(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - மறைந்துவிடாதே  மாயா – 09 - லதா சரவணன்

Marainthu vidaathe Maaya

சிக்குண்ட மேகமென சிதைந்து போகிறேன் உன் கண்கள் எனும் நீல வானத்தில் ! நீ கசக்கி எறிந்த குப்பைக் காகிதமாய் என் வாழ்வை நின் பார்வை படாமல் கிழிந்து கிடக்கிறது. செந்நிற வானம் என் சிந்தனையை சிறகடித்துப் பறக்கச் செய்கிறது. உன் நினைவுகள் போலவே அசைந்தாடும் அலைகள், அதில் ஒற்னை படகென நீ உன் மடியில் இடம் தருவாயா ?!

குளிர்விழிகள் அழைக்க, தளிர் விரல்கள் தலைவருட இத்தனை நாள் உறங்காத உறக்கம் வேண்டும் உன் இதயம் பாடும் தாலாட்டில் நேற்றுவரை நம் காதல் பசுமையாய் இருந்த வரை, இதே கடற்கரை மணலில் கால்பதித்து சுண்டலும், குளிர்பானம் குடித்து செல்ல சீண்டல்களில் ஒரே குடைக்குள் நம் காதல் மழையின் சாரல் நனையாமல் இருக்க நீ அணைத்துக் கொண்ட நெருக்கம், அது விலகி மழை நின்று சால் அடங்கி, அதே நதிக்கரையில் இன்று நான் மட்டும் எள்ளி நகையாடுகிறது. அலைகள், நீ அருகில் இருந்த இடம் நாம் அருந்திய காலிபாட்டில்கள் இன்று எனக்குத் துணையாய் !

மாலை நேர வெய்யிலில் சுகமாய் சாய்ந்தபடியே இன்ஸ்பெக்டர் வீராவிடம் மாயாவின் வழக்கைப்பற்றிப் பேசிக்கொண்டு இருந்தார் லாயர் சண்முகம். நீங்க சொல்றதை வச்சிப் பார்க்கும் போது எனக்கும் மாயாவின் வழக்கில் இருந்த சந்தேகம் வலுப்பெறுகிறது லாயர் சார். அவங்களோட திடீர் மரணம் பாவம் கமலை ரொம்பவே பாதிச்சிருக்கு 

கமல் மாயா விஷயம் இப்போ ரீசண்டாத்தான் எனக்குத் தெரியும், மாயா தன்னோட சம்பாதியத்தில் வாங்கிய சொத்துன்னா அது அவங்களோட வீடுதான் அதை கிரையம் முடிக்கும் போதுதான் நான் மாயாவை முதலில் சந்தித்தது, அந்த வீட்டை அவங்க அத்தை பேரில் ரிஜிஸ்டர் பண்ண சொன்னாங்க நான்தான் அவங்க பேரில் ரிஜிஸ்டர் பண்ணச்சொல்லி அட்வைஸ் பண்ணினேன். அவங்களை சேர்ந்தவங்களுக்கு எல்லாமே மணி மோட்டிவ்தான். ஆனா கமல் கூட அவங்க லைப்பை ரொம்பவும் எதிர்பார்த்தாங்க. பெங்களூர் போறதுக்கு முன்னாடி என்னைச் சந்தித்து கமல் பேரில் அந்த வீட்டை எழுதி வைக்க சொன்னாங்க, தான் முதலில் வாங்கிய சொத்து அது தன்னோட கணவருக்கு அன்பு பரிசா இருக்கணும் கல்யாணத்திற்கு முதல் நாள் அதை நான் அவருக்குத் தரணுமின்னு டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணச் சொன்னாங்க அதில் கையெழுத்தும் போட்டு பிரதி தயாரா இருக்கு 

ம்.. சரி லாயர் ஸார் பர்தரா நான் பண்ணப்போற இன்வெஸ்டிகேஷனுக்கு உங்க உதவி தேவைப்படும் அப்போ இந்த டாக்குமெண்ட்டும் கண்டிப்பா அவங்க கேஸில் நான் எல்லாவித ஒத்துழைப்பும் தரத் தயாரா இருக்கேன், விடைபெற்றுக் கொண்ட வீராவை வாசல் வரை வந்து வழியனுப்பிய லாயர் சண்முகத்தின் கண்களில் இரண்டு வீடுகளுக்குத் தள்ளியிருந்த வீட்டில் இருந்து வெளிப்பட்ட வினிதா கண்ணில் பட்டாள். இது மாயாவோட செகரட்டரி தானே இங்கே எங்க ? இருவரின் பார்வையும் வினிதாவின் மேல் விழ, வினிதாவின் படபடப்பு சந்தேகத்தை உண்டு பண்ணியது வீராவிற்கு !

அது யார் வீடு லாயர் ஸார்.

மிஸ். நிரஞ்சனான்னு ஒரு கர்நாடிக் டான்ஸர் இன்பேக்ட் மாயாவுக்கு முன்னாடி லீடிங்கிலே இருந்தவங்க இப்போ கொஞ்சம் வாய்ப்பு கம்மிதான் ஏதோ டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கப் போறேன்னு ஒரு லேண்ட் விஷயமா என்கிட்டே கூட பேசினாங்க ஆனா மாயாவோட செகரட்டரிக்கு இங்கே என்ன வேலை இருக்க முடியும்.

மாயா கேஸில் நிறைய மர்மங்கள் இருக்கு நான் முதலில் வினிதாவை தொடர்ந்து போகச் சொல்லி ஒரு பெண் காவலரை ஏற்பாடு செய்யறேன் உங்களுக்கு இது தொடர்பான விவரங்கள் தெரிந்தாலும் எனக்கு தொடர்பு கொள்ளுங்கள் வருகிறேன் முடுக்கிவிடப்பட்ட வேகத்துடன் தன் புல்லட்டை கிளப்பினார் இன்ஸ்பெக்டர் வீரா.

னால் அவருக்கு முன்பாகவே வீராவிற்காய் காத்திருந்தாள் வினிதா. மேலேறிய புருவத்துடன், சொல்லுங்க என்ன விஷயம் ?

ஸார் நான் உங்ககிட்டே இன்னும் சில விவரங்களை பகிர்ந்து கொள்ளணும் ?! 

அடுத்த பொய்யா ? 

பொய்யா என்ன ஸார் சொல்றீங்க எனக்குப் புரியலை ?

நான் உங்கமேல சந்தேகப்படறேன் வினிதா மாயாவின் கொலையில உங்களுக்கும் பங்கு இருக்குமோன்னு ?!

நான் தப்பு செய்தப்போ வராத சந்தேகம் இன்னைக்கு எல்லாத்தையும் சொல்லணுமின்னு வந்து நிக்கும் போது, நம்பிக்கை வரலை இது இயல்புதான் சரி விடுங்க நீங்க என்னை சந்தேகப் பட்டாலும் சரி மாயாவோட நம்பிக்கையில்லாத பட்டியில் ஆரம்பத்தில் நானும் தான் இருந்திருக்கிறேன். ஒரு விதத்தில் சொல்லுணுமின்னா அவங்களை வேவு பார்த்திடத்தான் நான் வேலையிலேயே சேர்ந்தேன். உங்களுக்கு டான்ஸர் நிரஞ்சனாவைப் பற்றி தெரிந்திருக்கும் அவங்களோட வற்புறுத்தலின் பேரிலும், வறுமைக்காகவும் தான் மாயாவிற்கு எதிராக நான் வேலை செய்ய வேண்டியதாய் போயிற்று, ஆனா நாளாக நாளாக அவங்களோட நல்ல குணமும், என்னோட வாழ்க்கை மேல அவங்க கொண்ட அக்கறையும் என்னை மாற்றிவிட்டது. நிரஞ்சனாவுக்காக நான் வேலை செய்ய முடியாதுன்னு சொன்னதும் அவங்களோட அடியாள் விக்டர் என்னை மிரட்ட ஆரம்பித்தார். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.