Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Whats up @ Chillzee!

<h5><b>All Short Stories are categorized for your ease of use!</b></h5>
All Short Stories are categorized for your ease of use!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 3 - 6 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 01 - சகி - 5.0 out of 5 based on 2 votes
Change font size:

தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 01 - சகி

Uyiril kalantha urave

நெருங்கிய சில ஆரவாரங்கள் மட்டும் மனதிற்கு என்றும் அமைதியை தருகின்றன.அலைகள் வீசும் ஆழ்கடலை வெறும் தேகக்கண்களால் காண்போருக்கு அது அழகு!!அதுவே ஆழ்ந்த அமைதியான சூழலில்,ஆர்ப்பரிக்கும் ஆழியை அன்போடு காண்பவருக்கோ,அது எண்ணற்ற உணர்வுகளை ஏற்படுத்திவிடுமல்லவா??உணர்வுகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.இன்பம் வரும் சமயம் மனமானது குதூகலிக்கும்.துன்பத்திலோ கண்ணீர் சிந்தும்.இருச்சூழலிலும் நிகழும் பொதுவான நிகழ்வுதான் என்ன?இருச்சூழலிலும் மனம் பிரியம் கொண்ட நபர் ஒருவரின் அருகாமையை தேடிக் கொண்டிருக்கும்.இது யாவருக்கும் சமமான உணர்வே...!காதலும் அதுபோலவே,திக்கற்ற இருட்டில் வழிக்காட்டும் சிறு வெளிச்சம் மனிதனை எவ்வாறு அடைய வேண்டிய திசை நோக்கி இழுக்கிறதோ!காதலும்,வெறுமை ததும்பிய இருதய பாலைநிலத்தில் ஊற்றெடுக்கும் நதிநீராய் அமைகிறது!சிலர் அதில் நீந்தி மகிழ்கின்றனர்.சிலரோ,அதை மண்போட்டு மூடி புதைக்கின்றனர்.ஆனால்,இறைவன் அனைத்துச் சூழலிலும் மனித உள்ளத்திற்கான உறவுகளை மட்டும் அவனுக்கு அளிக்காமல் விடுவதில்லை என்பது மட்டும் நிதர்சனமான உண்மையாகிறது!!

பொன்னிறமான விளக்கொன்று உறுதியான அக்கரங்களால் ஔிப்பெற்றது.தீக்குச்சி உரச,பற்றிய நெருப்பானது,அக்குச்சியின் தலைக்கனத்தை ஒழித்து,நெய்யில் ஊறிய பஞ்சுத்திரியை எரித்து,அவ்வறை முழுதும் ஔியை நல்கியது.தனது இருக்கரங்களையும் நெஞ்சின் நேரே குவித்தவன்,விழிகள் மூடி சிரம் தாழ்ந்து நின்றான்.யார் அந்த இறைவன்??மனம்,மெய்,வாக்கு மூன்றும் தலைவணங்கும் சிறப்பிற்குரிய அத்தெய்வம் தான் யார்??ஆம்...!அது அவனதுத் தாய்!!!புன்னகைத் ததும்பிய அவர் முகமே,காண்கையில் கோடி ஆசிகளை வழங்கி செல்லும்!!மூடி இருந்த விழிகளைத் திறந்தவன்,அவர் பாதத்தினைத் தீண்டி,தன் மார்போடு ஒற்றிக் கொண்டான்.

எத்தனையோ இன்னல்கள்,அவமானங்கள்,அநியாயங்கள் தாண்டி இன்று அவனை ஒரு உறுதியான மனிதனாய் செதுக்கினார்.ஆற்றிய நற்கடன்களுக்கு போற்றி பதில் செய்யும் முன்பே,காலம் அவரை தன் உலகத்திற்கு இழுத்துச் சென்றது.அதற்கு என்னத் தெரியும் தாய்-மகன் உறவைக் குறித்து!!!இன்றளவும் கடனாளியாகவே உழல்கின்றான்.சமூதாயத்தில் அவனுக்கு அங்கீகாரம் வாங்க,எண்ணற்ற துயர்களைச் சந்தித்தவர் அவர்.ஆனால்,அவருக்காக அவன் யாதும் செய்யவில்லை என்ற எண்ணம் அவருக்குள்!!வாழ்வின் தர்மங்களை ஆழமாய் போதித்த ஆசான்...இன்றும் அவனை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் ஓர் ஆன்மாவாய்!!

சக்கர நாற்காலியில் அமர்ந்தப்படி தன் கைவிரலோடு பின்னிப் பிணைந்த கயிறை அவர் அசைக்க,அருகிலிருந்த மணி அசைந்து சப்தம் வெளியானது.

சிறிது நேரத்திற்கெல்லாம் ஓடி வந்தன இருக்கால்கள்!!

"ஐயா!என்னங்கய்யா வேணாம்?"-பணிவுடன் கேட்டான் சேவகன்.விழிகளினால் அவர் சைகை காட்ட,அருகிலிருந்த கண்ணாடி தம்பளிரில் இருந்த நீரை எடுத்து மெல்ல அவருக்குப் புகட்டினான்.

"வேற எதாவது வேணுங்களா?"-'இல்லை!'என்று அசைந்தது அவர் விழிகள்.

"சரிங்க!"-பணிவுடன் விலகிச் சென்றான் அவன்.தனிமையில் இருந்தவரின் விழிகள் கண்ணீரை சுரந்தன.விழிகளுக்கு ஏதேதோ பிம்பங்கள் நிழலாடின.மனதுள் ஏதோ ஒன்று எரிமலையாய் வெடித்து குமுறியது.செய்த பாவம்...யாரை விட்டது???இவ்வளவு தானா தண்டனை??இல்லை...இன்னும் உள்ளது!!

'த.அசோக் குமார்;ஐ.ஏ.எஸ்.'என்ற பலகை மிக கர்வமாக அம்மேசையில் வீற்றிருந்தது.மிக சீராக,நேர்த்தியாக இருந்த அவ்வறை சுவரில் திருவல்லிக்கேணி இராஜகோபுரம் முத்திரை பதிக்கப்பட்டு 'வாய்மையே வெல்லும்!'என்ற எழுத்துகள் செதுக்கப்பட்டிருந்தன.

கதவுத் தட்டப்படும் ஒலி செவிகளில் விழவும்,மடிக்கணினியில் ஏதோ பணியாய் இருந்தவன்,விழி எடுக்காமல்,"வாங்க!"என்றான்.

உள்ளே சற்றே வயது முதிர்ந்தவர் பணி உடையில் பிரவேசித்தார்.

"சார் டீ!"-என்று தேநீர் கோப்பையை மேசை மீது வைத்து நின்றார் அவர்.

"தேங்க்ஸ் சுப்பிரமணி!"என்றான் அவன்.

"சார்...!அப்பறம்?"

"என்ன?"

"லீவு கேட்டிருந்தேனே!பொண்ணு கல்யாண விஷயமா!"-சற்றே நெளிந்தார் அவர்.அவர் முகத்தைப் பார்த்து மெல்ல புன்னகைத்தவன்,தனது மேசை டிராவிலிருந்து ஒரு கவரை எடுத்துத் தந்தான்.

"ஒரு மாத சம்பளத்தோட லீவு சேங்க்ஷன் பண்ணி கொடுத்திருக்கேன்!பொண்ணு கல்யாணத்தை நிம்மதியா பண்ணுங்க!"

"ரெம்ப தேங்க்ஸ் சார்!"-நன்றியுடன் அதனை வாங்கிக் கொண்டார் அவர்.

"ஒரு நிமிஷம் இருங்க!"-அவரை தடுத்தவன்,தனது காசோலை புத்தகத்தை எடுத்து,இரு இலட்சங்களுக்கு காசோலை எழுதித் தந்தான்.

"வேணாம் சார்!"-பதறினார் அவர்.

"அட!பிடிங்க!"

"இல்லை சார்!இதுவே பெரிய உதவி பண்ணி இருக்கீங்க!"

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4 
  •  Next 
  •  End 

About the Author

Saki

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 01 - சகிmadhumathi9 2017-09-16 07:54
:clap: Arumaiyaana thodakkam. waiting to read more (y) :thnkx: 4 this epi. Adutha epiyai eppothu koduppinga?
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 01 - சகிsaaru 2017-09-16 07:15
Nice start sahi.. atanai edirparpum ashok ku porundude
Ashok sivanya nice
All da best sahi :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 01 - சகிAarthe 2017-09-15 19:02
Lovely start ma'am :clap:
Ashok-Shivanya wow
Best wishes for your new series :-)
Looking forward ;-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 01 - சகிAnubharathy 2017-09-15 16:11
Wow. Nice start. :clap: Appo collector sir um Maths teacher um thaan hero-heroine ah? :dance: Interesting. Mazhaikku innum konja naal leave vitrukkalaam :grin: . Waiting to read upcoming episodes :) . Best of luck and all the best for your story. :thnkx: Thankyou. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 01 - சகிApoorva 2017-09-15 11:28
interesting start
Reply | Reply with quote | Quote
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

Mor


AN


Eve
09
MKK

SIP
-

NTES
10
NS

OTEN
IPN

PEPPV
11
SaSi

NAU
PM

YMVI
12
MNP

VKV
-

-
13
TAEP

AEOM
-

MvM
14


TPEP
Mor

AN


Eve
16
MKK

TIUU
-

NTES
17
UNES

MOVPIP
IPN

PEPPV
18
SPK

MMU
PM

YMVI
19
SV

VKV
-

IEIK
20
KMO

Ame
-

MvM
21


TPEP* Change in schedule / New series

* - On temporary break

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Go to top