(Reading time: 5 - 10 minutes)

16. தொடர்கதை - அவளுக்கென்று ஒரு மனம் - அனிதா சங்கர்

aeom

ந்த சண்டையை பார்த்து சதிஷும்,நித்தியும் சிரித்துக் கொண்டிருந்தனர்.அவர்களது சண்டை அவர்களை ரசிக்க வைத்தது,கவியுடன் சண்டை இட்டுக் கொண்டிருந்த அஸ்வின் அவர்களுக்கு சிறு வயது அஸ்வினை ஞாபகப்படுத்தினான்.சிறுபிள்ளை போல கவியுடன் வார்த்தை சண்டைப் போட்டுக் கொண்டிருந்தான்.

அதை அவர்கள் மட்டும் ரசிக்கவில்லை ஜனார்த்தனனும் தான் ரசித்தார்.அவர்களது அந்த சண்டை அவருக்கு ஒரு நிறைவை தந்தது.அதுவும் கவி அவருக்கு யார் என்று தெரிந்த பின்பு அவருக்கு அவளது மேல் இன்னும் பாசம் தான் பெருகியது.

பர்வதம்மாள் அஸ்வினை அழைக்கும்  குரல்க் கேட்டு அவர்களது சண்டை நின்றது.

அவன் உள்ளே செல்ல,அதுவரை தங்களை ரசித்துக் கொண்டிருந்த சதிஷிடம் சென்றவள்,

“என்ன அண்ணா,அந்த அந்நியன் கிட்ட என்ன மாட்டி விட்டுட்டு..,நீங்க ரெண்டுபேரும் தப்பிச்சிட்டீங்க..”என்று அவர்களிடம் சென்று சண்டையை ஆரம்பிக்க

அவளிடம் சரண் அடைந்த சதீஷ் “ அம்மா பரதேவதையே வாம்மா உள்ள போலாம்..”என்று அவளை அழைத்துச் சென்றான் சதீஷ்.

அவர்கள் உள்ளே சென்ற பொழுது எதிர்க் கொண்ட ஜானகி ,”மலர் அஸ்வினுக்கு ஒரு போன்கால் வந்தது அதனால அவன் முக்கிய வேலையா அஸ்வின் கிளம்பறான் அவனுக்கு எதாவது வேணுமான்னு போய் பாரு..”என்று அவர் கூற அவள் அங்கு தன்னையே முறைத்துக் கொண்டிருந்த ஆனந்தியைப் பார்த்தாள்.

அதைக் கண்டுக்கொண்ட ஜானகி “போமா இந்த ப்ரூட் சாலட்ட அவனுக்கு கொடுத்துடு..”என்று  என்று கொடுக்க அதை  எடுத்துக் கொண்டு தங்களது அறையை நோக்கி சென்றாள் கவி.

அவர்களது ரூமில் அவன் பரபரப்பாக கிளம்பிக்கொண்டிருந்தான் அஸ்வின்.கதவை அவள் தட்டிவிட்டு காத்திருக்க.,நம்ப வீட்ல யாருடா நம்ப ரூமுக்குள்ள அனுமதிய கேக்குறது என்று யோசித்தவன் அனுமதிக் கொடுக்க உள்ளே வந்தவளை பார்த்தவனுக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவளுக்கும் தான இந்த ரூம் சொந்தம் தன்னோட ரூமுக்குள்ள வரதுக்கு அனுமதி கேட்டுட்டு நிக்குது லூசு  என்று தனக்குள்ளே முனகிக்கொண்டே அவளை பார்த்தும் பார்க்காதது போல தனது வேலையை செய்ய ஆரம்பித்தான்.

தன்னை கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்க்கும் அவனைப் பார்த்தவளுக்கு கோபம் தான் வந்தது.இவனுக்கு ஜானகி அம்மா கொடுத்த இந்த ப்ரூட் சாலட் ட அவனுக்கு கொடுக்காம நாமலே சாப்பிட்டா என்ன என்று அவள் யோசித்துக் கொண்டு இருக்க அவளது அருகில் அவனது முகத்தை கண்டவள் சுதாகரிப்பதற்குள் அவளது கையில் இருந்த பௌல் அவனது கைகளுக்கு மாறியிருந்தது.அதை வாங்கி சாப்பிட்டவன் சாப்பிட்டு முடித்துவிட்டு அவளது கையில் மீண்டும் அந்த பௌலை திணித்துவிட்டு அவனது அலுவலகத்துக்கு கிளம்பி சென்று விட அவனை தனது மனத்துக்குள்ளே தீட்டி தீர்த்தாள்.

அதன் பிறகு அவளுக்கு நித்தியுடன் பேசிக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருந்தது.

சரியன் விடை பெற துடிக்கும் மாலை நேரம் தனது காரை இயக்கிக் கொண்டிருந்தவன் கண்களுக்குள் கவியின் பிம்பமே வந்துக் கொண்டிருந்தது.அவளை பற்றியே யோசித்துக் கொண்டு வந்தவன் அவள் தங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் பூங்காவின் உள்ளே தனியாக செல்வதை பார்த்தவன் தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.

அவன் காரை பார்க் செய்து விட்டு வருவதற்குள் அவள் அவனது கண் பார்வையில் இருந்து மறைந்து விட்டாள்.

ஒரு வழியாக சில நிமிட தேடலுக்கு பின்பு அவளை கண்டுபிடித்தவன் அவளுடன் இருந்தவர்களைப் பார்த்துக் கோபம் கொண்டான்.

அவனது கோபம் அவளை நோக்கி அவனை செல்ல வைத்தது.

அவள் அருகில் சென்று அவளது தோளை தொட்டு திருப்பியவன் அவள் என்ன என்று உணர்வதற்கு முன்பே அவளது கன்னத்தை தன் கைகளால் தண்டித்திருந்தான்.

அவனது இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராதவள் அவனது அடியில் நிலை தடுமாறி விழப் போக அவளை தாங்க வந்த ஆகாஷின் கைகளில் அவளை சிக்க விடாமல் அவனது கைகளிலேயே அவளை தாங்கி தன்னுடன் அனைத்துக் கொண்டான்.

கவி நிலையாக நின்ற அடுத்த வினாடி ஆகாஷ் அஸ்வினை அறைந்திருந்தான்.

ஆகாஷ் கோபமாக அவனை அடிக்க கை ஓங்கிய வேளையில் அவர்களது குறுக்கே வந்து நின்றார் நாராயணன்.

அவர் வந்ததும் தனது கையை கீழ் இறக்கினான் அஸ்வின்.

"பாவம்ப்பா அவ சின்னப் பொண்ணு அவள அடிக்காதப் பா.."என்று அவர் சொல்ல

"எதுக்கு தாத்தா அவன் கிட்ட கெஞ்சுரிங்க...,என்ன தையிரியம் இருந்தா எங்க வீட்டுப் பொண்ண அடிப்ப.."என்று அஸ்வினைப் பார்த்து ஆகாஷ் கேட்க

அவனை ஒரு பார்வை பார்த்த அஸ்வின்,”அவ உங்க வீட்டு பொண்ணுஇல்ல அவ என்னோட மனைவி,அவகிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு உங்களுக்கு தான் உரிமை இல்ல..”என்றுக் கூறியவன் அதற்கு மேல் அங்கு ஒரு நிமிடம் கூட நிற்காமல் அவளை அழைத்துக் கொண்டு சென்றான் இல்லை அவளை இழுத்து சென்றான்.அவளை காரின் பின்புற கதவை திறந்து உள்ளே தள்ளிவிட்டவன்,தனது வீட்டை நோக்கி காரை எடுத்தான். உள்ளே விழுந்த கவிக்கு கண்களில் கண்ணீர் வழிந்ததே தவிர அவள் ஒன்றும் அவனிடம் பேசவில்லை.

அவள் அழுவது பிடிக்காமல் தான் அவளை அடித்ததும் ஞாபகம் வர தனது கோபம் அனைத்தையும் காரில் காண்பித்தான்.

வீட்டை அவன் அடைய பின்னாலே சதீஷின் பைக்கும் வந்தது.காரை நிறுத்தியவன் பின்னால் அமர்ந்திருந்த அவளை காரின் கதவை திறந்து இறக்கியவன்  அவளை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

மாலை சிற்றுண்டிக்காக அனைவரும் ஹாலில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருக்க,இவன் புயல் என நுழைந்த வேகத்திலும் கவியின் கை விரல் பதிந்த கன்னமும்,கண்ணில் நின்ற நீருமே ஜனார்த்தனன் தாத்தாவிற்கு எதுவோ நடந்துள்ளது என்று அறிவித்தது.

aeom

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1099}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.