(Reading time: 13 - 25 minutes)

சற்றே வெறுப்பான அவர்,'நங்'கென்று அவள் தலையில் செல்லமாய் ஒரு குட்டு வைத்து எழுந்துச் சென்றார்.

"பா!அம்மா அடிக்கிறாங்கப்பா!"

"எனக்கு எதுக்கும்மா வம்பு?உன் பக்கம் பேசுனா அவ திட்டுவா!அவப்பக்கம் பேசுனா நீ அழுவ!கல்யாண ஆன ஆம்பளைங்க ரொம்ப பாவம்!என் மருமகன் என்ன கஷ்டப்படப் போறானோ!"-மெல்லியக் குரலில் யாரும் கேட்காதவண்ணம் கூறினார் அவர்.

"என்ன சொன்னீங்க?"

"ஆ...ஒண்ணுமில்லை கண்ணா!அப்பாக்கு வந்து இந்த செமினாருக்கு ரெடி பண்ண கொஞ்சம் ஹெல்ப் பண்றீயா?"

"இதோ வந்துட்டேன்!"

"தப்பிச்சோம்டா சாமி!"நிம்மதி பெருமூச்சுவிட்டார் உதயக்குமார்.இல்லத்திற்கு ஒரே மகள்!!அரசு கல்லூரி ஒன்றில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரியும் உதயக்குமாருக்கு மகளாய் உதித்த ஒரே கன்னிகை சிவன்யா!அரசு பள்ளி ஒன்றில் மேல்நிலை வகுப்புகளுக்கு கணித ஆசிரியை!!எதிலும் ஒரு கலைநயம்.விளையாட்டுத்தனம்!!எவ்வளவு தான் கடினங்கள் வந்தாலும்,சிறு புன்னகையில் அந்தத் துன்பத்தினையே மதிமயங்க வைத்துவிடுவாள்.இதுநாள் வரை அவள் விழிகள் பெருந்துயரில் மூழ்கி கண்ணீர் சிந்தியதில்லை.காரணம்,எந்தத் துயரையும் அவள் தனது இதயத்திற்கு கொண்டு சென்றதில்லை.எந்த ஒரு புகழையும் தன் சிரசில் அவள் ஏற்றதில்லை.எந்த ஒரு பொய் அன்பிற்கும் அவள் மதி மயங்கியதில்லை.தனக்கென ஒரு கட்டுப்பாட்டினை அவள் உருவாக்கி,தன்னை தானே சிறைப்பிடித்ததில்லை.ஆனால்,தனது எல்லைக்கோடுகளையும் அவள் என்றுமே மீறியதில்லை.

"சிவா!வந்து அம்மாக்கு ஹெல்ப் பண்ணு வா!"-சமையலறையிலிருந்து குரல் வந்தது.

"கூப்பிட்டாங்களே!"

"போம்மா!அப்பறம் அதுக்கு வேற திட்டப்போறா!"

"ஐயோ!"-சிணுங்கியப்படியே எழுந்துச் சென்றாள்.

"என்னம்மா?"

"காய்கறியை கட் பண்ணி தா!"-முகம் சுழித்தப்படி காய்கறிகளை நறுக்கினாள் அவள்.

"ஏ...சின்ன சின்னதா கட் பண்ணுடி!"-திருத்தினார் மீனாட்சி.

"இது.வேறயா?"

"அம்மாடி!நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டு போனா என்னம்மா பண்ணுவ?"-அது ஏனோ புதல்வியை மௌனமாக்க,புகும் வீட்டின் கதையை இழுக்கின்றனர் தாய்மார்கள்!விவாஹத்திற்கு முன் அதுப்போன்ற பேச்சையே விரும்புவதில்லை சில பெண்கள்!!

"நான் நல்லா சமைக்க தெரிந்தவனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்!"

"அது சரி!!அப்போ நீ கடைசிவரை இங்கே தான் இருக்கணும்!"

"ஏன் இருந்துட்டுப் போறேன்!"

"இரு!இரு!எனக்கும் காய்கறி கட் பண்ற வேலை மிச்சம்!"-என்ற பதிலில் சிரித்துவிட்டாள் சிவன்யா.

"ம்...உனக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு!அப்பாக்கிட்ட சொல்லி மாப்பிள்ளை பார்க்க சொல்லணும்!"

"அதெல்லாம் நானே பார்த்துப்பேன்!"

"என்னடி சொல்ற?ஏற்கனவே பார்த்து வைத்துவிட்டாயா?"-அதிர்ந்துப்போய் கேட்டார் மீனாட்சி.

"ச்சீ...இல்லம்மா!இனிமே யாராவது மாட்டுவாங்க!"

"வர வர...!ரொம்ப துளிர் விட்டாச்சு!கவனிக்கிறேன் இரு!" சில்லென்ற மழைத்துளியாய் ஒலித்த உரையாடல்,கொதித்தெழும் எரிமலையாய் உருமாறினால்???

"மா!உங்களுக்கு லவ் மேரேஜ் பிடிக்குமா?அரெஞ்ச் மேரேஜா??"காய்கறிகளை நறுக்கிக் கொண்டே வினா எழுப்பி்னாள் சிவன்யா.

"என்னடி?கேள்வி எல்லாம் பலமா இருக்கு?"

"சொல்லும்மா!"

"லவ்வாம் லவ்வு!வீட்டில் பார்த்து வைக்கிற கல்யாணம் தான் என்னிக்கும் நல்லது!"

"ஏன் அப்படி சொல்றீங்க?"

"ம்...பையன் யார் என்னன்னு தெரியாமல்,அவன் எப்படிப்பட்டவன்னு தெரியாமல்,அவன் பொண்ணை சந்தோஷமா வைத்துப்பானான்னு தெரியாமல்....பொண்ணைத் தூக்கிக் கொடுக்கிற பெரிய மனசு எனக்கு இல்லைம்மா!இந்தக் காதல்,கத்திரிக்காய் எல்லாம் எப்படி தான் வருதோ! "-முகம் சுழித்தார் மீனாட்சி.தற்சமயம் பதில் பேசுதல் வீண் விவாதத்தை விளைவிக்கும் என்று அறிந்த சிவன்யா,மனதிலிருந்து எழுந்த கருத்துக்களை அப்படியே விழுங்கிக் கொண்டாள்.

"சரி....நீ போ சிவா!அப்பா வேலை இருக்குன்னு சொன்னார்ல!"

"ம்..."-மௌனமாய் வந்தவளின் எண்ணங்கள் எங்கெங்கோ தறிக்கெட்டு ஓடின.சிலையென வந்து தந்தையின் அருகே அமர்ந்தவளை,ஒரு கேள்வியுடன் பார்த்தார் உதயக்குமார்.

"பாப்பா!"

"என்னப்பா?"-என்றாள் சட்டென நினைவு வந்தவளாய்!!

"என்னம்மா?என்ன யோசனை?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.