(Reading time: 13 - 25 minutes)

"பரவாயில்லை...என் தங்கச்சிக்கு நான் கொடுக்கிற சீரா இருக்கட்டும்..வாங்கிக்கோங்க!"

"இல்லை சார்!"

"பிடிங்க!"-என்று அவர் சட்டைப்பையில் திணித்தான் அசோக்.

"நான் வாழ்த்தினேன்னு சொல்லுங்க!"

"ரொம்ப நன்றி சார்!"

"நன்றி எல்லாம் இருக்கட்டும்!சீக்கிரம் கிளம்புங்க!மழை வர மாதிரி இருக்கு!"

"சரிங்க சார்!"

"அப்பறம்,இன்ஸ்பெக்டர் இருப்பாரு!அவரை வர சொன்னேன்னு சொல்லுங்க!"

"சரிங்க சார்!"-நன்றியுடன் விடைபபெற்றார் சுப்பிரமணி.

அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உள்ளே நுழைந்தார் காவல்துறை ஆய்வாளர்.

"சார்!"-காவலர்கள் தொனியில் மரியாதை செலுத்தினார்.

"இந்த மண்சரிவை போய் பார்க்க சொன்னேனே!"

"பார்த்தோம் சார்!சரிவு கொஞ்சம் மோசமா தான் இருக்கு!"

"என்ன ஆக்ஷன் எடுத்தீங்க?"

"அங்கிருக்கிற மொத்தம் நூறு குடும்பங்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி இருக்கோம் சார்!சரிவை சரி படுத்த எல்லா முயற்சியும் பண்ணிட்டு இருக்கோம்.நான்கு நாட்களில் எல்லாம் இயல்புநிலைக்கு மாறிடும் சார்!"-அவன் சிறிது நேரம் மௌனமாய் ஏதோ சிந்திக்கலானான்.

"சரி...நீங்க போங்க!மறக்காம எனக்கு ரிபோர்ட் கொடுங்க!"

"எஸ் சார்!"-என்று வெளியேறினார் அக்காவலர்.

"நான்கு நாட்கள் ஆகுமா?"-மனதுள்ளே சிந்தித்தான் அவன்.

"மழை வேற விடாம பெய்யுது!"-என்றெண்ணியப்படி,தன் அலுவலக தொலைப்பேசியை உபயோகப்படுத்தி யாரையோஅழைத்தான்.

"கலெக்டர் பேசுறேன்!ஸ்கூல்,காலேஜ்க்கெல்லாம் இரண்டு நள் லீவு அனௌன்ஸ் பண்ணிடுங்க!"என்று சில விவரங்களை கூறி இணைப்பைத் துண்டித்தான்.

அடுத்த சில நிமிடங்களுக்கு எல்லாம்...

"பலத்த மழை காரணமாக உதகையின் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!"என்ற செய்தி ஔிப்பரப்பானது.அலுவலகத்தில் இருந்த அத்தொலைக்காட்சியின் வழியே அச்செய்தியை கண்டவன் இதழ் மலர்ந்தது.ஒரு காலத்தில் மழைக்காலம் தொடங்கிவிட்டால் போதும்,விடுப்பு வராதா என்று தொலைக்காட்சி பெட்டி முன் அமர்ந்துவிடுவான் அவன்.அது ஏனோ மற்ற விடுப்புகளைக் காட்டிலும் மழையினால் ஏற்படும் விடுப்பானது அனைத்தும் மாணவர்களுக்கு தனியொரு ஆனந்தத்தை அளிக்கிறது.அது எந்த அளவு என்றால்,உடல் நலக்குறைப்பாட்டினால் துன்பப்பட்டவர் கூட அச்செய்தியை செவிக்கேட்டதும் எழுந்து அமர்ந்துவிடுவர்.மகிழ்ச்சிகரமான பால்ய பருவம்!!தாயிடம் பெரும் உபதேசங்கள்!அவர் ரசிக்கும் சிறு சிறு சேட்டைகள்!!பள்ளிக்கு செல்ல அடம்பிடிக்கும் தருணம்!அன்னை கரத்தினால் உண்ணப்படும் அமுதம்!இவையனைத்தும் தொலைந்துப் போன வலி,இவையனைத்தும் திரும்பாதா என்ற ஏக்கம் இரண்டும் அவன் விழிகளில்!!மிக ஆழமான வலி!!

"....!ஸ்கூல் லீவு விட்டாச்சு!"-கைகளை உயர்த்தி சிறு பிள்ளையை போல் கத்தினாள் அவள்.

"எருமை மாடு!அறிவில்லை!இப்படியா கத்துவாங்க!"-அருகில் அமர்ந்திருந்த தாயின் அர்ச்சனை அவள் செவிகளை அடையவில்லை.

"அந்தக் கலெக்டர் யாரா இருந்தாலும்,எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்!"-மனமார வாழ்த்தினாள்.

"எங்கே கலெக்டர் பெயரை சொல்லுப் பார்ப்போம்!"

"அது யாருக்குத் தெரியும்?"அவள் குரல் மெல்ல குறைந்தது.

"கலெக்டர் பெயரே தெரியலை!நீ எல்லாம் என்னப் பாடம் சொல்லிக் கொடுத்து,பசங்க எப்படி படிக்கிறாங்களோ!"

"மா...!நான் மேக்ஸ் டீச்சர்மா!அதுவும் 12-க்கு,மரியாதை கொடு சொல்லிட்டேன்!"

"ஆமா!இதுக்கு ஒண்ணும் குறை இல்லை.மேக்ஸ் பிடிக்கும்னா அறிவாளியா இருப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்!நீ தான் அதை கிலோ என்ன விலைன்னு கேட்பியே!"-என்ற தாயை சிறு பிள்ளையாய் முறைத்தாள் சிவன்யா.

"என்ன முறைப்பு?"

"ஐயயே...!அங்கே என்ன அம்மாவுக்கும்?பொண்ணுக்கும்?மாமியார் மருமகள் மாதிரி-ல சண்டைப் போடுறீங்க?"-ஏதோ புத்தகத்தில் மூழ்கி இருந்த அவள் தந்தை உதயக்குமார் சற்றே விழிகளை உயர்த்தி கூச்சலிட்டார்.

"ம்...பாவம் இவளுக்கு மாமியாரா வரப் போறவங்க!அம்மாக்கிட்டயே என்ன சண்டைப் போடுறா!இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு என் மாப்பிள்ளை என்னப்பாடு படப்போறானோ!"

"பா!பாருங்கப்பா!அம்மா என்னைத் திட்டுறாங்க!"-தந்தையை சிபாரிசுக்கு அழைக்க,

"மீனாட்சி...!நீயாவது அமைதியா இரும்மா!"அவள் தந்தையிடமிருந்து சிபாரிசு கடிதம் வந்தது.

"ஆமா...!என்னையே சொல்லுங்க!"-சலிப்புற்ற தன் தாயை ஒழுங்கேற்றினாள் சிவன்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.