொண்டு வந்தான் என்று! செத்து பிழைப்பது என்றால் என்னவென ஒரு மருத்துவனாக அவன் பலமுறை உணர்ந்திருந்தாலும், தனது உயிருக்கு உயிரானவள் அதே நிலையில் இருந்தபோதுதான் அந்த வலியை முழுமையாக உணர்ந்தான் தமிழ்.

அவனது பரிதவிப்பை உணர்ந்து கொண்டாள் யாழினி.

“ஐயோ தமிழ்.. நான் நல்லாத்தான் இருக்கேன்.. எனக்கு ஒன்னும் இல்ல!” அவனது தோளை பற்றினாள் அவள்.

“அ.. அவனைத்தான் காணோம்”

“எ..எவனை டார்லிங்?” அவளைப்போலவே தடுமாற்றமான தொனியில் கிண்டலுடன் கேட்டான் தமிழ்.

“நீ கூட்டிட்டு வந்தியே”

“ம்ம்..நான் புதுசா யாரையும் கூட்டிட்டு வரலயே”

“இப்போ என்ன ? நான் என் வாயல அவன் பெயரை சொல்லுறத நீ காது குளிர கேட்கனும். அவ்வளவுதானே? புகழ்.. புகழ்..புகழ்.. போதுமா?” சலிப்புடம் இவள் சொன்ன நேரம் புகழுக்குள் ஏதோ உள்ளுணர்வு.

“ஆயிஷா, தமிழுக்கு ஃபோன் பண்ணி நான் இங்க இருக்கேன்னு சொல்லனும்! தேடுவாங்க வீட்டுல”என்றான்.அவன் சொல்லி முடிக்கும்போதே திரையில் தமிழின் பெயர் தெரிய ஆயிஷா ஃபோனை எடுத்தாள்.

“ஹாய் தமிழண்ணா”

“..”

“என்ன அண்ணா பேச மாட்டுறிங்க?”

“அதெப்படிம்ம ஒன்னுமே ஆகாத மாதிரி கேட்குற? மூணு வருஷத்துக்கு அப்பறம் இன்னைக்குத்தான் பேசுற நீ?” என்றான் தமிழ்.

ஹாய் ப்ரண்ட்ஸ்..மீண்டும் ஹாஸ்பிட்டல் போகும் வேலை இருப்பதினால் கொஞ்சம் கம்மியா தரேன். மன்னிக்கவும்.

தொடரும்

Episode # 16

Episode # 18

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.